ப்ளீஸ் உதவுங்கள்.ஒன்றரை மாத குழந்தைக்கு சளி

என் மகன் பிறந்து இன்றுடன் 53 நாட்கள் ஆகின்றன்.நான் அவனுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுத்து வருகிறேன்.அவனுக்கு மிகவும் சளி பிடித்திருக்கிறது.பால் குடிக்க முடியவில்லை.மூச்சு விடவும் சிரமப்படுகிறான்.நெஞ்சில் சளி இருப்பது போல் தெரிகிறது.டாக்டரிடம் காண்பித்தும் குறையவில்லை.என்ன செய்வதென்று தெரியவில்லை.தோழிகளே தயவுசெய்து உதவுங்கள்

En baby kum szme prob, en ponnu porantthu 40days... Thungum pothu kasta paduthu... Nan butti paal than kodukuren... Enkum pathil kodunga thozhissss .....

எனது அனுபவத்தை கூறுகின்றேன். குழந்தயை நாங்கள் வைத்துக்கொண்டு சுடுனீர் ஆவி பிடிக்கவேண்டும்.பிடிக்கும் போது முதுகில் தட்டி தட்டி பிடிக்கவேண்டும்(அப்போது தான் சுவாசகுழாயில் உள்ள சளி கழரும்) மேலும் வெற்றிலையை சூடு காட்டி கை பொறுக்கும் சூட்டில் பிள்ளையின் நெஞ்சில் பற்று போடவும். மூக்கடைப்பு இருப்பின் சிறு தும்பை மூக்கில் விட்டு தும்ம செய்யவும்.(நான் சுடுனீர் போத்தலில்(பிளாஸ்க்) சுடுனீரை விட்டு பிடிப்பேன் ஏனெனில் அது பாதுகாப்பானது) நல்ல பலன் தெரியும் இது கை வைத்தியம் மட்டுமல்ல மிகப் பிரபல்யமான டொக்ரர் கூறிய அறிவுரை. ஏனெனில் பிறந்த குழந்தைகளுக்கு அன்ரி பயோரிக் போன்ற மருந்துகள் கொடுப்பது நல்லதில்லையாம்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே

Romba nanri rathiya, nenga solvaathu pol antibiotic porantha baby ku koduka mudiyathu... Otherwise sudu neer aavi epdi pidipathu nu konjam explain pana mudiuma... Enku bayama iruku.. En baby ku mookadaipu vera iruku.. Dr sona mathri clean panren but en baby sleep pana romba kasta paduthu... En kaila thaan thunguthu... Avanga thotila thunga maatra... Mooku adaipu romba tholai panuthu... Thalai ku pillow vaika kudathu nu terium but epdi mooku adaikama thunga vaika??? Pls thozhisss enku pathil thaarungal...

Tamila type pana kastama and late aaguthu plsss forgive me

ஸ்ரீதேவி இந்த லின்க்ல போய் பாருங்க.

http://arusuvai.com/tamil/node/20628#comment-221423

ஜென்னிவினோ

Dare To Paly With Life

மிக்க பயனுள்ள குறிப்பு. எங்களுக்கு இங்கு துளசி மற்றும் வெற்றிலை மட்டுமே கிடைக்கும், அடுத்த முறை சிங்கப்பூர் போகும் போது தான் வேப்ப எண்ணெய் வாங்க வேண்டும்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

ஒரு பிளாஸ்கில் சுடுனீரை எடுத்துக் கொண்டு இன்னொருவரிடம் குழந்தையை கொடுத்து அவரது மடியில் குப்புறபடுக்க வைத்து விட்டு நீங்கள் பிளாஸ்க்கை பிள்ளையின் மூக்கை நோக்கி பிடியுங்கள்.மூக்கிற்கு மிக அண்மையிலும் கொண்டு செல்ல வேண்டாம். தொடர்சியாக பிடிக்காமல் பிள்ளை தாங்கும் அளவிற்கு பிடியுங்கள். மூக்கடைப்பிற்கு நான் ஒரு டொக்ரரின் மனைவி செய்ததை கூறுகின்றேன்.நோமல் சேலையின் எடுத்து ஒரு ட்ரொப்பரால் ஒவ்வொரு நாசி துவாரத்திலும் 1/2 துளிகள் விட்டால் உடன் பலன் தெரியும்.விரும்பினால் செய்யவும். அல்லது nasal drops விட்டாலும் சரியாகும். மேலும் நீங்கள் தலைக்கு குளித்தவுடன் பிள்ளைக்கு தாய்ப்பால் கொடுக்காதீர்கள்.கட்டயாம் கொடுக்க நேரிடின் 4/5 வெள்ளைப்பூண்டை சட்டியில் போட்டு வறுத்து மென்று சாப்பிட்டுவிட்டு ஒரு கப் சுடுனீரும் குடித்துவிட்டு கொடுங்கள்.பிள்ளையின் சளித்தொல்லை குறையும்.இது எனது அனுபவத்தில் கண்ட உண்மை மேலும் பிள்ளையை லேசாக சரித்து/ இயலுமாயின் குப்புற படுக்க வையுங்கள்(பிள்ளையின் மூக்கு நசியாமல் பார்க்கவும்) இதை விட நீங்கள் இதனை நினைத்து டென்சன் ஆகாதீர்கள். பிள்ளைகளுக்கு சளி வருவது சகஜம்தான்.நான் இதைனை விட மிக அதிகமாக அனுபவித்துள்ளேன்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே

மிகவும் நன்றி rathiya.நீங்கள் கூறியது போல் செய்து பார்க்கிறேன்.என் மகன் எப்பொழுதும் குப்புற படுத்து தான் தூங்குகிறான்.இதனால் ப்ராப்ளம் எதும் இல்லையே?

சந்திப்போம் என்றா பிறந்தோம்.....
சந்திப்போம் என்றே
பிரிவோம்.....

என்றும் அன்புடன்
*ஸ்ரீதேவி செந்தில்*

எனக்கு தெரிந்தவரை பிரச்சனை எதுவும் இல்லை.மேலை நாடுகளில் எல்லாம் பிறந்தவுடனேயே குப்புற/சரிவாகத்தான் படுக்கவைப்பார்கள்.ஏனெனில் அப்போதுதான் பிள்ளை வாந்தி எடுத்தாலும் மீண்டும் சுவாசகுழாயினுள் செல்லாது தடுக்கப்படுகின்றது.ஆனால் மூக்கு துவாரம் நசிபடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே

என் தோழிக்கு ஒரு டாக்டர் சொன்னது,குழந்தையை ஒருவர் தோளில் போட்டுக்கொண்டு இன்னொருவர் ப்ளாஸ்க்கிலோ அல்லது பாட்டலிலோ வென்னீர் வைத்து காட்டி,காட்டி எடுக்கவும். மிகவும் கவனமாக செய்யவும்.நீங்கள் இஞ்சி சாறு அருந்தவும்.உங்கள் குடும்பத்தில் பெரியவர்கள் இருந்தால் இதயெல்லாம் கேட்டு செய்யவும்.உரை மருந்தும் கொடுத்தால் நல்லது.

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

மேலும் சில பதிவுகள்