நில நடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை.. :(

”இந்தோனேஷியா, சுமத்ரா தீவிலிருந்து 495 கி.மீ தொலைவில் 8.9 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்!” .

அந்தமான் , நிக்கோபார் தீவுகளில் சுனாமி எச்சரிக்கை!

சென்னையிலும் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. :((

-- விகடன் செய்திகளில் இருந்து...

தோழிகள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?? இந்தோனேஷிய தோழி கவிசிவா வந்து பாதுகாப்பா இருக்கேன்னு சொல்லுங்க நிம்மதியாக இருக்கும்...

சாந்தினி நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். இங்கே பிரச்சினை ஏதும் இல்லை. ஆனால் அங்குள்ள மக்களை நினைத்தால்தான் கவலையா இருக்கு :(. உங்கள் அன்பான அக்கறைக்கு மிக்க நன்றி சாந்தினி.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சென்னையில் நிலநடுக்கத்தால் மாலை 5மணியளவில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.கடலோரப் பகுதிகளில் உள்ள தோழிகள் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்கவும்.

சந்திப்போம் என்றா பிறந்தோம்.....
சந்திப்போம் என்றே
பிரிவோம்.....

என்றும் அன்புடன்
*ஸ்ரீதேவி செந்தில்*

அப்பா கவிசிவா... உங்களை தான் நினைச்சுகிட்டே இருந்தேன். நிம்மதியா இருக்கு.

பாபு அண்ணா பாதுகாப்பா இருங்க...

சென்னையில் அப்பா, தங்கை, சீதாலஷ்மி ஆபீஸிலெல்லாம் இருந்ததாம்... எங்களுக்கு வீட்டில் ஒன்னும் தெரியலங்க. கேட்க தான் பயமா இருந்தது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ப்ரேமா ஹரிபாஸ்கர், பிந்தான் னில் அதிர்வு தெரிந்ததா? உங்கள் ப்ரொஃபைல் பார்த்து நீங்க பிந்தானில் இருப்பதை தெரிந்து கொண்டேன். நான் இருப்பது பத்தாம் தீவு.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பிற்பகல் 2.50 தகவல்: சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டதாக, இந்திய தேசிய கடல்சார் தகவல் மையம் அறிவிப்பு; அச்சம் வேண்டாமாம்...

நல்லா குழப்புறாய்ங்க !! ஊடக வசதி இருப்பது நல்லதா இல்லைக் கெட்டதான்னு தான் அடுத்த பட்டி நடத்தனும் போல.. :(

//The Pacific Tsunami Warning Centre issued the tsunami watch for 28 countries, including Indonesia, India, Sri Lanka, Australia, Myanmar, Thailand, Maldives, Britain, Malaysia, Mauritius, Syechelles, Pakistan, Somalia, Oman, Madagascar, Iran, UAE, Yemen, Bangladsh, Tanzania, Mozambique, Kenya, South Africa and Singapore.

// - India today news

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இங்கு எதுவும் தெரியவில்லை, நாங்க தங்கி இருக்கறதே கப்பல் கட்டும் கம்பெனி யோட பாமிலி ரூம்ஸ் ல தான். பாத்தம் ல எப்படிங்க இருக்கு, எதுனா தெரிந்ததா?

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

அனைவரும் அந்த ஓரிரை பிரந்தியுங்கள்

god with us

thank you sister.
allah pothuma navan

இங்கும் எதுவும் தெரியலைப்பா! எல்லாம் இயல்பாவே இருக்கு. பிரச்சினை ஒன்னும் இல்லை.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்