ஸீஷெல் ஹவுஸ்

தேதி: April 13, 2012

4
Average: 3.4 (9 votes)

 

சிறிய அட்டை பெட்டி
சோழி மற்றும் கிளிஞ்சல்கள்
பெவிக்கால்
கனமான அட்டை
தெர்மாக்கோல்
ப்ளேடு

 

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
அட்டை பெட்டியின் நடுவில் வீட்டின் கதவு போல் வரைந்து, படத்தில் உள்ளது போல் ஒரு பக்கத்தை மட்டும் விட்டுட்டு மீதி இடங்களை ப்ளேடால் வெட்டி உள்பக்கத்தில் லேசாக தள்ளி விடவும்.
அட்டை பெட்டியின் கீழ் ஒரத்தில் சோழிகளை வரிசையாக ஒட்டவும். அட்டையின் முன்பக்கம் முழுவதும் க்ளூ தடவி சிறிய கிளிஞ்சல்களை ஒட்டி நிரப்பவும். அட்டைபெட்டியின் வலது, இடது பக்கத்தில் இதுப்போல் ஒட்டி வைக்கவும்.
கனமான அட்டையை செவ்வக வடிவில் நறுக்கி எடுத்துக் கொண்டு அதன் மேல் பக்கத்தில் பெரிய கிளிஞ்சல்களை வரிசையாக ஒட்டவும்.
அட்டைப்பெட்டியின் அகலத்தில் தெர்மாக்கோலை முக்கோண வடிவில் இரு துண்டுகள் நறுக்கவும். பெட்டியின் மேல், பின்பக்கத்தில் ஒரு தெர்மாக்கோல் துண்டை ஒட்டவும். வலது, இடது பக்கமும் சிறு தெர்மாக்கோல் துண்டை ஒட்டவும்.
மற்றொரு தெர்மாக்கோல் முக்கோணத்தின் முன்பக்கத்தில் மட்டும் பெரிய கிளிஞ்சல்களை பெவிக்கால் வைத்து ஒட்டவும்.
நன்கு காய்ந்த பிறகு அட்டையின் முன்பக்கத்தில் வைத்து ஒட்டி விடவும்.
இரு முக்கோணத்தின் ஓரங்களில் பெவிக்கால் தடவி, அதன் மேல் அட்டையில் ஒட்டி வைத்துள்ள கிளிஞ்சல்களை வீட்டின் கூரைப்போல் வைத்து ஒட்டி விடவும்.
விருப்பமிருந்தால் வீட்டின் கதவுகளுக்கு பெயிண்ட் செய்து விடலாம். மிகவும் எளிமையாக சோழி, கிளிஞ்சல்கள் கொண்டு செய்த அழகிய வீடு தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஸீஷெல் ஹவுஸ் அழகான வீடு? உள்ளே போகத்தூண்டுது மனது, கற்பனை அபாரம் ,அருமையான முயற்சி ஸீஷெல் வைத்துக்கொண்டு என்ன செய்ய என்று யோசித்திருந்தேன் ஒரு காலம். இப்போ கைவச்ம் இல்லை கிடைத்ததும் செய்து பார்ப்பேன். வாழ்த்துக்கள்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

அழகான வீடு,நல்ல முயற்ச்சி,பாராட்டுக்கள்.

வாவ்! அழகோ அழகு. பாராட்டுக்கள் டீம்.
நானும் கிளிஞ்சல் சேர்க்க ஆரம்பிக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

beautiful house

shagila

ரேவதி, பத்மா... சான்சே இல்லைங்க... கலக்கல். எனக்கு இது போல் ஷெல் வெச்சு எதாவது செய்ய ஆசை... ஆனா என்னிடம் உள்ளவை எல்லாம் இது போல் ரகமில்லை, வித்தியாசமானவை... மாலேவில் சேகரித்தது. இது போல் கண்ணில் பட்டால் சேகரித்து செய்து பார்க்கணும் :) ரொம்ப அழகு, நேர்த்தியான வேலை. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மெரினாவில் சின்ன வயதில் இந்த மாதிரியெல்லாம் கரையோரம் கிடைத்தது. அப்பொழுதெல்லாம் அதை வைத்து என்ன செய்ய என்றே தெரியாது அதனால் ஒரு நாள் குப்பை என்று தூக்கி எரிந்து விட்டோம். இப்பொழுது தேடினாலும் அங்கே கிடைக்காது போல. காசு கொடுத்து தான் வாங்கணுமோ? ஐடியா பக்காவா இருக்கு. இங்கே சேர்க்க முயற்சிக்கிறேன். இல்லையென்றால் வாங்கியாவது செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!