BBQ சிக்கன்

தேதி: April 14, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (11 votes)

 

கோழிக் கால் - அரைக் கிலோ
ஸ்பிரிங்க் ஆனியன் - ஒரு கட்டு
வெங்காயம் - ஒன்று
டொமெட்டோ பியூரி - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி
மிளகு தூள் - அரை மேசைக்கரண்டி
பார்பிக்யூ மசாலா - அரை தேக்கரண்டி
எலுமிச்சை - 2
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
தயிர் - ஒரு மேசைக்கரண்டி
தனியா தூள் - கால் மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - வறுக்க


 

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஸ்பிரிங்க் ஆனியன், வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். எலுமிச்சை சாறு பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கோழிக்காலை சுத்தம் செய்து அதனுடன் அரைத்த விழுது, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, தயிர், எலுமிச்சை சாறு, டொமெட்டோ ப்யூரி மற்ற மசாலா தூள்கள் அனைத்தையும் கலந்து சிக்கனில் தடவி ஆங்காங்கே கத்தியால் கீறி விட்டு ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
பார்பிக்யூ அடுப்பில் தீயை மூட்டி க்ரில்களில் ஊற வைத்த கோழி கால்களை வைத்து மேலே எண்ணெய் ஊற்றி வேக வைக்கவும்.
சிறிது நேர இடைவெளிக்கு பிறகு திருப்பி போட்டு வேக வைக்கவும். நன்கு வெந்ததும் எடுத்து எலுமிச்சை சாறு பிழிந்து பரிமாறவும். இது சாலட், ப்ரெஞ்ச் ப்ரை, பிரியாணி, ஜீரா ரைஸ், கீ ரைஸ் போன்றவற்றுடன் சாப்பிட மிகவும் பொருத்தமாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர் சூப்பர் சூப்பர். பார்க்கும் போதே டேஸ்ட் பன்னனும் போல இருக்கு. கண்டிப்பா பார்சல் அனுப்பனும். வாழ்த்துக்கள். இனிமேல் hotel போக வேண்டாம் இந்த மாதிரி செய்ய வேண்டியது தான். சண்டே செய்து வீட்டில் நல்ல பெயர் வாங்க வேண்டியது தான்.

கல்ப்ஸ் சூப்பர் சூப்பர் பார்பிக்யூ சிக்கன் அப்படியே எனக்கே எனக்கு ஒரு காலாவது எனக்கு கொடுத்துடுங்க :)
வாழ்த்துக்கள் பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

hi kalpana semaya irukku pa

கல்ப்ஸ்
க்ரில்ல வச்ச கோழி பிக்சர் செம க்யூட். கோழி குஞ்சு மாதிரி.

hai kalpana your recipe is very good .parkavae asaiya irukuthu. plz oru plate anupunga....

god is great

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவிற்கு என் நன்றிகள் !

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கெளதமி, பார்க்கும் போது இல்லாம சாப்பிடும் போதும் சுவையோ சுவையா இருக்கும். இந்த ரெசிப்பி இந்த ஊர் ஆளுங்க கிட்ட இருந்து சுட்டது. நான் ருசித்ததில் பிடித்த ருசி. அதை உங்களோடு பகிர்ந்ததில் அளவற்ற மகிழ்ச்சி. நீங்களும் செய்து பார்து வீட்லயும் விருதை தட்டிடுங்க ;) வருகைக்கும் பதிவிற்கும் நன்றி :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சுவா, உங்களுக்கெல்லாம் பார்சல் இல்லை. வீட்டுக்கு வாங்க. அப்பதான் தருவேன் ;) வாழ்த்திற்கும்,பதிவிற்கும் தேங்க்ஸ் பா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நிஷான், செம்மையா இருக்கா? தேங்க்ஸ் பா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நிகிலா, எனக்கும் அடுப்பில் சமைத்த கோழியை விட இப்படி க்ரில்லில் வச்ச, சுட்ட கோழி ரொம்பவே பிடிக்கும். அது சுவையே தனி தான். நீங்களும் செய்து பாருங்க நிகி. வருகைக்கும், பதிவிற்கும் நன்றி :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மதினா,உங்களுக்கு பார்சல் ரெடியா இருக்கு. அட்ரசை சொன்னா அனுப்பிடுவேன் ;) வருகைக்கும், பதிவிற்கும் நன்றி தோழியே :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்பனா BBQ பார்ப்பதற்கு ரொம்ப அருமையாக இருக்கின்றது.இம்முறை summer க்கு எங்கள் வீட்டில் கொண்டாட்டம்தான்..

பரணிகா:)

பரணிகா, உங்கள் பெயர் மிகவும் அழகு. சம்மரை BBQ சிக்கனோடு அட்டகாசமா கொண்டாடிடுங்க. வருகைக்கும், பதிவிற்கும் நன்றிகள் தோழியே :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்பனா
BBQ சிக்கன் பார்த்து அசந்துட்டேன்.செம சூப்பரா பாக்கவே ரொம்ப நல்லா இருக்கு.கடைசி ஃபோட்டோ செம க்யூட். ரொம்ப அழகான ப்ரசண்ட்டேஷன். போட்டோஸ்,செய்முறை விளக்கங்கள் எல்லாமே வழக்கம் போலவே அருமை.பார்ட்டிக்கு சூப்பர் குறிப்பு..இம்முறை பார்ட்டிக்கு எங்கள் வீட்டில் உங்க BBQ சிக்கன்தான்..5 ஸ்டாரும் கொடுத்துட்டேன்.கலக்குறீங்க கல்பனா , வாழ்த்துக்கள்....

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சுமி, எங்கேடா நம்ம சுமியை காணோமேன்னு நினைச்சுட்டே பேஜை க்ளோஸ் பண்ணிட்டு வர்றேன். பின்னாலேயே நீங்க குரல் கொடுக்கறீங்க ;) ஆமாம்,சுமி பார்ட்டிக்கு இது மிகவும் நன்றாக இருக்கும். எங்க வீட்ல எப்ப விருந்து வைபவம்னாலும் இதைத்தான் செய்வோம். நீங்களும் செய்து அசத்திட்டு சொல்லுங்க. வருகை + பதிவு + பாராட்டு + ஸ்டார் = மிக்க்க்க்க்க்க்க் நன்றி சுமி :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பார்ட்டிகளுக்கு செய்ய நல்ல ஒரு டிஷ் குடுத்துருக்கிங்க. ஊருக்கு போயிட்டு வந்து செய்து பாக்குறேன்.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

சுலபமான சுவையான குறிப்பு. :) அப்படியே பார்ட்டி சூப்பரா இருக்கும்னு பார்த்தாலே தெரியுது. அசத்துங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அனு, ஊருக்கு போய் வந்தே பொறுமையா செய்து பாருங்க. வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி அனு :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வனிதா,//அப்படியே பார்ட்டி சூப்பரா இருக்கும்னு பார்த்தாலே தெரியுது. // கோழிக்காலை இப்படி தந்தா தான் பார்ட்டியே சூப்பராகுது ;) செய்துட்டு சொல்லுங்க. வருகைக்கும்,பதிவிற்கு நன்றி வனிதா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

Oru kaal unga v2ku vantha enaku oru kaal kidikuma.super vazhakampola kalkitiga

Be simple be sample

கலக்கல் BBQ சிக்கன் செய்திருக்கிங்க... :) ப‌டங்கள் எல்லாம் பளிச், பளிச்!, அதிலும் கடைசிப்படம் ப்ரசண்டேஷன் சூப்பர்ர்ர்ர்.....! வாழ்த்துக்கள்!, தொடர்ந்து (சமையல்)களத்தில கலக்குங்க கல்ப்ஸ்!!

அன்புடன்
சுஸ்ரீ

5 ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு இருக்குங்க.......... யம்மி யம்மி......

ரேவ்ஸ், எங்க வீட்டுக்கு 2 காலோட வந்தா ஒரு கால் தருவேன். ஒரு காலோட வந்தா 4 கால் தர்றேன் :D. வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி ரேவ்ஸ் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சுஜா, உங்களை போன்ற சமையல் கள ராணிகளை வைத்து ஒப்பிடும்போது நான் இன்னும் சிஷ்யை பிள்ளை தான். உங்கள் பாராட்டு மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. வரவிற்கும்,வாழ்த்திற்கும் நன்றிகள் சுஜா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ப்ரியா, அதுக்குள்ள செய்து சாப்டீங்களா? நாக்கு இந்த தாளம் போடுதே ;)) பாராட்டிற்கும்,பதிவிற்கும் நன்றி பா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நான் இந்த சைடு வராததால் என்னென்னமோ நடக்குது... கல்ப் சிக்கனே கண்ணில் பார்க்கவே முடியாதுன்னு இப்படி ஒரு செம்ம டிஸ் செய்து அனுப்பியிருக்க.. பார்க்கவே நாக்கு ஊறுது... அம்மிணி எல்லாம் டிஸ்ஸிம் நோட் பண்ணிவச்சியிருக்கே நீ சென்னை வருவல்லா உன் வீட்டுக்கு வந்து நானும் சுவா தீப்ஸ் ஒரு வெட்டு வெட்டிட்டு தான் போவோம்... பார்க்கவே நாக்கு ஊறுது... சூப்பரோ சூப்பர் போ....

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ரே, //கல்ப் சிக்கனே கண்ணில் பார்க்கவே முடியாதுன்னு இப்படி ஒரு செம்ம டிஸ் செய்து அனுப்பியிருக்க.. பார்க்கவே நாக்கு ஊறுது... // சிக்கன் கிடைக்கும். ஆனா ப்ரோசன் தான். நம்ம ஊர் டேஸ்ட் வராதுன்னு சொன்னேன். இந்த ஊர்ல சிக்கன் இல்லைனா ஆளுங்களையே கூறு போட்டு பார்பிக்யூ அடுப்புல வச்சு சுட்டு சாப்ட்ருவாங்க. மோசமானவய்ங்க ;))

//
அம்மிணி எல்லாம் டிஸ்ஸிம் நோட் பண்ணிவச்சியிருக்கே நீ சென்னை வருவல்லா உன் வீட்டுக்கு வந்து நானும் சுவா தீப்ஸ் ஒரு வெட்டு வெட்டிட்டு தான் போவோம்// ஆஹா... ஒரு ப்ளானோட தான் இருக்கீங்களா? வாங்க..வாங்க.. ஆனா வர்றதுக்கு முன்னாடி போனை போட்டுட்டு வாங்க. காக்கா பிடிக்கனும்ல.. ;)) சிக்கன்னு சொல்லி தந்துருவோம்.. வா.. ரே... உனக்கு இல்லாத கோழிக்காலா? கண்டிப்பா சேர்ந்து வெட்டிடுவோம்.

உன் அன்பான பதிவிற்கும், வரவிற்கும் நன்றி ரே :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வந்துடுச்சா..... வந்துடுச்சா..... வந்துடுச்சா!!!!..... நா ரொம்ப நாள் எதிர்பார்த்துட்டு இருந்த பார்பிக்யூ சிக்கன்.......... ஆஹா பார்க்கவே ரொம்ப அமர்க்களமா இருக்கே..... எனக்கு கிரில் சிக்கன்னா ரொம்பவே இஷ்டம்..... சீகரம் வந்து எங்களுக்கு இதெல்லாம் செய்து கொடுங்க.... :)

பி.கு.: நா இந்த பக்கம் வரமுடியலன்னாலும் எனக்காக அன்போட உங்க வீட்டு விருந்துக்கு சீட் போட்டு வைத்த நம்ம தோழி ரே வாழ்க.... நண்பிடா...................... ;-D

தீப்ஸ், கோழிக்கால் பதிவு போட வச்சுருச்சி பார்த்தியா? ;)) எனக்கும் இது மாதிரி க்ரில் சிக்கன் ரொம்ப பிடிக்கும் பா. இந்த ஊர்ல பாதி ஐயிட்டங்கள் க்ரில் தான். அதனால் விரும்பி சாப்பிடலாம்.

//நா இந்த பக்கம் வரமுடியலன்னாலும் எனக்காக அன்போட உங்க வீட்டு விருந்துக்கு சீட் போட்டு வைத்த நம்ம தோழி ரே வாழ்க.... நண்பிடா...................... ;-D// ஆமா..ஆமா.. நீ நண்பி தான் தீப்ஸ். யார் இல்லைன்னு சொன்னது. ரேவுக்கு ஸ்பெஷலா நான் காக்கா காலை டோஸ்ட் பண்ணி வைக்கலாம்னு இருக்கேன். உனக்கு எப்படி வசதி? ;)))

பணிசுமைகளுக்கு நடுவேயும் மறக்காமல் பதிவு போட்டது மகிழ்ச்சி பா. தேங்க்ஸ் தீப்ஸ் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

baarbi q masala endral ena? epadi prepare pandrathu

ப்ரயா, இது கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும். இருந்தால் போடலாம். இல்லையென்றாலும் ருசியில் பெரிய வித்தியாசம் இருக்காது.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

super i will try this.THANK YOU MAM I AM VERY VERY HAPPY TO SEE LIKE THIS PERFECT GUIDE.

மேடம் பார்பிக்யூ மசால,டோமடோப்யூரி, இதல்லாம் எங்கு கிடைக்கும்.என்னுடைய அவன் டோஸ்டர்அவன் இதை எப்படி USE பன்னுவது.இதில் சல்லடைபோல் ஒரு டிட்ரெ,ஒரு குட்சி போல கம்பி,இவையல்லாம் உள்ளது.PLZ.சொல்லுகபா.CELL NO.9698064332

நித்யா அந்த குச்சி போல கம்பியை அவனின் உள்ளே மாட்ட முடியும் தானே. ஊறவைத்த கோழி துண்டுகளை அந்த கம்பியில் குத்தி மேலே லேசாக எண்ணெய் தெளித்து வைங்க.
அவனை 220 டிகிரி செல்ஷியசுக்கு செட் பண்ணி உள்ளே எதுவும் வைக்காமல் 10 நிமிடம் சூடு பண்ணுங்க. இதை ப்ரீஹீட் பண்றதுன்னு சொல்லுவோம்

இப்போ கையில் அவன் கிளவுஸ் போட்டுட்டு அந்த கம்பியை எடுத்து அவனில் அதற்கான இடத்தில் மாட்டுங்க. இந்த கம்பியை எடுக்கவும் ஒரு ஹேண்டில் கொடுத்திருப்பாங்க அதை யூஸ் பண்ணுங்க. கையை சுட்டுக்காம செய்ங்க.

இப்போ அவனை மூடி முதலில் 20நிமிடம் செட் பண்ணுங்க இடையிடையே செக் பண்ணிக்கோங்க. வேகலைன்னா கூட கொஞ்ச நேரம் செட் பண்ணி வெந்ததும் எடுத்து பரிமாறுங்க.

இதெல்லாம் கஷ்டமா இருக்குதுன்னு நினைச்சீங்கன்னா அந்த சல்லடை போல ட்ரே இருக்கே அது மேல கோழித் துண்டுகளை வச்சு அவனில் மேலே சொன்ன மாதிரியே வச்சு எடுங்க. ஆனல் இடியில் கோழித் துண்டுகளை திருப்பி வைக்கணும்.

ஒரிஜினல் BBQ சிக்கன் டேஸ்ட் வேணும்னா கல்பனா சொல்லியிருக்கற மாதிரி முறையில் செய்தால்தான் கிடைக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நித்யா, கவி மிகவும் தெளிவாகவும், விளக்கமாகவும் அவனில் செய்வது குறித்து விளக்கியுள்ளார். இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றே நம்புகிறேன்.

பார்பிக்யூ மசாலா இருந்தால் போடலாம். இல்லைனாலும் பெரிய வித்தியாசம் தெரியபோறதில்ல. சூப்பர் மார்க்கெட்டுகளில் இந்த மசாலா கிடைக்கும். டொமெட்டோ பியூரியும் அங்கே கிடைக்கும். அப்படி கிடைக்கவில்லையெனில் தக்காளியை அரைத்து சேர்த்து கொள்ளுங்கள். இன்னும் சந்தேகம் என்றாலும் கேளுங்க. பலரும் பார்வையிடும் தளம் என்பதால் செல் நம்பரை இப்படி தரவேண்டாம் தோழியே :) பலரின் கண்களில் இது படுவதால் அதில் யாராவது ஒருவர் மிஸ் யூஸ் பண்ண வழிவகுக்கும். நீங்க பேர் போட்டு டவுட் கேட்டிருப்பதால் எப்படியும் என் கண்ணில் அல்லது தோழிகள் கண்ணில் பட்டு பதில் அளிப்பார்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பதில் அளித்தமைக்கு மிகவும் நன்றி.டோஸ்டர் அவனல கப்கேக் டிரே வைத்து. கப்கேக் செய்யலாமா.மற்ற கேக் செய்ய இதில் உள்ள டிரே யில் உற்றினால் மெல்லியதாகவும் கருகியும் விடுகிரது.கிளாஸ் டிரே வைத்தால் கிளாஸ் தான் சூடாகிரது கேக் மாவு அப்படியே உள்ளது.அவன் வாங்கி ஒன்று செய்ய முடியவில்லை. PLZ சொல்லுகபா

டோஸ்டர் அவனல கப்கேக் செய்யலாமா

நித்யா நீங்க அவன் ட்ரேயில் மாவை ஊற்றினால் சரியாக வராது. கப்கேக் மோல்ட் வாங்கி அதில் செய்யுங்க. க்ளாஸ் ட்ரேயில் ஏன் வரலைன்னு எனக்கு தெரியலை.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேடம் கிளாஸ்தான் நல்லா சூடாகுது அதன் உள்ளே உள்ள உருளை கிழங்கு சூடாகமாட்டுது.நான் கிராமத்தில் உள்ளதால் எங்கு வாங்குவது எனறு தெரிய வில்லை. மன்னிக்கவும்.இந்த அவனில் மேலும்,கீலும் இரண்டு கம்பி சூடாகிரது.

அவனில் மேல்பக்கம் கீழ்பக்கம் இரண்டிலும் இருந்து சூடு பரவத்தான் அந்த கம்பிகள். கேக் செய்யும் போது இந்த ரெண்டுமே சூடானால்தான் சரியாக வரும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!