இட்லி செய்வது எப்படி

எனக்கு இட்லி ரொம்ப பிடிக்கும்.
ஆனால் சரியா வர மடேங்குது.
இட்லி ஊத்தி எடுக்கும் போது கொலகொலன்னு இருக்கு.
எனக்கு சொல்லி தருவீங்ளா...???

உளுந்தை ஊற வைத்த பின்பு அதை பிரிட்ஜ்-ல் ஒரு அரை மணி நேரம் வைத்து விடுங்கள்.. உளுந்தை அரைப்பதற்கும் பிரிட்ஜ் வாட்டர்-ஐ பயன்படுத்துங்கள். இட்லி மென்மையாக வரும்.

"எல்லாம் நன்மைக்கே"

நன்றி பாக்கியா. எந்த அளவில் அரசி ஊளுந்து போடுவீர்கள்???

god with us

அரிசி - 4 கப்
உளுந்து - 1 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்

அரிசியை நான்கு மணி நேரம் ஊற வைக்கணும்.
உளுந்தை அரை மணி நேரம் ஊற வைத்த பின்பு பிரிட்ஜ்-ல் ஒரு அரை மணி நேரம் வைத்து விடுங்கள்.. பின்னர் உளுந்தை அரைப்பதற்கும் பிரிட்ஜ் வாட்டர்-ஐ பயன்படுத்துங்கள்.
குறைந்தது இருபது நிமிடங்கள் உளுந்து அரைக்கணும். இட்லி மென்மையாக வரும்.

இட்லி வெந்து விட்டதானு ஒரு fork -ல குத்தி பாருங்க அல்லது ஒரு விரலால் அழுத்தி பாருங்க. சிறிது நேரம் முன்னாடி எடுத்து விட்டால் கொழகொழனு இருக்கும்.

"எல்லாம் நன்மைக்கே"

உங்களுக்கு இட்லி சப்பையாக வந்தால் உளுந்து அளவை குறைத்து பாருங்கள்.. அரிசி - 4 கப், உளுந்து - 3/4 கப், வெந்தயம் - 1tsp

"எல்லாம் நன்மைக்கே"

மேலும் சில பதிவுகள்