என்னையும் உங்க தோழியா ஏத்துக்கோங்க!

அனைத்து தோழிகளுக்கும் வணக்கம். நான் அறுசுவைக்கு புதிது. கொஞ்ச நாளா நான் இந்த அறுசுவை தளத்தில் உலா வந்து கொண்டிருக்கிறேன். ஆனா இது வரைலும் பெயர் பதிவு செய்தது இல்லை. இன்னைக்கு தான் முதல் முறையா பெயர் பதிவு செய்து இருக்கிறேன். இங்க இருக்க எல்லாரும் என்னையும் தோழியா ஏத்துக்கோங்க. ஏத்துக்குவீங்களா? நான் என்னை பத்தி கொஞ்சம் சொல்றேன். என் பெயர் வனிதா. எனக்கு திருமணம் ஆகிவிட்டது. என் சொந்த ஊர் நாமக்கல். இப்போ இருக்கிறது UK ல. எனக்கு friends நா ரொம்ப இஷ்டம். எனக்கு நிறைய friends இருக்காங்க. அறுசுவை ல இருக்கிற எல்லாரையும் சேத்து தாங்க சொல்றேன். கல்யாணத்துக்கு முன்னாடி வரைலும் நான் தனியா இருந்ததே இல்லங்க. என்ன சுத்தி எப்போவும் யாராது இருந்துட்டே இருப்பாங்க. எனக்கு வயதானவங்களையும் ரொம்ப பிடிக்கும். எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி நடந்துக்குவேன். ஆனா கொஞ்சம் கோவம் அதிகமாவே வருங்க. இனியும் என்ன பத்தி சொல்றேன். அப்போ என்னை யாரவது friend -ஆ accept பண்ணுங்க.

Hai vanitha I accept, you are my friend,at the same time sister name is vanitha

ரொம்ப நன்றிங்க என்னை உங்க தோழியா ஏத்துகிட்டதுக்கு.

அறுசுவை தோழிகள் சார்பாக உங்களை வருக வருக என வரவேற்கிறோம்! அறுசுவைக்கு வந்துட்டா எல்லாரும் எல்லார்க்கும் friends தான்.இங்க நீங்க கத்துகிறதுக்கும் பகிர்ந்துகிறதுக்கும் நிறைய இருக்கு.welcome friend.

சந்திப்போம் என்றா பிறந்தோம்.....
சந்திப்போம் என்றே
பிரிவோம்.....

என்றும் அன்புடன்
*ஸ்ரீதேவி செந்தில்*

வணக்கம் வனி நீங்க நாமக்கலா? சந்தோசம் அறுசுவைல உங்க கூட பேசினது சந்தோசம்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

Hi vanitha neenga namakkalil enga irukiringa naanum namakkal than. Naan northern ireland belfast il irukiren.Neenga uk la enga irukiringa? I accept you are my friend.

உங்கள் வரவேற்ப்புக்கு ரொம்ப நன்றி ஸ்ரீதேவி. நீங்க சொன்ன மாதிரி இங்க நிறைய இருக்கு கத்துகிரதுக்கும், தெரிஞ்சத பகிர்ந்துகிரதுக்கும். மேலும் பேசலாம் ஸ்ரீதேவி. நான் உங்கள விட சின்ன பொண்ணு நு தான் நினைகிறேன். எதுக்கும் அக்கானே கூப்பிடறேன். சரிங்களா ஸ்ரீதேவி அக்கா?

எனக்கும் ரொம்ப சந்தோசமா இருக்கு அக்கா உங்க கூட பேசினதுல. எங்க அம்மா பெயர் தனலட்சுமி, நான் அம்மா சந்தோசமா இருந்தா தனா நு தான் அக்கா கூப்பிடுவேன். உங்க பெயரை பார்த்த உடனே எனக்கு எங்க அம்மா ஞாபகம் தான் அக்கா வந்துச்சு. அவங்கள நான் ரொம்ப மிஸ் பண்றேன் அக்கா. அத விடுங்க. உங்க கூட பெசுனதுலையும், என்னை உங்க தோழியா ஏத்துக்கிட்டதுலையும் எனக்கு ரொம்ப சந்தோசம் அக்கா. மீண்டும் நிறைய பேசுவோம்.

சரண்யா,
என்னை உங்க தோழியா ஏத்துகிட்டதுல எனக்கு ரொம்ப சந்தோசம் ங்க. நாமக்கல் ல நாங்க வள்ளிபுரம் ல இருக்கோங்க. நீங்க எங்க இருக்கீங்க நாமக்கல் ல? நாங்க இங்க UK ல crewe ல இருக்கோம் ங்க. இந்த இடம் manchester கு பக்கத்துல இருக்குங்க. சொல்ல மறந்துட்டேங்க. சரண்யா என் friend நேம் கூடங்க. அவங்கள ரொம்ப பிடிக்குங்க எனக்கு. மேலும் நிறைய பேசலாங்க.

அக்கா எல்லாம் வேண்டாம் வனி தனா ன்னே கூப்பிடலாம் நாமக்கல் ல இருகரவங்களை சந்தித்ததில் ரொம்ப ரொம்ப சந்தோசம்
சரண்யா நீங்களும் நாமக்கல் லா? அறுசுவைல உங்க எல்லாரையும் சந்தித்ததில் ரொம்ப சந்தோசம்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ஓ!!! அப்போ நீங்களும் நாமக்கல்-ஆ? உங்க எல்லோரையும் சந்தித்ததில் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்குங்க. இப்போ தான் நீங்க ராசிபுரம் நு தெரியும். உங்க profile பாத்ததுக்கு அப்புறம்.

மேலும் சில பதிவுகள்