சிறுநீரகத்தில் கால்சியம் கல் - எந்த காய்கறிகள் உணவில் சேர்க்க கூடாது?

என் தாய்க்கு சிறுநீரகத்தில் கால்சியம் கல் இருந்து இப்போது அறுவை சிகிச்சை முடிந்துள்ளது
எந்த காய்கறிகள் உணவில் சேர்க்க கூடாது? - எதனை சேர்க்கலாம்? யாருக்காவது தெரிந்தால் கொஞ்சம் சொல்லவும்

அவர்கள் கிராமத்தில் வசிகிறார்கள் - ஆலோசனை தெரியவில்ல - வலையில் தேடும்போது கொஞ்சம் குழப்பம் வந்துவிட்டது - ஒருவர் அந்த காய் சேர்க்கலாம் என்கிறார் - இன்னொருவர் வேணாம்கிறார். யாரவது கொஞ்சம் சொல்லுங்க

சேர்க்க கூடியது எது ?
சேர்க்க கூடாதது எது ?

ஆவலுடன்
பாபு நடேசன்

முட்டைக்கோஸ் சேர்க்க வேண்டாம்.

தக்காளி சேர்ப்பதையும் குறைத்துக் கொள்ளலாம்.

பால் அதிகம் வேண்டாம்.

பொதுவாக, பெண்களுக்கு இந்தப் பிரச்னை வரும்போது, அதிகமாக தண்ணீர் குடிப்பது உதவியாக இருக்கும்.

இன்னும் விவரங்கள் மற்ற தோழிகள் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

கீரை வகைகள், கோழி, முட்டைகோஸ், தக்காளி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்... வாழை தண்டு அதிகம் சேர்த்து கொள்ளலாம்... நீர் காய்கறிகள் அதிகம் சேர்க்க வேண்டும்........

உங்க பேர் புரியla . அம்மா நலமா??
சீத்தாம்மா மற்றும் ப்ரியா அவர்கள் சொன்னது சரியே. மேலும் வேர்கடலை,அதிக அளவில் பால் தயிர்,மோர் வேண்டாம். தக்காளியில் நாட்டு தக்காளி வேண்வே வேண்டாம்,அப்படி தக்காளி பயன் படுத்தினால் உள்ளே இருக்கு விதைகளை எடுத்து விடுங்க, கேழ்விரகு வேன்டாம்,முட்டை,கோழி கம்மியா சாப்ட சொல்லுங்க.வாழத்தண்டு சமைத்து வாரம் 2 முறை சாப்பிடலாம், வெண் பூசனி,அவரை சேத்துக்கனும், கீரையில் பருப்பு கீரை சாப்பிட வேண்டாம்,முந்திரி சாப்பிட வேண்டாம்.வாழத்தண்டு சாறு ஒரு நாளைக்கி 1 ஸ்ப்பூன் சாப்பிடலாம்(1 டம்ளர் இல்லை),,எலுமிச்சையும்,தர்பூசனியும் ரொம்ப சேர்க்க வேண்டாம்.நிரைய தண்ணீர் குடிக்க சொல்லுங்க.(மண்னுக்கு உள்ளே வளரும் காய்களை அவ்வளவு சேக்காதீங்க)
இதல எனக்கு கல் இருந்த போது நான் பாலோ பன்னது (மருத்துவர் சொல்லி)

மேலும் சில பதிவுகள்