ப்ரெட் சாண்ட்விச்

தேதி: April 23, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.1 (11 votes)

 

ப்ரெட் துண்டுகள் - 10
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
கேரட் - 3
பச்சைமிளகாய் - 3 (காரத்திற்கேற்ப)
மஞ்சள்தூள் - சிறிது
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 3 தேக்கரண்டி
நெய் - தேவைக்கு


 

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். கேரட்டை துருவி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
லேசாக வதங்கியதும் கேரட் துருவல், தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி இறக்கவும். (இதில் பொடியாக நறுக்கின புதினா, மல்லிதழையும் சேர்க்கலாம்)
ப்ரெட்டின் இரு பக்கமும் நெய் தடவி மசாலா கலவையை பரப்பி வைக்கவும். (இதன் மேல் சீஸ் துருவியும் சேர்க்கலாம்)
மேலே மற்றொரு ப்ரெட்டால் மூடி சாண்ட்விச் டோஸ்ட்டரில் வைத்து டோஸ்ட் செய்யவும்.
சாஸ் வைத்து சாப்பிட சுவையான ப்ரெட் சாண்ட்விச் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வித்தியாசமான பிரட் டோஸ்ட் எப்பவும் ஜாம் சேர்த்து சாப்பிட்டு இருக்கேன் அடுத்த முறை இந்த மாதிரி ட்ரை பண்ணுறேன் வித்தியாசமான சுவையில் இருக்கும்னு நினைக்கிறேன் விருப்ப பட்டியலில் சேர்த்துட்டேன் (உங்க குறிப்பு பீட்ரூட் கிரேவி எனக்கு ரொம்ப புடிக்கும் நான் அடிக்கடி எங்க வீட்டுல பன்னுவேன் நன்றி )

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

சுவா, கலக்குறீங்க பா. காய்கறிகள் செம்ம கலர்புல்லா இருக்கு. நல்ல சத்தான காலை நேர சிற்றுண்டி. 6லிருந்து 60வரை கட்டாயம் உண்ண வேண்டிய சரிபாதி சத்துக்களை கொண்டது. சுவையான, சத்தான குறிப்பை தந்த உங்களுக்கு என் சத்தான வாழ்த்துக்கள் பா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

hi swarna, enakku sandwitch eppidi panninalum rompa pidikkum, kandippa seithu parkiren, valthukkal.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

அன்பு ஸ்வர்ணா,

காய்கறிகள் சேர்த்து செய்திருப்பது ரொம்ப நல்லா இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

வீட்டுல இந்த காய்கறிகள் எல்லாம் இருந்துனாலே உடனடியா செய்து பார்க்கமுடிந்தது. டோஸ்டர் இல்ல ஸ்வர் தவாவுல இப்ப செய்தேன். டேஸ்ட் நல்லா இருந்தது. நன்றி ஸ்வர்.

இத்தனை சீக்கிறம் குறிப்பை வெளியிட்ட அண்ணா மற்றும் குழுவிற்க்கு நன்றி....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தனா முதல் வருகைக்கும் பதிவிற்க்கும் மிக்க நன்றிப்பா,கண்டிப்பா செய்து பாருங்க சுவை நிச்சயம் பிடிக்கும்.
பீட்ருட் கிரேவி பிடிக்குமா சந்தோசம் பா இன்னிக்கு நான் பீட்ருட் கிரேவிதான் செய்தேன் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கல்ப்ஸ் உங்க சத்தான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா......:))

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் சுமி இப்பதான் உங்ககிட்ட முதல் முறையா பேசுறேன்னு நினைக்கிறேன் :)

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி,எனக்கும் ரொம்ப பிடிக்கும் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

உங்கள் வருகைக்கு மிக்க நன்றிங்கம்மா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வினோ குறிப்புதான் சுட சுட வந்திருக்குன்னா நீயும் அதைவிட சூடா செய்துபார்த்து வந்துட்டியா ரொம்ப சந்தோசம் பா.வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி வினோ.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் ஸ்வர்,

போட்டோஸ் சூப்பராயிருக்கு ஸ்வர்,அதுவும் கேரட் துருவியிருக்கீங்க

பாருங்க,அவ்வளவு அழகாயிருக்கு ஸ்வர்.

அசத்தலான குறிப்பு,அழகான படங்கள்.

வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் தங்கப்பெண்ணே..

அன்புடன்
நித்திலா

நாளைக்கு பொண்ணுக்கு லன்ச்பாக்ஸ்க்கு என்ன குடுக்கலாம்ன்னு யோசிச்சு கிட்டே அறுசுவையில் பார்க்கலாம் என்று வந்தேன்,உங்க சாண்ட்விச் கண்ணில் பட்டதும்,நாளைக்கு இதுதான் என்று முடிவு பண்ணிட்டேன்.சத்தான சாண்ட்விச்.
சூப்பர்ப்.

ப்ரெட் சான்ட்விச் ஆரோக்கியமான ஐய்ட்டமா நல்லாருக்கு சுவர்ணா!

நானும் எக்ஸ்சாட்டா இதேப்போல செய்வேன், உருளைக்கிழங்கை வைத்து! கண்டிப்பா கேரட்டில் செய்துப்பார்க்கிறேன். குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான சான்ட்விச்! வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

ஸ்வர்ணா,

வித்தியாசமான சாண்ட்விச்..
வாழ்த்துக்கள்...

என்றும் அன்புடன்,
கவிதா

சமையல் ராணி எப்பவும் சமையலில் அசத்துவீங்க அதே போல் இந்த முறை சூப்பரா கலர்புல்லா ஒரு ரெசிபி செய்து அனுப்பியிருக்கீங்க.. வாழ்த்துகள் மேடம்... எனக்கு ரொம்ப பிடிச்ச டிஸ்... வீட்டுக்கு வரும் போது மாலை நேரத்தில் தயாராக இருக்கனும்... புரியுதா

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

வணக்கம் உங்கள் குரிப்பு நன்ரக உல்லது, உங்களிடம் ஒரு சந்தெகம் தேங்காய் ரொட்டி கு மாவு fridge ல் வைத்து அடுத்தனாள் பயன்படுதலமா
I just now registered for asking this please reply

lalitha

வாவ்... இது எனக்கு பிடிச்ச சாண்ட்விச் ;) ஏன்னா நான் ரொம்ப சோம்பேரியாச்சே... எனக்கு சிரியாவில் பாதி நாள் இது தான் பசிக்கு கை கொடுக்கும். நீங்க இன்னும் ரிச்சா அருமையா செய்திருக்கீங்க... உள்ள தூங்குற சாண்ட்விச் மேக்கரை மாலே போனதும் வெளிய எடுத்துருவோம் இதை செய்ய. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஸ்வர்ணா,
சாண்ட்விச் குறிப்பு ரொம்ப நல்லா இருக்கு.எங்க வீட்டில் பிரெட்டில் எது செய்தாலும் எல்லாருக்கும் பிடிக்கும்.இதையும் செய்து சாப்பிட்டுட்டு சொல்றேன்.வாழ்த்துக்கள் ஸ்வர்ணா.

நித்தி வருகைக்கும்,வாழ்த்திற்க்கும்,பாராட்டிற்க்கும் மிக்க நன்றிப்பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரீம் வருகைக்கு நன்றி,செய்து பார்த்தாச்சா :)) மிக்க நன்றி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுஸ்ரீ வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா,கண்டிப்பா செய்துட்டு சொல்லுங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கவி எப்படி இருக்கீங்க உங்களை பார்த்து ரொம்ம்ப நாளாச்சே!!!

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரே சமையல் ராணின்னுலாம் சொல்லி உசுப்பேத்தி விடாதே :))

கண்டிப்பா நீ இங்கு வரும்போது எல்லாமே தயாரா இருக்கும் :)வருகைக்கு மிக்க நன்றிடா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

லலிதா தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் :(

வருகைக்கு மிக்க நன்றி. தேங்காய் ரொட்டி மாவு ஃப்ரிட்ஜில் வைத்து தாராளமாக அடுத்த நாள் பயன்படுத்தலாம் நான் எப்பவும் செய்துட்டு மிச்சம் இருப்பதை ஃப்ரிட்ஜில் வைத்து அடுத்த நாளும் செய்வேன்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வருகைக்கு மிக்க நன்றி வனி. உங்களுக்கும் பிடிக்குமா எனக்கும் பிடிக்கும் நானும் ஒரு வாழைப்பழ சோம்பேரிதானுங்கோ :)))

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அன்பு வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.கண்டிப்பா செய்து பாருங்க உங்களுக்கும் பிடிக்கும் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாழ்க்கையில முக்கால்வாசி நாள் ப்ரட் சாண்ட்விச்சேதான்! உங்க குறிப்ப செஞ்சுபாத்து சாப்பிட்டுதான் சொல்லனும்னு இருந்தேன் இதோ இப்போ டீயோட சுவையா இறங்கிட்டே இருக்கு;) குட்டீஸும்தான் பச்சைமிளகாய் மட்டும் தாளிச்சு தனியே எடுத்தாச்சு..சீஸ் சேர்த்து ம்ம்ம்.... ப்ரமாதம் ஸ்வர் வாழ்த்துக்கள் மற்றும் அருமையான ஸ்னாக்ஸ்கொடுத்தற்கு நன்றிகள் ;-)

Don't Worry Be Happy.