எங்களுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது .சௌமியன்

அறுசுவை தோழர் மற்றும் தோழிகள் அனைவருக்கும் சௌமியன் நின் வணக்கம். கடந்த திங்கள் கிழமை அன்று காலை எட்டு மணி பத்து நிமிடத்தில் மூன்று கிலோ எடை உடன் சுக பிரசவத்தில் பாப்பா பிறந்து உள்ளார். எனது மனைவி மற்றும் பாப்பா இருவரும் நலம் .இன்று மருத்துவமனை இல் இருந்து இல்லம் வந்தார்கள்.அவர்களது அம்மா இல்லத்தில் காரைக்குடி அருகில் தேவகோட்டை எனும் ஊரில் உள்ளார்கள் என்பதை மகிழ்ச்சி உடன் பதிவு இடுகிறேன்.தங்கள் ஆலோசனைகள் மற்றும் பிரார்த்தனைகளுக்கு இந்த தருணத்தில் எங்களது நன்றிகள் .எனது மனைவிக்கு தாய்பால் நன்கு சுரக்க எடுக்க வேண்டிய உணவுகள் மற்றும் எங்க பாப்பாக்கு அழகான பெயர் சொல்லுங்கள் மற்றும் உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்கள் வேண்டும் உங்கள் தோழர் சௌமியன்
இந்த நல்ல தளத்தை நடத்தும் அறுசுவை பாபு சாருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்...

சௌமியன் அண்ணா!!! வாழ்த்து வாழ்த்து
உங்கள் குட்டி இளவரசிக்கும் வாழ்த்துக்கள் மற்றும் ஆசிகள்...,
தாய்ப்பால் சுரக்க நம்ம தளத்தில் தேடி பாருங்க நிறைய இருக்கு, வெள்ளபூடு, வெந்தயம் சாப்பிட்ட தாய்பால் ஊறும்., பெயர்கள் வைக்க ஏதும் எழுத்து செலக்ட் பண்ணி இருக்கீங்களா, இருந்தா சொல்லுங்க பெயர்கள் சொல்ல வசதியா இருக்கும்/.

http://www.arusuvai.com/tamil/node/5108
http://www.arusuvai.com/tamil/node/11916
http://www.arusuvai.com/tamil/node/21350

அன்புடன் அபி

வாழ்த்துக்கள் சௌமியன்... நல்ல செய்தி சொல்லிருகீங்க... :) உங்க குட்டி பாப்பா நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் எல்லா வளங்களும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்...

வித்யா பிரவீன்குமார்... :)

நிலவொன்று பூமியில் பிறந்திருக்கிறதா?
காண கண்கள் கோடி வேண்டும்
வாய்ப்பில்லை என்பதால்
சிறியவருக்கு ஆசிகள்.. பெற்றோர்க்கு வாழ்த்துக்கள்....

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ரொம்ப ரொம்ப சந்தோஷம் சௌமியன் வாழ்த்துக்கள். தாயும் சேயும் நலமாக இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறோம். எங்களுடன் தகவல் பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி சௌமியன்;)

தாய் நலமாக இருக்க மகப்பேறுக்கு முன் என்னெல்லாம் சாப்பிட்டாங்களோ அதையே தொடர்ந்து சாப்பிடச்சொல்லுங்க. எண்ணெய் ஆகாரம் குறைத்துக்கொள்ளச்சொல்லுங்கள். உணவிலும் எண்ணெய் குறைத்துக்கொள்வது நலம். இழந்த இரத்தம் மீற்க போதிய ஆகாரமும் ஓய்வும் மிக அவசியம். வுமன்ஸ் ஹார்லிக்ஸ் இந்த நேரத்தில் எடுத்துக்கலாம். சத்தான ஆகாரம் சாப்பிட்டு தாய் முதலில் தன்னை கவனித்துக்கொள்ளனும் சேய் தன்னால வளர்ந்துடும்;-)

Don't Worry Be Happy.

வாழ்த்துக்கள் சௌமியன்...தாயும், சேயும் பல்லாண்டு நலமாக வாழனும்...உங்க மனைவிக்கும் என்னுடைய வாழ்த்துக்களை சொல்லுங்க..

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

சகோதரர் செளமியன் மற்றும் உங்கள் மனைவிக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். பூமிக்கு வந்த குட்டி தேவதை நோய் நொடியற்ற ஆரோக்கிய வாழ்க்கை வாழ அன்போடு வாழ்த்துகிறேன்.

உங்கள் மனைவிக்கு உணவில் அதிகளவு பூண்டு சேர்த்து தர சொல்லுங்கள். சுறா, சுண்டைக்காய், அரைக்கீரை தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கு மிகவும் அத்தியாவசியமானது.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மிக்க மகிழ்ச்சி சௌமியன், வாழ்த்துக்கள். குழந்தையும் தாயும் நலமுடன் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அன்புடன்
THAVAM

விண்ணிலிருந்து கடவுள் உங்களுக்கு கொடுத்த பரிசு - உங்க செல்லகுட்டி
மண்ணிலிருந்து நாம் அவருக்கு செலுத்தவேண்டியது - நம் நன்றிகள்

உங்கள் அழகிய தேவதைக்கு என் உளம் கனிந்த வாழ்த்துக்களும் ஆசிகளும். உங்க மனைவிக்கும் எங்கள் வாழ்த்துக்களை சொல்லிடிங்க. பாப்பாவை பத்திரமா பார்த்துக்கோங்க.

கல்பனா அவர்கள் சொன்ன மாதிரி பூண்டு, சுறா, சுண்டைக்காய், அரைக்கீரை மற்றும் திருக்கை மீன், ஆட்டு நெஞ்செலும்பு சூப் கூட சேர்க்கலாம்.

பாப்பா பேருக்கு முதல் எழுத்து தேர்ந்தேடுத்திட்டு சொல்லுங்க...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

சௌமியன் அண்ணா மற்றும் உங்கள் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள் குட்டி பொண்ணுக்கும் வாழ்த்துக்கள்
பெயரின் முதல் எழுத்து சொன்னால் பெயர்கள் சொல்லலாம்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

சௌமியன் அண்ணா உங்களுக்கும் உங்க மனைவிக்கும் வாழ்த்துக்கள். குட்டி தேவதை எல்லா வளமும் பெற்று ஆரோக்கியமாக வாழ என் வாழ்த்துக்கள்.

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

மேலும் சில பதிவுகள்