வால்ஹேங்கிங்

தேதி: April 27, 2012

5
Average: 4.2 (13 votes)

விருப்பமான நிறங்களில் பேப்பரை கட் செய்து வைக்கவும். பேப்பரை கட் செய்து மடிப்பது பற்றி இந்த லிங்கில் பார்க்கவும். http://www.arusuvai.com/tamil/node/15022

 

விருப்பப்பட்ட நிறங்களில் கலர் பேப்பர் - A4 சைஸ்
ஒரு கத்தி

 

முதல் வரியில் 20, இரண்டாவது வரியில் 19, மூன்றாவது வரியில் மீண்டும் 20 என வருமாறு சேர்க்கவும்.
மூன்று வரிகள் சேர்த்ததும் நான்காவது வரியில் மூன்று ப்ளூக்கு பிறகு ஒரு மஞ்சள் சேர்க்கவும். ஒவ்வொரு 3 ப்ளுவிற்கு பிறகு ஒரு மஞ்சள் சேர்க்கவும். அடுத்தடுத்த வரிகள் வரும்போது மஞ்சள் நிறங்களை டைமன் வடிவில் சேர்க்கவும்.
இதே போல் 22 வரிகள் சேர்த்து வைக்கவும்.
முடிவில் மஞ்சள் நிற முக்கோணங்களை கொண்டு பார்டராக சேர்க்கவும்.
இப்பொழுது அப்படியே பின்னால் திருப்பி அடிப்பாகத்தில் முக்கோணங்களை திருப்பி சேர்க்கவும்.
ஜாடியை இரண்டு ஓரங்களிலும் கம் தடவி கனமான அட்டையில் அல்லது சார்ட்டில் ஒட்டவும். ஜாடியின் அடிப்பாகத்திலும் கம் தடவி சார்ட்டில் ஒட்டவும்.
அட்டையில் பின்னால் இரண்டு பக்கமும் ஒட்டும் டேப் கொண்டு சுவற்றில் ஒட்டவும். ஜாடியில் பூக்கள் போட்டு வைக்கவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வால்ஹேங்கிங் ப்ளவர்வேஸ் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு ரேணுகா. நீங்களும் இந்த மாதிரி 3 க்ராஃப்ட் செய்து காண்பிச்சுட்டீங்க. எதாவது கண்டிப்பா ஒன்று செய்துப்பார்க்கனும். இந்த வால்ஹேங்கிங் செய்ய எத்தனை முக்கோணங்கள் தேவைப்படும்.

அன்பு ரேணுகா,

பாசியில் பின்னிய வேலைப்பாடுன்னு நினைச்சேன். பேப்பரில் இத்தனை அழகாக டிஸைன் பண்ணியிருப்பது பிரமிப்பா இருக்கு.

அருமை, அருமை!!

அன்புடன்

சீதாலஷ்மி

hi Renuka...
its so beautiful... which type paper need to made this..
rompa rompa alaga irukupa...

by
lavanyapravinkumar

சுபர்ப், சுபர்ப் & சுபர்ப் ரேணு. அறுசுவைல வரும் என்று எதிர்பார்த்தேன். ;)
நிறத்தெரிவு பொருத்தமா அமைஞ்சிருக்கு. டிசைனும் அப்பிடி இருக்கு. piupiu skirt டிசைன் போல இருக்கு. அழகு. ;)

‍- இமா க்றிஸ்

யப்பா கண்ணக்கட்டுதுங்க எப்போ நாங்க இதெல்லாம் செய்யப்போறோம்னு தெரியலை...அற்புதமா இருக்குங்க பாத்துட்டே இருக்கலாம்..வெகு அழகு! வாழ்த்துக்கள்.

Don't Worry Be Happy.

பார்த்ததும்,பெயிண்டிங் என்றே நினைத்தேன்,ரொம்ப அழகா இருக்கு,கலர் காம்பினேஷன் சூப்பர்ப்.

ஹாய் வினோஜா எப்படிப்பா இருக்கீங்க?நீங்க ஒன்னு செய்து பார்த்தீங்கன்னா அப்பறம் விட மனசு வராது.இது கஷ்டமும் இல்லைப்பா பேப்பர் மடிப்பது மட்டும் தான் வேலை,சேர்ப்பது ரெம்ப டக்குன்னு முடிஞ்டிடும்.
வினோ நீங்க கேட்ட அண்ண பறவை நான் விரைவில் அனுப்பறேன்.கொஞ்சம் பிஸிப்பா.

சீதாம்மா உங்கள் பாராட்டை பார்க்க ரெம்ப சந்தோஷமா இருக்கு,ரெம்ப நன்றி

லாவன்யா ரெம்ப நன்றி.இது ஏ4 சைஸ் கலர் பேப்பரில் செய்தேன்.

இமா முதலில் நான் அறுசுவைக்குதான் அனுப்பினேன்.அது என்ன piupiu skirt கொஞ்சம் சொல்லுங்களேன்

ஜெயா உங்க வாழ்த்துக்கு நன்றிப்பா,அட்ரஸ் தாங்க வீட்டுக்கே அனுப்பி வைக்கிறேன், பார்த்துகிட்டே இருக்கலாம்

ரீம் உங்க வாழ்த்துக்கு நன்றிப்பா.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

very nice

அழகு! அழகு!! அழகு!!...... கொள்ளை அழகு.....
பார்க்க ரொம்ப அற்புதமா இருக்குங்க......
இது பேப்பர்ன்னு என்னாலா நம்பவே முடியலை...... முகப்பில் பார்க்கும் போது
வொயறால் பின்னியதுன்னு நினைச்சேன்...... அசத்திடீங்க..... வாழ்த்துக்கள்..... :)

Hi renu excellent superrr ,i am new member in this site,eppadinga ungala mattum mudiyuthuuuu

மேடம், இந்த வால் ஹாங்கிங் சூப்பர், ஆனால் எனக்கு அன்னப்பறவை செய்வது எப்படி என்று சொல்ல முடியுமா??

கிருபா நன்றிப்பா

தீபா உங்கள் பாராட்டை பார்த்து சந்தோஷமா இருக்கு,ரெம்ப நன்றிப்பா,என் அண்ணியின் பெயரும் தீபா தான்

ஐ மீண்டும் இன்னொரு தீபா,ரெம்ப நன்றிப்பா

பொன்னி மிக்க நன்றிப்பா,கட்டாயம் அண்ணப்பறவை அனுப்பி வைக்கிறேன்.எல்லாம் செய்து போட்டோ எடுத்தாச்சு,இன்னும் கண்னுக்காக வெயிட்டிங்,

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

வினோ எப்படி இருக்கீங்க?ரெம்ப சாரிப்பா பதில் சொல்ல மறந்துட்டேன்.இதுக்கு 450ல் இருந்து 500 முக்கோனம் தேவைப்படும்.

அண்னப்பறவை கேட்டீங்க அல்லவா செய்துட்டேன் ஆனால் இன்னும் கண்ணு மட்டும் வைக்கல.இந்த வீக்கெண்ட் வாங்கி முழு வேலையையும் முடித்து அனுப்பி வைக்கிரேன்.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

வணக்கம் ரேனுகா,
நான் இதற்க்கு புதிது உங்களோட எல்லா படைப்புகளுமே நல்லா இருக்குது எளிதா இருக்கு......நன்றி...

எத்திசையும் உனக்கு எதிரானாலும்
ஏன் தயக்கம் புதிதாய் உருவாக்கு.

குமாரி ரெம்ப நன்றிப்பா , உங்கள் பதிவை பார்த்து ரெம்ப சந்தோஷமா இருக்கு, நன்றி...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

hi renuka,
ur ll projects r very amazing i loved it and now its self i tried paper flowers. thanks for u