பேப்பர் பருப்பு கூடு

தேதி: May 2, 2012

5
Average: 4.2 (10 votes)

 

சார்ட் பேப்பர்
கிஃப்ட் பேப்பர்
பெவிக்கால்
லேஸ்
ரிப்பன் லேஸ்
கத்தரிக்கோல்
Ohp ஷீட்

 

சார்ட் பேப்பர், கிஃப்ட் பேப்பர் இரண்டையும் ஒரே அளவில் வட்டமாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். மற்றவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.
சார்ட் பேப்பரில் பெவிக்கால் தடவி அதன் மேல் கிஃப்ட் பேப்பரை ஒட்டி நன்கு காயவிடவும்.
பின்னர் அந்த வட்டமான பேப்பரை இரண்டாக மடித்து அரைப்பாகமாக வெட்டி வைக்கவும்.
அதில் ஒரு பேப்பரை எடுத்து படத்தில் உள்ள கூம்பு போல் மடக்கி ஓரங்களை பெவிக்கால் தடவி ஒட்டி வைக்கவும்.
கூம்பின் அடி சுற்றளவுக்கு லேஸை நறுக்கி எடுத்துக் கொண்டு, கூம்பின் ஒரத்தை சுற்றி இந்த லேஸை வைத்து ஸ்டாஃப்ளர் பின் போட்டுக் கொள்ளவும்.
ரிப்பன் லேஸை 5 செ.மீ அளவில் 5 துண்டுகள் நறுக்கி வைக்கவும். அவை ஒவ்வொன்றையும் இரண்டாக மடித்து ஒன்றன் மேல் ஒன்று வைத்து ஊசி நூல் கொண்டு தைக்கவும். ஒரு சிறிய பூவாக வந்ததும் கூம்பின் மேல் பகுதிக்கும் சற்று கீழே பெவிக்கால் தடவி இந்த பூவை ஒட்டவும். இதேப்போல் மற்றொன்று செய்து வைக்கவும்.
மேற்சொன்ன முறையில் சற்று உயரமாக செய்தது இது. இந்த பருப்பு கூடு உங்களுக்கு எந்த உயரத்தில் வேண்டுமோ அதற்கு ஏற்றாற் போல் அளவைக்கூட்டி கொள்ளலாம். இந்த உயரமான கூம்பின் முன் பக்கத்தில் சதுரமாக வரைந்து அந்த பகுதியை மட்டும் நறுக்கி எடுத்துவிடவும்.
இந்த ஓட்டையை மறைப்பதற்கு ohp ஷீட்டை சதுர அளவை விட கால் இன்ச் கூடுதலாக நறுக்கி அதனை முன்பக்கத்தில் ஒட்டவும். ohp ஷீட் ஓரங்களை கிலிட்டர்ஸால் அலங்கரிக்கவும்.
மிகவும் எளிமையான முறையில் செய்யக்கூடிய பருப்புக்கூடு தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

இப்பிடியெல்லாம் இருக்கிறதா டீம்!

என்னவென்று புரியாமல் செய்முறை படித்துக்கொண்டே வந்தேன். மனதில் இருந்த சந்தேகம் எல்லாம் கேட்கத் தேவை இல்லாமல் அழகாக விபரம் கொடுத்திருக்கிறீர்கள். கைவினையும் அழகாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

‍- இமா க்றிஸ்

எங்கள் வீட்டில் எவர்சில்வரில் இருக்கும்.ஆனால் அதன் பேர் கூட தெரியாது.அருமையா பேப்பரில் செய்து,ரெடிமேட் பூ வைத்து,OHB ஷீட்டில் சீ-த்ரூ என பல ஐடியாக்களுடன் அசத்தலான கைவினை.ஸ்ட்ரைப்டு ஷீட்டில் செய்திருப்பது இன்னும் அழகு.வாழ்த்துக்கள் அறுசுவை டீம்.

சூப்பரா இருக்கு :) ஆனா இது என்னன்னு எனக்கு தெரியல. நீங்க சொல்லி தான் சடங்கு பற்றி தெரிந்தது. அழகா இருக்கு பார்க்க. வழக்கம் போல நல்ல நேர்த்தியான கைவேலை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா