பிரசவத்துக்கு பின் ரத்த போக்கு

அன்பு தோழிகளே, எனக்கு பிரசவம் ( c - section ) முடிந்து 57 நாட்கள் ஆகிறது. ஆனால் இன்னும் ரத்த போக்கு நிற்க வில்லை. எனக்கு தெரிந்தவர்கள் அனைவரும் இப்படி எல்லாம் நடக்காது என்று சொல்கிறார்கள்.
இது போல் யாருக்கும் நடந்துள்ளதா? இது நார்மலா? ப்ளீஸ் உங்கள் அனுபவங்களை சொல்லுங்களேன். இதில் ஏதேனும் பிரச்சினை என்றால் உங்களுக்கு தெரிந்த மருத்துவ வழிகளையும் கூறுங்களேன் plz .

வாழ்த்துக்கள் பா, குழந்தை நலமா?
நீங்க மருத்தவரிடம் போகலையா? 45 நாள்லில் உங்களுக்கு checkup வர சொல்லி இருப்பங்கள்ள, போகலையா, டாக்டர் த சொன்னதுக்கு என்ன சொன்னாங்க, பொதுவா c section பண்ணா சீக்கிரம் ரத்த போக்கு நின்றும் நு சொல்வாங்க, எனக்கு சரியா தெரியல , ஆனால் எனக்கு 50 நாட்கள் இருந்தது (normal delivery), நீங்க எவ்ளோ முடியுமோ அவ்ளோ சீக்கிரம் டாக்டர் த போறது தான் நல்லது, என் தோழி ஒருவர் சொன்னார் பொரி கடலை சாபிட்டா சீக்கிரம் நின்றும் நு சொன்னங்க, அது எந்த அளவு உணமைன்னு தெரியல பா, சீக்கிரம் மருத்துவரிடம் செல்லுங்க,

அன்புடன் அபி

HAI THOZHIYE,KUZHANDHAI EPPADI IRUKIRATHU NALAMA,BAYAPADATHINGA,ORU SILARKU 60 NATKAL RATHAPOKU IRUNTHU THANAGA NIRKUM, UNGALUKU MIGAVUM BAYAMAGA IRUNTHAL DOCTARIDAM SELLUNGAL

வாழ்த்துக்கள். எனக்கும் (c section) 50 நால் இருந்தது. நானும் பயதேன். டாக்டரிம் போனேன். சரி ஆயிவிட்டது. கவலை படாதிர்கள்

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் நன்றி, நான் நேற்று டாக்டரிடம் சென்றேன். Pause tablet எடுத்து கொள்ள சொன்னார். அதற்கு பிறகு ப்ளீடிங் நின்று விட்டது. டாக்டர் இது சில பேருக்கு நார்மல் தான் என்று சொன்னார்.
மேலும் டெலிவரிக்கு பிறகு கட்டாயம் கால்சியம், அயன் டேபிலேட்ஸ் எடுத்து கொள்ள சொன்னார்.

அன்பு அபி, குழந்தை நலமாகவே இருக்கிறாள். பகல் நேரம் முழுவதும் தூங்கி கொண்டே இருப்பாள், ஆனால் இரவு முழுவதும் தூங்காமல் முழு எனர்ஜியுடன் விளையாடி கொண்டே இருக்கிறாள், அவளுடன் நானோ என் அம்மாவோ அமர்ந்து இரவு
முழுவதும் பேசி கொண்டே இருப்போம்.

நன்றிகள் பல.
மகாசங்கர்

மேலும் சில பதிவுகள்