தேதி: May 5, 2012
கனமான அட்டை
ஐஸ்க்ரீம் ஸ்டிக் - 10
ஜர்தோஸி - சில்வர் நிறம்
க்ளூ
ஃபேப்பரிக் பெயிண்ட் - கருப்பு மற்றும் கோல்டுநிறம்
தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். அட்டையின் இருப்பக்கமும் கருப்புநிற ஃபேப்பரிக் பெயிண்ட் அடித்து காய விடவும்.

10 ஐஸ்க்ரீம் குச்சியில் கோல்டுநிற பெயிண்ட் செய்து காயவிடவும்.

இப்போது அட்டையின் நடுவில் பென்சிலால் 10 செ.மீ அளவில் வட்டம் வரைந்து அதன் நடுவில் உங்களுக்கு விருப்பமான டிசைன் வரைந்துக் கொள்ளவும். இதில் ஓம் என்ற எழுத்தை வரைந்துள்ளோம். அந்த எழுத்தின் மேல் க்ளூவால் முதலில் வரையுவும்.

ஜர்தோஸியை அந்த எழுத்தின் வடிவத்திற்கேற்ப வளைத்து ஒட்டவும். இதுப்போல் இரண்டு லேயர் கொடுக்கவும்.

ஓம் எழுத்தை ஜர்தோஸியால் ஒட்டி முடித்ததும், 3 செ.மீ அளவில் ஜர்தோஸியை 4 துண்டுகள் நறுக்கி வட்டத்தின் 4 பக்க நடுப்பகுதியில் ஒட்டவும். ஜர்தோஸியை 1 1/2 செ.மீ அளவில் 36 துண்டுகள் நறுக்கவும். மீதியுள்ள இடங்களில் இந்த ஜர்தோஸியை இடைவெளி விட்டு க்ளூ தடவி ஒட்டி விடவும்.

ஐஸ்க்ரீம் குச்சியை இந்த அட்டையின் மேல் படத்தில் உள்ள வடிவத்தில் ஒட்டி முடிக்கவும்.

மீதி உள்ள ஐஸ்க்ரீம் குச்சிகளையும் ஐங்கோணம் வடிவில் ஒட்டி வைக்கவும். அட்டையில் ஒட்டிய ஐங்கோணத்திற்கு எதிர்ப்புறமாக செய்து வைத்துள்ளதை ஒட்டவும். இப்போது மேலும், கீழும் கூர்ய முனை இருக்கும். மேலுள்ள துளையின் வழியாக சுவற்றில் மாட்டி வைக்கலாம். ஐர்தோஸியை கொண்டு எளிமையாக செய்யக்கூடிய வால்ஹேங்கிங் இது.

Comments
டீம்
வாவ் ரொம்ப சூபெரான சிம்பிள் வொர்க் ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள் டீம் by Elaya.G
சிம்பிள் ஜர்தோஸி வால்ஹேங்கிங்,
வாவ்...குழந்தைகளும் செய்யக்கூடிய ரொம்ப எளிய அழகான குறிப்பு.”ஓம்” எழுத்தின் வடிவை ரொம்ப அழகா வரைந்து,வடிவம் மாறாமல் அழகா ஜர்தோஸியை ஒட்டியிருப்பது பாராட்டுக்குரியது.வாழ்த்துக்கள் அறுசுவை குழு.
அழகான வேலைப்பாடு!
நிஜமாவே சிம்பிள், ஆனால் ரொம்ப அழகான வேலைப்பாடு! குறைவான பொருட்களை வைத்து திருத்தமா சொல்லி தந்திருக்கிங்க. வாழ்த்துக்கள் டீம்!
அன்புடன்
சுஸ்ரீ
அழகான குறிப்பு
ரொம்ப எளிமையான அழகான குறிப்பு.......................
வாழ்க வளமுடன்
பவி
டீம்
அன்பு டீம்,
நாமும் செய்து பார்க்கலாமே என்று ஆசையைத் தூண்டும் சிம்பிளான அழகான குறிப்பு.
அருமையாக செய்திருக்கீங்க.
வாழ்த்துக்கள்
அன்புடன்
சீதாலஷ்மி
வெரி கியூட்
டீம்... சூப்பர் கியூட் ஒர்க் :) என்னிடமும் ஜர்தோசி நிறைய இருக்கு, அவசியம் செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஜர்தோசி சுவரலங்காரம்
ரொம்ப அழகா இருக்கு டீம்.
- இமா க்றிஸ்
Zardosi work
Hi friends, i'm kumu from canada. i really love to do this zardosi work in my sarees.Where can I get these zardosi work materials in chennai?
do or die