laparoscopy சந்தேகம்

எனக்கு laparoscopy செய்ய சொல்லி இருக்கிறார்கள். பயமாக உள்ளது. இது பற்றி தெரிந்தவர்கள் சொல்லுங்கள் pls

தோழி லேப்ரோஸ்கோபி செய்வதற்கு டாக்டர் எப்போது நாள் சொல்லி இருக்கிறார்களோ ,அதற்க்கு முந்தைய நாள் மாலை நேரத்தில் அங்கேயே அட்மிட் ஆகின்ற மாதிரி இருக்கும் ,அன்றிரவு மட்டும் கொஞ்சமா சாப்பாடு எடுத்துக்கணும் .அதுக்கப்புறம் அவங்க ஒரு பத்து மணிக்கு வயிறு சுத்தமா கிளீன் ஆக மாத்திரை தருவாங்க ,அது எதற்க்கு என்றால் அடுத்த நாள் லேப்ரோஸ்கோபி செய்வதற்கு வயிறு பகுதி காலியாக இருக்க வேண்டும் ,ஏன் என்றால் (மயக்கமருந்து கொடுக்கும் வயிற்றில் ஏதேனும் இருந்தால் அப்போது அவை மேலாக வரும் என்பதால்) ,அடுத்த நாள் உங்கள் மருத்துவர் சொன்ன நேரத்தில் ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்து சென்று அனஸ்தீஷியா (மயக்க மருந்து)கொடுத்து லேப்ரோஸ்கோபியை முடிப்பார்கள் ,அன்றைய தினம் மட்டும் வலி கொஞ்சம் அதிகம் இருக்கும் ,பயப்பட வேண்டாம் ,தாங்கி கொள்ளலாம் ,அன்று முழுவதும் நீராகாரங்கள்(ஜூஸ் ,தண்ணீர் ) மட்டுமே எடுத்துக் கொள்ள சொல்வார்கள், பின்னர் அன்று இரவே வீட்டிற்கும் செல்லலாம் ,fever அல்லது அதிக வலி என்று ஏதேனும் இருந்தது என்றால் மட்டும் மருத்துவர் ஆலோசனையின் பேரில் அன்று இரவும் மருத்துவமனையிலேயே தங்கிக் கொள்ளலாம்.,நான் எனக்கு நீர்க்கட்டி பிரச்சனைக்காகவே லேப்ரோஸ்கோபி செய்தேன் ,நீங்கள் உங்களுக்கு எதற்கு என்று குறிப்பிடவில்லையே ,இப்போது ஆபரேஷன் முடிந்து இருமாதங்கள் எனக்கு ஆகி இருக்கின்றது ,ஆறு மாதத்திற்குள் கருத்தரிக்கும் என்று என் மருத்துவர் கூறி உள்ளார் ,மேலும் நீங்கள் கருக்குழாய் அடைப்பு டெஸ்ட் (HSG(HYSTRO SALPINO GRAM))
முறையில் கருக்குழாயில் அடைப்பு இருக்கிறதா என தெரிந்துக் கொள்ளலாம் ,இரண்டாயிரம் ரூபாய் செலவாகும் ,ஒருவேளை அடைப்பு இருந்தால் அதையும் லேப்ரோஸ்கோபி முறையிலேயே நீக்கி விடுவார்கள் , எதற்கும் பயம் வேண்டாம் ,எல்லாம் நல்லதாகவே நடக்கும் ,உங்கள் மருத்துவரிடம் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள் ...விரைவில் தாயாக வாழ்த்துக்கள்.நன்றி

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

தோழி உங்களுக்கு நீர்க்கட்டி பிரச்னை இருந்ததா? அதற்கு என்ன செய்தீர்கள்? எனக்கு கொஞ்சம் கூறுங்கள் தோழி ஏனெனில் எனக்கும் நீர்க்கட்டி இருக்கிறது மார்ச் மாதம்தான் ஸ்கேன் மூலம் தெரிந்தது,melmet500sr என்ற மாத்திரை குடுத்தார்கள்,நீர்கட்டியினால் எனக்கு கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் மாதவிடாய் ஆகவில்லை,இந்த மாத்திரை சாப்பிட்ட பின் மாதவிடாய் வந்தது.இந்த மாதம் நாளை தான் மாதவிடாய் தேதி,இந்த மாதம் ப்ரெக்னன்ட் ஆக வாய்ப்பு உள்ளதா தோழி?எனக்கு இது மிகவும் வேதனை ஆக உள்ளது.தக்க ஆலோசனை கூறவும் தோழி,பதில்க்கு காத்து இருகிறேன் தோழி
என்றும் அன்புடன்
சரண்யா

உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி பாரதி. எனக்கு டாக்டர் hsg report பார்த்து விட்டு adhesion இருக்கிறது என்று சொல்லி அடுத்த மாதம் laparoscopy பண்ண சொல்லி இருக்கிறார்கள்.எனக்கு ஒரு சந்தேகம் glucose ஏத்துவதற்கும் injection கும் ஒரு tube மாதிரி(venflon) கையில் வைப்பார்களே அது ஒவ்வொரு முறை glucose ஏத்தும் பொழுதும் injection போடும் பொழுதும் ரொம்ப வலிக்குமா தோழி

ஒரு முறை மட்டுமே அந்தக் குளுகோஸ் போடும் நரம்புஊசி (டியூப் ) உடன் இணைத்து நமது கையில் ஏற்றுவார்கள் ,முதலில் ஏற்றும் போது கொஞ்சம் வலி இருக்கும் ,பின்னர் அப்படி எதுவும் ரொம்ப வலிக்காது ,ஆனால் எனக்கு அதனை கையிலே 14 மணி நேரத்திற்கும் மேலாக விட்டு விட்டு க்ளுகோஸ் ,மற்றும் தேவையான மருந்துகள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை போட்டு கொண்டே இருந்தார்கள் ,கொஞ்சம் ஒரு மாதிரி நாம் மயக்க சூழ்நிலையிலே இருப்பதால் ஏதோ ஒன்று நம்மை நம் கையை இறுக பற்றிக்கொண்டு தொல்லை கொடுப்பது போல ,இருப்பது மாதிரி தோன்றும் ,ஆனால் ஒவ்வொரு முறையெல்லாம் ஏற்றும் போதும் வலிக்காது ,எனக்கு அந்த குளுகோஸ் ஏற்றும் நரம்பு ஊசியை எப்பொழுது எடுப்பார்கள் என்றே இருந்தது ,அந்த விதத்தில் தான் எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது ,மற்ற படி ஒன்றுமில்லை ,நீங்கள் பயப் படாதீர்கள் தோழி .

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

பிரச்சனை சிறிய அளவிலே இருந்தால் மாத்திரை கொடுத்து கரைப்பார்கள் ,இல்லையேல் லேப்ரோஸ்கோபி செய்ய பரிந்துரைப்பார்கள் ,அப்படி சொன்னார்கள் என்றால் காலந்தாழ்த்தாமல் அதை செய்து சொல்லுங்கள் ,நான் கிட்ட தட்ட எனது நீர்க்கட்டி பிரச்சனைக்கு இரண்டு வருடங்களுக்கு மேலாக மாத்திரை மருந்து ,மற்றும் கருமுட்டை வளர விலையுயர்ந்த பல இன்ஜெக்ஷன்கள் எடுத்து எதுவும் நடக்கவில்லை , கருமுட்டை வளர்ச்சி கொஞ்சம் கூட சரியாக இல்லை ,இப்பொழுது இரு மாதங்கள் முன் தான் எனது மருத்துவர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் லேப்ரோஸ்கோபி செய்து கொண்டேன் ,அதில் அனைத்து மேற்சொன்ன படி அனைத்து நீர்கட்டிகளையும் உடைத்து விட்டார்கள் ,இப்பொழுது கருமுட்டை நன்றாக உருவாகி வெளியாகியும் உள்ளது ,நீங்கள் ஒருவேளை மருத்துவர் சொன்ன மாத்திரைகளை போட்டு வந்து நாள் தள்ளி போயிருந்தால் ,மருத்துவரிடம் சென்று டெஸ்ட் செய்து கொள்ளுங்கள் ,தாயாக வாழ்த்துக்கள் ..

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

ஆலோசனைக்கு நன்றி தோழி, எனக்கு கடந்த மாதம் மாதவிடாய் வந்த பிறகு ஸ்கேன் செய்து நீர்கட்டியின் தன்மையை பரிசோதிதேன் அப்போ டாக்டர் இப்போ ஏதும் பிரச்னை இல்லைன்னு சொன்னங்க தோழி,எனக்கு இந்த மாதம் நாள் தள்ளி போயி இருக்கு இது positive ஆக இருக்கனும் ன்னு நினைகரன் தோழி பாக்கலாம் எதுனாலும் ஏத்துக்க வேண்டியது தான்
அன்பே சிவம்,
சரண்யா

Dear mam sir,
mam enkku lapariscopy panna sonnaing ennakku veruppam ila veravazhai erukka solluga pls mam sir

எனக்கு laproscopy பண்ணினோம் no pain
But கர்ப்பம் தரிக்க வாய்ப்பு இருக்க

Enakum laprascopy panni first time period agi date 7days thalli poyiruku positive kidaika chance iruka,backpain and legpain matum romba athigam iruku.31day la egg release aachu.epo pregnancy test pakkalam

Un kuda 100 varusam vazhanum...Nalla irupom Nalla irupom Elarum Nalla irupom

என்ன காரணத்துக்காக laproscopy பண்ணுனிங்க.

மேலும் சில பதிவுகள்