இரட்டை குழந்தைகள்

வணக்கம் சகோக்களே
என் மனைவிக்கு நான்காவது மாதம் முடிந்து ஐந்தாம் மாதம் துவங்கியுள்ளது இன்நிலையில் நேற்று அல்ட்ராசவுண்ட் செக்கப் செய்தோம் அதில் இரட்டை குழந்தைகள் என்று தெளிவு செய்யப்பட்டது. இதன் இடையே மனைவியின் வீட்டில் சிலர் இரட்டை குழந்தை என்றால் பிரசவத்தின் போது மிகவும் கஷ்டமாக இருக்கும் அப்படி இப்படி என்று கூறியுள்ளனர் என் மனைவி மிகவும் பயந்த நிலையில் இருக்கிறார். எங்களுக்கு இதுதான் முதல் பிரசவம் .

தயவு செய்து சகோதரிகள் இரட்டை குழந்தைகள் பிரசவத்தைப் பற்றி எடுத்துக் கூறினால் எங்களுக்கு தெளிவு பிறக்கும் என் மனைவிக்கும் மனக்குழப்பம் அகலும். இருவரும் தற்சமயம் பஹ்ரைனில் வசித்து வருகிறோம் அடுத்த வாரம் தாயகம் செல்லும் ஏற்பாடு உள்ளது

வணக்கம் தினேஷ்குமார், வாழ்த்துக்கள் உங்கள் மனைவிக்கு,,, நானும் என் சகோதரியும் இரட்டை பிறவி தான், என் அம்மா எந்த கஷ்டமும் இல்லாமல் சுக பிரசவத்தில் எங்களை பெற்றெடுத்தார். இது ஒரு வரம் ,,,,, சிறந்த கவனிப்பும் மன தைரியமும் நல்ல உடல் ஆரோக்கியமும் தான் தேவை.

முதலில் வாழ்த்துக்கள். கௌரி சொல்வது மிகவும் சரி ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் வரம் இது உங்களுக்கு கிடைச்சிருக்கு.எங்க சொந்தத்தில் இரட்டை குழந்தை இருக்காங்க. அவங்க சுக பிரசவத்தில் பிறந்து இப்போது 20வயது ஆகிறது. இருவரும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்

அப்படியெல்லாம் இல்லை..நிறைய பேர் இரட்டை குழந்தைகளுக்கு ஆசைப்படுவோம் ஆனால் லக் இருக்கணும்..பிரசவத்தை பொருத்து நீங்க அது பத்தி கவலை படாதீங்க மருத்துவம் முன்னேறி விட்டது நல்லபடியா எல்லாம் நடக்கும்..குறிப்பிட்ட காலம் வரை கொஞ்சம் வளர்க்க கஷ்டம் ஆனால் ஒரு 1.5 வயது ஆனாலே ரொம்ப அழகாக இருக்கும் சேர்ந்து விளையாடவும் செய்வார்கள்.எங்கள் குடும்பத்தில் நிறைய இரைட்டையர்கள் உண்டு

வணக்கம் தினேஷ்குமார்
வாழ்த்துக்கள் இரு முத்துகலை ஒன்றாக பெற்று எடுக்க போகிற உங்கள் மனைவிக்கு,மற்றவர்கள் சொல்வதை இந்த மாதிரி நேரங்களில் காதில் போட்டு கொள்ள வேண்டாம்,என் தோழிக்கு ஒரு வருடம் முன்புதான் இரட்டை குழந்தைகள் சுக பிரசவத்தில் பிறந்தன,ரெண்டு குழந்தைகளையும் நன்றாக கவனித்து கொள்கிராகள்,இரட்டை குழந்தையில் எந்த பிரச்சனையும் இல்லை,நீங்கள் உங்கள் மனைவியை நன்றாக பார்த்து கொள்ளுங்கள்,ஆறுதலான வார்த்தைகளை பேசுங்கள்,நல்ல இசையை கேட்க சொல்லுங்கள்,சிக்கன் மட்டன் தவிர்த்து மீன் உட்கொள்ள சொல்லுங்கள்,மனதில் இரண்டு முழு நிலாக்களை மட்டுமே நினைக்க சொல்லுங்கள், வாழ்த்துக்கள்

நன்றி சகோக்களே ....
நான் நல்ல மன தைரியத்தை கொடுக்கிறேன் என் மனைவிக்கு இறைவனின் அருள் என்றென்றும் தாய்மை உள்ளத்திற்க்கு கிட்டட்டும்

மேலும் சில பதிவுகள்