6 மாத குழந்தைக்கு பசி எடுக்க என்ன செய்ய வேண்டும்?

எனது குழந்தைக்கு 6 மாதம் முடிந்து விட்டது.தாய்ப்பால் குறைந்து விட்ட காரணத்தினால் formula milk குடுக்கிறேன்.ஆனால் அவள் திட உணவையும் சாப்பிட மாட்றா.formula milk யும் குடிக்க மாட்றா. அழுது கொண்டே இருக்கிறாள்.அவளுக்கு பசி எடுக்க என்ன செய்ய வேண்டும் தோழிகளே ? உதவுங்கள்...

நீங்கள் பழங்கள் டிரைப் பன்னலாம். ஆப்பிள்,உருளை, கேரட் வெகவைத்து மசித்து கொடுக்கலாம். சாதத்தை மிக்ஸியில் கஞ்சி போல் அடித்து கொடுக்கலாம்.ஆரஞ்ச், தக்காளி ஜீஸ் கொடுக்கலாம். விதவிதமாக உணவை மாற்றி கொடுங்கள். நிச்சயமாக குழந்தைகள் சாப்பிடுவார்கள். குழந்தை வள்ர்ப்பு பகுதியில் உங்களுக்கு நிரைய விசயங்கள் கிடக்கும்.

unga kuzhnthaiku ipo thu thana 6 month so nega nalla saputu kuzhntkhaiku pal koduga apurum formula milk koduga try panuga nala tasty a iruka iflavour vangi koduga try panuga ipo konjam konjam first rice satham koduga

தோழி குழந்தைக்கு அரிசியை வருது அதை பொடித்து கஞ்சி வெய்து குடுக்கவும்,தினம் ஒரு அரை உருளை வேக வெய்து குடுங்க, உங்களுக்கு பால் நன்றாக ஊற மீன் மற்றும் கருவாடு சாப்பிடுங்கள் தோழி,மாதுளை சாப்பிடுங்க,

தவறாக நினைக்க வேண்டாம்......உங்களுக்கு பால் சுரப்பு கம்மியாக இருக்கிறது என்று எதை வைத்து தீர்மானித்தீர்கள். தெரிந்தால் பதில் சொல்ல ஏதுவாக இருக்கும். குழந்தை பசிக்காக மட்டுமே அழுவாது. அவர்களுக்கு வாறு வலிக்கலாம், போர் அடிக்கலாம், சட்டை பிடிக்காமல் இருக்கலாம், ஆள் இல்லை என்றும் சிலதுகள் அழும், இல்லை வெப்பம் தாங்காமலும் கூட அழலாம். எதற்க்காக அழுகிறது என்று பாருங்கள். நீங்கள் பால் கொடுத்து முடித்தவுடன் அல்லது மார்பிலிருந்து வெளியில் வந்து அழுகிறதா? அப்படி மார்பிலிருந்து வெளியில் வந்து அழுதால் திரும்பவும் ட்ரை பண்ணுங்கள். இரண்டு முறை ட்ரை பண்ணியும் அழுதால் மறுபுறம் ட்ரை பண்ணி பாருங்கள். இரும்பு சத்து அதிகமுள்ளவற்றை உணவில் உட்கொண்டால் பால் சுரப்பு அதிகரிக்கும். குழந்தைக்கு ஒரு வயது நிரம்பும் வரையிலும் தாய்மார்கள் வைட்டமின் மாத்திரைகளை கண்டினு பண்ண வேண்டும்.
இப்பொழுதைக்கு பார்முலா மில்க் எல்லாம் வேண்டாம். சில குழந்தைகள் இப்படி தான் பார்முலா எல்லாம் குடிக்கவே மாட்டார்கள். என் குழந்தைகளும் அப்படி தான். இருக்கும் வரையிலும் தாய் பாலே கொடுக்கவும். ஒரு வயது நிரம்பும் போது ஹோல் மில்க் கொடுக்க ஆரம்பிக்கவும்.
ஆறு மாதத்திற்கு பிறகு குழந்தைக்கு தாய் பாலுடன் சேர்த்து திட உணவு கொடுக்க ஆரம்பிக்கலாம். முதலில் கஞ்சி மாதிரியான நீர் போன்ற ஆகாரம் கொடுக்க ஆரம்பியுங்கள். எந்த ஒரு உணவையும் குழந்தைக்கு கொடுத்து நான்கு அல்லது ஒரு வாரம் சென்று மற்ற ஒரு புதிய உணவை குழந்தைக்கு கொடுக்க வேண்டும். அப்பொழுது தான் நீங்கள் கொடுக்கும் உணவு குழந்தைக்கு ஒத்துக் கொள்கிராதா என்று தெரிய வரும். எந்த உணவாக இருந்தாலும் குறைவாகவே கொடுத்து பழகவும். பால் புகட்டி ஒரு மணி நேரம் சென்று ட்ரை பண்ணவும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

கேரட் மட்டும் வேக வைத்து குடுப்பேன்.ஆரஞ்ச் ஜுஸ் குடுக்கிறேன்.சாதத்தை கஞ்சி போல் குடுத்தால் சாப்பிட மாட்டறாள். சாதத்துடன் பருப்பு,கேரட்,பீன்ஸ் வேக வைத்து மிக்ஸியில் அடித்து குடுப்பேன்.அதை கொஞ்சம் சாப்பிடுகிறாள்.இனி உணவை மாற்றி கொடுக்கிறேன்.மிக்க நன்றி பா.

இன்றைக்கு தான் அரிசியை வறுத்து பொடி பண்ணி வைத்தேன்.உருளைக்கிழங்கை வேக வைத்து கொடுத்ததில்லை.இனி கொடுக்கிறேன் பா.

தோழி லாவண்யா அவளுக்கு 2 மணி நேரம் பால் குடுத்தாலும் அழுகிறாள்.டாக்டரிடம் கேட்டதற்கு அவர் தான் உங்களுக்கு பால் சுரப்பு கம்மியாகி விட்டது என்று கூறினார்.நான் தினமும் 3/4 லிட்டர் பால் குடிக்கிறேன் .நான் வெஜ் ம் சாப்பிடுகிறேன்.ஆனாலும் பத்தவில்லை :).டாக்டர் மே மாதம் குழந்தை க்கு திட உணவு ஆரம்பிக்க வேண்டாம் என்று கூறினார்.ஆனாலும் சாதம் குடுக்கிறேன்.இது சரியா? தாய்ப்பால் குடுப்பதை நிறுத்த்வில்லை. பத்தாதுக்கு தான் என்ன செய்வது என்று கேட்டேன்.

மேலும் சில பதிவுகள்