கால் முட்டியில் எண்ணெய்பசை அதிகரிக்க என்ன செய்யலாம்?தெரிந்தவைகளை சொல்லுங்கள் தோழிகளே....

தோழிகளே என் கணவருக்கு கால் முட்டிகளில் சுரக்கும் வலவலப்பு தன்மைகொண்ட எண்ணெய்பசை குறைவாகி உள்ளது.அதனால் கீழே அமர்ந்து எழுந்திருக்கும்போது,வண்டி கிக் பண்னும்போது வலி உள்ளது. எண்ணெய் பசையை அதிகரித்து வலி இல்லாமல் எப்போதும்போல இருக்க என்ன செய்வது?
இயற்கையாக (ஆயில் தடவுவது,கீரைகள் காய்கள் )இப்படி எந்த காய்களில் எண்ணெய் தன்மை உள்ளது.?தெரிந்தவர்கள் மற்றும் இதுபோல இருந்து குணமடைந்தவர்கள் என்ன செய்தீங்கன்னு சொல்லுங்கப்பா.....

என்னப்பா யாருக்கும் எதுவும் தெரியலையா?

ஹாய் ரேணுராஜ் எப்டி இருக்கிங்க்க.. எங்க வீட்டுக்காரங்களுக்குவிழுந்து லைட்டா வலி அப்ப அப்ப இருந்தது மூட்டுல எண்ணெய் பசை அந்த சதைகுள்ள கம்மியா இருக்குறதுனால வலி இருக்குன்னு சொன்னாங்க... அதுக்கு அம்மா சொன்னாங்க விளக்கெண்ணய கரண்டில கொஞ்சம் விட்டு சூடு பண்ணி ஆற விட்டு முட்டுல தேய்க்க சொன்னாங்க நான் இப்ப டைய்லி தடவி விடுறேன். பரவா இல்ல இப்ப... நீங்க நான் வெஜ் சாப்டுவிங்க அப்டின்னா எலும்பு சாறு எடுத்து குடிக்க குடுங்க... வெஜ்ல கீரை தண்ணி இருக்கும்ல அத குடிக்க குடுங்க அப்பறம் பால் ரொம்ப அவசியம் வெறும் பால் இல்லாட்டி கூட எதா பூஸ்ட் எதுனா கலந்து குடுங்க நல்ல பலன் இருக்கும்.. அதிகமா மாடி ஏறி இறங்க வேணாம்..

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

வனி சுமார் 5,6 மாதம்தொடர்ந்து வரலைல்ல அதான் கேட்டேன்.....வீட்டில் அனைவரும் நலமா?
மீனு,
கால் எடுத்துவந்துள்ளேன் இன்னும் செய்யலை,டாக்டர் பால்,தயிர் வேனாம்னு சொன்னார்ப்பா,மோர் குடிக்கலாம்னாரு,இங்க குளிரில் இருந்தா சீக்கிரம் இதுபோல வரும்னு சொன்னார்....ஆனால் இது சீக்கிரம் சரியாகிடும்ல...:( oil தடவி விடுறேன். வீடே மாடிலல்லா இருக்கு..... இப்ப கொஞம் வலி பரவால்லப்பா......

ஹாய் ரேணு..... நலமா.... குட்டி பையன் & பெரிய பையன் எப்படி இருக்கிறார்கள்?

எங்க சித்திக்கு இந்த பிரச்சனை இருந்தது. ஆயுர்வேத டாக்டரின் ஆலோசனைப்படி விளக்கெண்ணெய் உடன் அவர் கொடுத்த மருந்து கலந்து ஒரு சின்ன பேன்னில் தீய்ந்து போகாத அளவில் நன்கு சூடுபடுத்தி கொள்ளனும். கொஞ்ச நேரம் அதை வெதுவெதுப்பான பதத்தில் அதாவது தோலில் பட்டால் சுள்ளுனு சுடாத வெப்பத்தில் நன்கு முட்டி பகுதியில் தேய்க்க வேண்டும்.

பின் இரு கால்களையும் நீட்டி தரையிலோ அல்லது பென்ச்சிலோ உட்கார்ந்து முழங்காலிக்கு அடியில் ஒரு போர்வையை நன்கு சுருட்டி(திண்டு போல) வைத்துக் கொண்டு முட்டியில் மசாஜ் செய்ய வேண்டும். ரொம்ப அழுத்தி கண்ணாபின்னானு மசாஜ் செய்யக்கூடாது. ஃபேஷியல் செய்வது போல நாசூக்காக செய்யனும். ஒரு 5 நிமிடம் செய்தால் போதுமானது. அதுக்கப்புறம் குளிக்க போய்டலாம்.

ஒரு வாரத்திலேயே நல்ல இம்ப்ரூமென்ட் தெரியும். எனக்கும் முட்டிலுள்ள சவ்வு கிழிந்ததால் ஏற்பட்ட வலிக்கும் இதே முறையை பின்பற்றினேன். இப்போ முற்றிலும் குணமாகிடுச்சு.

60 வயத்iற்கு மேற்பட்டவர்கள் என்றால் குணமாக மாதக் கணக்காகும் குணமாக.

கூடுதல் உடல் எடை இருந்தாlஉம் ரொம்ப வலிக்கு காரணமாக அமையும். கொழுப்புத்தன்மையுள்ள உணவு அதிகமா சேர்க்கக்கூடாது.

பெயின்கில்லர் மட்டும் பயன் படுத்தவே கூடாது. ரொம்ப ஆபத்தை வரவழைக்கும் பா.......

நான் வெறும் விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் தான் பயன்படுத்தினேன்.

நீங்களும் முதல் முயற்சியாக இவற்றை பயன்படுத்திப் பார்த்துக் கூறுங்கள்.......

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

ஹாய் ஆனந்தபிரியா,
நலம்ப்பா, பெரியவன் லீவுக்கு அம்மாவிடம் உள்ளான்...(இருவரையும் சமாளிப்பது கஷ்டம்பா),அவர் நார்மல் வெயிட்தாம்ப்பா,நார்மல்பாடி,ஸ்போர்ட்ஸ்மேன்,இப்பதான் லைட்டா பெயின் ஆரம்பிச்சது உடனே பார்த்தது நல்லதாபோயிடுத்து.
கேரள ஆயில் தடவரோம்ப்பா வலி குறஞ்சிருக்கு,டாக்டர் எக்சசைஸ் சொல்லி கொடுத்தாங்க,டெப்லட் பெயின் கில்லர்மாதிரி இல்லப்பா.....
டாக்டர் சொன்னார் மேல போடர ஆயிலோ,களிம்போ(மூவ்,வாலினிபோல) உள்ளுக்க எடுத்துகாதுன்னு. ஆனாலும் என் பிடிவாதத்தில் போட்டுவிடறேன்.....ஆயிலில் குணம் கிடைக்கும்தானேப்பா........

மேலும் சில பதிவுகள்