உங்கள் திருமண உறவை வலுப்படுத்த சில tips

கணவன் மனைவி உறவு என்பது நமது வாழ்க்கையில் எல்லா பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு ஆராய்ச்சியில் வீட்டில் சந்தோஷமாக இருக்கும் மக்கள்( கணவன்/மனைவி)தங்கள் பணியிடத்தில் குறைந்த மன அழுத்தத்தில் இருப்பதாக சொல்கிறது.இன்று பல திருமணங்கள் தோல்வியில் முடிகின்றன.

So உங்கள் கணவன்/மனைவியிடம் ஒரு வலுவான மற்றும் ஆரோக்கியமான உறவு வளர எனக்கு தெரிந்த நான் பின்பற்றும் சில குறிப்புக்கள்.

1.ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுங்கள்(Communicate Each other)

முதலில் மனம் விட்டு பேச தினமும் நேரம் ஒதுக்குங்கள் அன்றாடம் நடக்கும் சம்பவங்கள்,தகவல்கள் மற்றும் கருத்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும்.,இந்த கால கட்டத்தில் நேரம் ஒதுக்குவது மிகவும் கடினம்.இதை புரிந்து தினமும் ஒரு வழக்கமான நேரத்தில் திட்டமிடலாம். அது சாப்பிட்டவுடன் தூங்குவதற்கு முன் அல்லது காலை தேநீர் அருந்தும் போதும் பேசலாம்.அப்போது நீங்கள் ஒரு நல்ல விஷயம் பற்றியும் அந்த நாள் பற்றிய ஒரு கடினமான விஷயத்தையும் பகிர்ந்துகொள்ளலாம் இது இருவருக்கும் பேசுவதற்கு ஒரு வாய்ப்பை கொடுக்கிறது.

2.பேசுவதை கவனியுங்கள்(Active listening)

3.ஒன்றாக(இருவர் மட்டும்)சுற்றுலா செல்லுங்கள்(Plan for frequent outing)

Atleast weekly once நீங்கள் இருவரும் தனியாக திரைப்படங்கள்,இரவு உணவு(Dinner),ஐஸ் கிரீம் அல்லது Simple car drive போக நேரம் ஒதுக்குங்கள்.இது உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் இடையே உள்ள உறவை மேம்படுத்த உதவும்.

4.உங்கள் காதலை வெளிபடுத்துங்கள்(Show your love and affection)

உங்கள் கணவன்/மனைவி மேல் உள்ள அன்பை வெளிக்காட்ட ஒரு சின்ன முயற்சியாவது செய்யுங்கள் லைக் a small dedicated time,பரிசுகள்,வாழ்த்துஅட்டைகள்,a small touch அல்லது just உங்கள் உணர்ச்சிகளை like love u darling காட்ட வேண்டும்.

5.மன்னிக்க தெரிந்த மனம்(Forgiveness)

நாம் ஒவொருவருக்கும் நம் கணவன்/மனைவி மேல் பிடிக்காத விஷயங்கள் சில இருக்கும்.அதை பெரிது படுத்துவதை விட்டு விட்டு புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.இப்படி மன்னிக்க தெரிந்த உறவுகள் நீண்ட காலங்கள் நீடிக்கின்றன.So give up your egos also.

பின்குறிப்பு: எனக்கு சரியாக தமிழ் உரைநடை வராது. எதாவது எழுது பிழை,சொல் பிழை இருந்தால் மன்னிக்கவும்.

வெனிலா

நல்ல ஒரு இழை. பேச பேச முடியாத ,தீராத ஒரு தலைப்பு.
* என்ன ஆனாலும், மற்றவரின் முன் மட்டம் தட்டாமல் இருப்பது முக்கியம்.இந்த காலத்தில் கணவன் ஆகட்டும், மனைவி ஆகட்டும், பொதுவான ஒரு இடத்தில் மாறி மாறி ஓட்டிக்கறாங்க.. சின்ன விஷயத்துக்கு கூட அப்படி இருக்கக் கூடாது.விட்டுக் கொடுக்காம பேசணும்.
*கணவன் வீட்டில் இருப்பவர்களை நம் வீட்டில் இருப்பவர்களை போல நினைத்து பழகணும்.. நம் வீடு அவர் வீடு, இரண்டு பக்கமும் சமமா நடத்தனும்.. எதுனாலும் கணவரிடம் மனம் விட்டு பேசணும்
*தேவையில்லாததை பேசுவதை முதலில் குறைக்கணும்..ஒரு மூனு குடும்பம் இருக்கும் இடம்னா. மற்ற கணவன் மனைவிக்குள்ள நடக்கும் விஷயத்தில் மூக்கை நுழைக்காம இருக்கணும்..
* தட்டில் சாதம் குறைவதை பார்த்திட்டே இருந்து கணவனுக்கு பரிமாறுவது,பழைய கால சினிமா மாதிரி இருந்தாலும், வெளியே கிளம்பும் போது பர்ஸ், வாட்ச் போன்ற பொருட்களை எடுத்து வைப்பது, பில் கட்டுவதில் உதவியா இருப்பது, தலை கோதி விடுவது போன்ற சின்ன சின்ன விஷயத்தில் அன்பை அதிகமாய் வெளிப்படுத்தலாம்.
*.பிரிந்து அதிக நாள் இருக்க கூடாது.அந்த பிரிவில் அவர் வாழ கற்றுக் கொள்ள விடக் கூடாது. நம்மை மிஸ் பண்ணுவதாய் அவர் நினைப்பதை நிறுத்தி விட நாம் காரணம் ஆக கூடாது.
*அது இதுன்னு நை நையின்னு பொருட்கள் வாங்கவே கூடாது.அவரே அதை புரிந்து வாங்கிக் கொடுப்பார்.அதிக விலையுள்ள பொருளையும் வாங்க யோசிக்கணும்.
* ரொம்ப நீட்டா , டீசண்டா உடை அணியணும்.கொஞ்சம் மோசமான உடையை அவரே அணிய சொன்னாலும் செய்யக் கூடாது.கணவரிடம் மரியாதை பெற்றுத் தரும்.
*தொலைவில் இருந்தாலும் தொலைப்பேசியில் அழைத்து அது செய்தீர்களா? இது செய்தீர்களா எனக் கேட்பது.விசாரிப்பது.
*மிக முக்கியம் வீட்டை அழகா வைத்துக் கொள்வது,நன்றாக சமைப்பது.அவர் நண்பர் வட்டாரத்திடம் நல்ல முறையில் பேசுவது.

இன்னும் மற்ற தோழிகள் சொல்லட்டும் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வெண்ணிலா ரம்யா ரொம்ப அற்புதமான கருத்துக்கள்.புரிதல்,விட்டுகொடுத்தல் அவசியம்.நல்ல இழை ஆரம்பித்துள்ளீர்கள்.

அன்பு வெண்ணிலா, அன்பு ரம்யா,

ரொம்பத் தெளிவா, ப்ராக்டிகலாக யோசனைகள் சொல்லியிருக்கீங்க.

அவங்க அவங்களுக்குன்னு தனித்தனியா ஐடெண்டிடி இருக்கு என்று சொல்லிக் கொண்டு, ஈகோ க்ளாஷ்ல கொண்டு வந்து முடிச்சிடறாங்க, நிறைய பேர்.

எப்படி இருக்கணும், என்ன செய்யக் கூடாது என்பதையெல்லாம் அழகாக சொல்லியிருக்கீங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

unmaithan nan en kanavaridam sandai poduvathu undu. eppothu sanddai vanthallum nan than muthalil poi en kanavariddam pesuven.anal intha tadavai sanddai vantha poluthu enakkul oru .ego vanthuvidathu avar vanthu muthalil ennidam pesaddume enrru anal 1 week aggiyum avar enniddam pesuvathillai enna seivatenre teriyamal vilithu kondirutha ennakku niggal kodutha tibs miggayum utaviyathu unggallukku enathu manamartha nandri bye

vanakkam

கணவன் ,மனைவி பிரச்சனைக்குள்ள மூன்றாவது ஆள்[பெற்றோராகவே இருந்தாலும்}கூட தலையிட அனுமதிக்காதீங்க.நிச்சயமா அது பிரச்சனையை பெரிதாக்கவே செய்யும்.
கோபத்தில் பேசுகிறோம் என்று மனதை காயப்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தாதீங்க,பேசியவங்க ஈஸியா மறந்துடுவாங்க,அதை கேட்பவர்களுக்கு அதை மறக்க முடியாது.
நல்ல விஷயங்களை மனம் திறந்து பாராட்டுங்கள்.
ஒவர் பொசஸிவ்னஸ்&சந்தேகம் வாழ்க்கையை நரகமாக்கிவிடும்.
இருவரும் {கணவன்_மனைவி}ஒருவரை ஒருவர் எல்லா விஷயங்களிலும் மாற்றமுயற்சிக்ககூடாது,சிலர் கணவனோ,மனைவியோ இப்படிதான் இருக்கணும் என்று ஒரு மோல்ட் வைச்சிருப்பாங்க,அதுக்குள்ள செட் ஆகணும் என்று எதிர்பார்ப்பாங்க,அதனால் பிரச்சனைகள் பெரிதாகவே செய்யும்.இருவருமே100% பெர்பெக்ட் இல்லை,எல்லாருக்கும் +,_ இருக்கும் .அதை ஒத்துகிட்டாலே பாதி பிரச்சனைகள் சரியாயிடும்.

வெண்ணிலா & ரம்யா உங்க டிப்ஸ் நிஜமாவே எல்லா கணவன் மனைவிக்கும் உதவும்...

என் சார்பில் இருந்து இன்னும் கொஞ்சம் டிப்ஸ்:

1. நாம எப்படி நம்ம பெற்றோருக்கு செய்ய கடமை பட்டிருக்கிரோமோ அதே போல் கணவருக்கும் அவங்க பெற்றோர்களுக்கு செய்ய எல்லா உரிமையும் கடமையும் இருக்கு... அது நம் வாழ்க்கையை பாதிக்காத வரை அவங்களை உங்க வீட்டுக்கு பணம் குடுக்க கூடாதுன்னு சொல்றது தப்பு.

2. ஒவொருவருக்கும் சில ஆசைகள் இருக்கும்... கணவன் தன் ஆசைகளை மனைவி மீதோ மனைவி தன் ஆசைகளை கணவன் மீதோ திணிக்க கூடாது.

3. கணவன் முன் மனைவி எப்பவும் நல்ல உடை உடுத்தி எப்பவும் பிரெஷா இருக்கணும். எப்பவும் ஒரே ஸ்டைல் பண்ணாமல் வித விதமா டிரஸ், மேக், ஹேர் ஸ்டைல் முயற்சி பண்ணலாம்.

4. அதேமாதிரி ஆபீஸ் முடிஞ்சு அலுப்பில் வரும் கணவனை என்ன ஆச்சு எது ஆச்சு நு நச்சரிக்க கூடாது. நார்மல் மூடுக்கு வந்ததும் அவங்களே சொல்லுவாங்க.

5. விளையாட்டுக்கு கூட கணவனை தர குறைவான வார்த்தைகளால் பேசிவிட கூடாது. அது என்றும் அவங்க மனசில் இருந்து போகாது.

6. அவர்கள் கோபப்படும்போது நாமும் கோபப்பதில் சண்டையிட கூடாது... கோபத்தில் வரும் வார்த்தைகள் விஷத்தை விட மோசம். கோபம் குறைந்ததும் அன்பாக பேசி நம் கருத்துகளை புரிய வைக்கலாம்.

7. என்ன தான் மாடர்ன் வேல்ட் ஆனாலும், மற்றவர்கள் முன் கணவரை மரியாதையாகவே பேச வேண்டும்.

8. தினமும் ஆபீஸ்க்கு போகும்போது அல்லது வெளியே செல்லும்போது அவங்களுக்கு பொருத்தமான ஆடைகளை நாமே எடுத்து வைப்பது நல்லது.

இன்னும் டிப்ஸ் தெரிந்த தோழிகள் கூறவும்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

Vennila sister... Ellaa kanavan manaivikkum migavum payanalikkum izhai idhu... Aanaal ennal tamilil padhivida iyaladhu. adhanal en karuthukalai thamingilathil padhiyalama?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நல்லதொரு இழை.நல்ல நல்ல டிப்ஸ் தந்திருக்கீங்க..கணவன் மனைவு உறவில் பெரியவர்களுக்கும் பெரிய பங்கு உண்டு பெற்றோர் எல்லாத்திலும் மூக்கு நுழைக்கவும் கூடாது.அப்பா அம்மா பெண்பிள்ளைகளை அனுப்ப்பும்போது எது வந்தாலும் பொறுமையாக இரு எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று ஒரு வார்த்தை நிச்சயம் சொல்லி அனுப்பனும்..புகுந்த வீடினரும் மகனிடம் சின்ன சின்ன விஷயங்களை நோண்டி நோண்டி அவ இன்னும் எழலையா இந்த வேலை செய்யலை அந்த வேலை செய்யலை என்று சின்ன சின்ன கம்ப்லெயின்ட்ஸ் எல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லது..போக போக புது இடம் பழகினால் எல்லாம் சரியாகும்
ஆண்கள் பல விதத்தில் இருப்பார்கள் சிலர் கோவக்காரர்களாக இருப்பார்கள் சிலர் வாயை திறக்க வைக்க காசு கொடுக்கணும் அவ்வளவு ரிசேர்வ்டா இருப்பாங்க..அந்த மாதிரியானவர்களுக்கு நாலு பேர் ஒண்ணா சேரும் இவென்ட்ஸ் எல்லாத்தையும் அவாயிட் செய்ய பாப்பாங்க..பொறுமையா பல வருஷம் எடுத்தாலும் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் குழந்தைகளை போல் உற்சாகப்படுத்தினால் மெல்ல குணம் மாறிடும்..பொறுமை தான் ரொம்ப ரொம்ப முக்கியம்..பெரியவங்க சாபத்தை வாங்காமல் பாத்துக்கணும்

அனைவருக்கும் நன்றி...

இது வரை எனக்கும் என் கணவருக்கும் எங்களால் சண்டை வந்தது இல்லை. எப்போதும் அவர்களுடைய Parents நால தான் சண்டை வரும்.காரணம்

1. எப்போதும் மாமனார்/மாமியாரை அப்பா அம்மாவுடன் ஒப்பிடாதீர்கள்.நம் அப்பா அம்மா மாத்ரி செய்ய வேண்டும் என்று நினைத்தாலே பிரச்னை தான்.Nobody cannot replace our parents even parens-in-law.This ll be the primary problem in all the family.

2.அதே மாதிரி யாரையும் திருத்த நினைக்க கூடாது. அது அவளவு எளிதும் அல்ல.முடிந்தால் நம்மை தான் மற்றவர்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றி கொள்ள வேண்டும்.

3.ரம்யா பிரேமா சொன்ன மாதிரி மற்றவர்களுக்கு முன் மட்டம் தட்டி பேச கூடாது. அது தேவை இல்லாத மனகசப்பை உருவாக்கும்.

4.இன்னொன்று மற்றவர்களுடன் கணவன் மனைவியையோ,மனைவி கணவனையோ, ஒப்பிட்டு பேச கூடாது.அது அவங்களோட Ego va தட்டி விடும்.

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

மேலும் சில பதிவுகள்