***பட்டிமன்றம் - 65"சிறந்தது எது?அக்கால திரைப்படங்களா? இக்கால திரைப்படங்களா?"***

அறுசுவை தோழர் தோழிகளுக்கு வணக்கம்,
இந்தவார பட்டியின் தலைப்பு நம் தோழி "பூர்ணிமா சங்கர்" அவர்களோடது.......
தலைப்பு இதோ,

***பட்டிமன்றம் - 65"சிறந்தது எது?அக்கால திரைப்படங்களா? இக்கால திரைப்படங்களா?"***

நீண்ட இடைவெளிக்கு பின் நடுவராகப் பொறுப்பேற்றுள்ளேன்,நமது தோழிகளின் காரசாரமான, அனல்பறக்கும் வாதங்களைக் காண ஆவல்கொண்டே இத்தலைப்பை தேர்வு செய்துள்ளேன்...
இன்றைக்கு வெளியாகும் படங்களில் சில என்னை இத்தலைப்பை எடுக்கதூண்டியதுன்னும் சொல்லலாம் தோழிகளே...

"விவாதங்கள் எதன் அடிப்படையில்:"

தோழிகளே இத்தலைப்பில் விவாதிக்கும் நம்தோழிகள் கருத்து, கதையம்சம், கலாச்சாரம், பொழுதுபோக்கு, சமுதாய விழிப்புணர்வு, நன்மை தீமைகள், நகைச்சுவை, நடனம், இசை, பாடல்கள், தொழில்நுட்பம் இதுபோல அனைத்தின் கீழும் தங்களது வாதங்களை சமர்பித்தால் வாதாடவும்,நடுவர் தெளிவடையவும் சிறப்பாக இருக்கும்.....
80க்கு முன் அக்கால திரைப்படங்களாகவும்,80க்கு பின் இக்கால திரைப்படங்களாகவும் எடுத்துக்கொண்டு வாதங்களில் ஈடுபடுங்கள்.....

வழக்கமான பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும்.அதனால் அதை மீறுதல் கூடாது. பதிவுகள் தமிழில் இருப்பது அவசியம்.
தோழிகள் எல்லாரும் வந்து கலந்துகிட்டு இந்த பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்திகொடுக்கும்படி அன்போடு கேட்டுக்கறேன்.வாங்க தோழிகளே வந்து யார் எந்த அணியின் பக்கம்னு சொல்லிடுங்க.....:-))

வாதாடக்குவியும் நாமது அறுசுவை சிங்கங்களே,புலிகளே,மான்களே,பூங்காற்றுகளே,சீறிப்பாயும் சூராவளிகளே அனைவரும் வந்து அணியை தேர்வு செய்து நம் பட்டியை சிறப்பிக்குமாறு அழைப்பு விடுக்கிறேன்.........

அன்பு நடுவரே.. பட்டி சிறப்பாக செல்ல வாழ்த்துக்கள் :)

நல்ல தலைப்பு தந்த பூர்ணிமாக்கு நன்றி :)

வாதாடப்பட வேண்டிய தலைப்பே... எதையும் யோசிக்காம காலத்துக்கு ஏற்ற மாதிரி மாத்திக்கிறோம்னு காலம் நம்மை கொண்டு போகும் போக்கில் நாம போயிடறோம்.

நடுவரே... நீங்க ஒரு சின்ன மேட்டரை விளக்கமா சொல்லிட்டீங்க...

//கதையம்சம்,கலாச்சாரம்,கருத்து,பொழுதுபோக்கு,சமுதாய விழிப்புணர்வு,நன்மை தீமைகள்// - ஹிஹிஹீ. இப்போ நான் சந்தேகமில்லாம வாதாடுவேன்... நிச்சயம் அந்த கால திரைப்படங்கள் தான்னு :) நான் இங்க சொல்றது கருப்பு வெள்ளை படங்களை மட்டுமே.

கலாச்சாரம் அப்படின்ற ஒரு பாயிண்ட்லயே இந்த கால திரைப்படங்கள் அவுட்!! இப்போலாம் பொண்னுங்க ஆடை அப்படி தான் போடுறாங்க, அதை தானே சினிமாவில் காட்டுறோம்னு சொன்னா... இவங்க இப்போலாம் சினிமாவில் ஹீர்ரொயின் போடுறது தான் ஃபேஷன்னு இவங்களும் போட ஆசைபடுறாங்க. பப்புக்கு போவது கூட சினிமா மூலம் தான் வந்திருக்கும்னு எனக்கு தோணுது.

இந்த கால சினிமா பார்த்தா எப்படி கொலை பண்ணலாம், எப்படி மாட்டாம தப்பிக்கலாம், திருட்டு கொலை பண்றவங்களை காதலிக்கலாம், இப்படி நிறைய நல்ல (????) விஷயம் கத்துக்கலாம்.

நகைச்சுவை படங்கள் வருது... ஆனா அதுவும் அந்த கால நகைச்சுவை போல இல்ல... அடுத்தவங்க காலை வாருவதும், இரண்டு அர்த்த வார்த்தையும் தான் அதிகம். அப்போதைக்கு சிரிக்கலாமே தவிற என்றும் மனதில் நிக்காது.

அந்த கால திரைப்படங்கள் புராணம், மன்னர்கள்னு பலவற்றை சொல்லுது... இப்போ கொலை, கொல்லை, தில்லு முல்லு, காதல், பழிவாங்குதல்... இதை தான் மையமா கொண்டு போகுது.

நடிகர்கள்னு எடுத்தாலும் அந்த கால நடிகர் நடிகைகள் ரொம்ப திறமை உள்ளவங்க... டயலாக், டான்ஸ், பாட்டு எல்லாம் தெரிஞ்சவங்க. ஆனா இந்த காலத்தில்??? ஒரு படம் நடிச்சாலே ஹீரோ.. உதவாத ஹீரோஸ். நடிப்புன்னா என்னன்னே தெரியாத ஹீரோயின்ஸ். பாம்பே, கேரளாவில் இருந்து வராங்களா என்பது தான் தகுதியே ;) தமிழும் தெரியாது ஒன்னும் தெரியாது.

அந்த கால படங்கள் முடிவு சுபம்... இப்போ போனவங்களை அழ வெச்சு அனுப்பினா தான் வெற்றி பெறுதாம் ;(

நடுவரே... நேரம் கிடைக்கும் போது மீண்டும் வருகிறேன். இப்போதைக்கு மனதில் ஒன்னும் ஓடல. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவர் அவர்களே வணக்கம்,நான் அருசுவையில் கலந்துகொள்ளும்
முதல் பட்டி இது.அருமையான தலைப்பில் வாதிடும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. இதில் என்ன சந்தேகம் அக்காலபடங்களே சிறந்தது.இந்தகால படங்கள குடும்பத்தோடு பார்க்க முடியுதா.இரட்டை அர்த்த பாடல்கள்,வசனங்கள். அந்தகால படத்துல அவங்களே வசனம் பேசுனாங்க.இப்போ வசனம் டப்பிங்
அந்தகால இசைல பாடல் வரிகள் கேட்கவும் முடிந்தது,அர்த்தமும் புரிந்தது.இப்போ மியூசிக்ல பாடல் வரிகள் ஒன்னும் தெளிவா கேக்கல,அதுக்கு அர்த்தம் பார்க்க எந்த அகராதிய புரட்டனும்னு தெரியல நடுவர் அவ்ர்களே.உதாரனத்துக்கு ஓமகசியான் அ என்ன அர்த்தம் நடுவர் அவர்களே
ப்ரொட்யூசர் எவ்வள்ளவோ செலவு பன்னி படம் எடுக்குறார்.கதாநாயகிக்கு மேக்கப்புக்க்கு செலவு பன்றார் ஆனா உடைக்கு மட்டும் ஏனோ இவ்வள்வு கஞ்ஜனா இருக்குறாரோ தெரியல.போதாக்குறைக்கு இக்கால படத்துல கதாநாயகிக்கு தொப்புள்ள வளையத்த மாட்டுறாங்க இது என்னனுகேட்டா பேசன்னு சொல்லுறாங்க என்னவோ தெரியல.நடுவர் அவர்களே அக்கால படங்களே சிறந்தது.அக்கால படங்களே சிறந்தது.அக்கால படங்களே சிறந்தது..............

அருமையான தலைப்பு,இதுவே பட்டியில் என் கன்னி பதிவு.இதை பார்த்து விட்டு பதிவு போடாமல் இருக்க முடியவில்லை,அந்த கால திரைப்படங்கள் அணியினர் வெற்றி பெற வேண்டுமென்பது என் விருப்பம், இரண்டு அணிக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.நடுவரின் மீள்வருகைக்கும் வாழ்த்துக்கள்

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

பட்டி நடுவருக்கு வணக்கம்!! சில,பல குடும்ப பொறுப்புகள் காரணமாக அறுசுவை பக்கம் வரவே முடியவில்லை. இன்றைக்கு என்னடா தலைப்புனு ஆவலா அறுசுவையை திறந்தேன். என் தலைப்பை தேர்ந்தெடுத்த ரேணுகாவிற்கு நன்றி!!

அன்பு நடுவரே!! அப்படி ஒரேயடியாக இந்தகால திரைப்படங்களை மோசம் என்று ஒதுக்கிவிட முடியாது. அக்காலத் திரைப்படங்களில் இல்லாத எத்தனையோ நல்ல விஷயங்கள் இன்றைய திரைப்படங்களிலும் இருக்கின்றன.

நடுவரே!! மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல, நமது ரசனையை சமுதாயப் போக்கில் மாற்றிக்கொள்ளத்தானே வேண்டும். எப்போதுமே ஓல்ட் ஈஸ் கோல்டுதான். அதை இல்லையென்று மறுக்க முடியாது. அன்றைய கருப்பு வெள்ளை திரைப்படங்களை இன்று திரையிட்டால் தியேட்டரில் ஈ ஆடாது. அதுவே ரீமேக் செய்து கொஞ்சம் மசாலா சேர்த்துக் கொடுத்தால் ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி கூட பார்ப்போம்.

இன்றைய திரைப்படங்களால் தான் நம்மால் சற்றேனும் விழிப்புணர்வு பெற முடிகிறது. குடும்ப பிரச்சனைகள், சமுதாய பிரச்சனைகள், பெண்களின் பிரச்சனை, அரசியல், கல்வியின் முக்கியத்துவம், கலாச்சார சீரழிவு, இப்படி பலவற்றையும் சமுதாய அக்கறையோடு இன்றைய படங்கள் பேசவே செய்கின்றன.

இன்றைய பள்ளி மாணவிகளுக்கும், நம் பெண் பிள்ளைகளுக்கும் நாம் வெளிப்படையாக சொல்லி புரிய வைக்க முடியாத ஒரு விஷயத்தை சமீபத்தில் வெளிவந்த வழக்குஎண் 18/9 என்ற திரைப்படம் அருமையாக சொல்லியிருக்கிறது.

//நடிகர்கள்னு எடுத்தாலும் அந்த கால நடிகர் நடிகைகள் ரொம்ப திறமை உள்ளவங்க... டயலாக், டான்ஸ், பாட்டு எல்லாம் தெரிஞ்சவங்க. ஆனா இந்த காலத்தில்???// நடுவரே!! அந்த காலத்திலாவது பரவாயில்லை. பெரிதாக பாட்டிற்கு டான்ஸ் ஆடத் தேவையில்லை. ஆனால் இப்போது அப்படியில்லை, ஒரு திரைப்படத்தில் கமிட் ஆகிவிட்டால் நேச்சுரலாக இருக்க வேண்டுமென்று நடிகர், நடிகைகள் அந்த திரைப்படத்திற்கு தேவையான எல்லாவற்றையும் கற்று தேர்ந்த பின்னரே படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. நடிகர் அஜித் கூட பில்லா- 2 வில் ஹெலிக்காஃடர் ஃபைட்டில் டூப் போடாமல் தானே நடித்தாராமே!!

//அந்த கால படங்கள் முடிவு சுபம்... இப்போ போனவங்களை அழ வெச்சு அனுப்பினா தான் வெற்றி பெறுதாம்// நடுவரே!! வேண்டுமென்றே திணிக்கப்படுவதல்ல அது. கதையின் போக்கிற்கு தேவைப்படுவதே. அவ்வாறல்லாவிட்டால் நமக்கு ஏன் அழுகை வரப் போகுது?
நடுவரே!! இன்னும் வாதங்களோடு வருகிறேன்.

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

உங்களின் முதல்பதிவிற்கு நன்றி......முதலாவதாகவே பதிவிடுவீர்கள் என்று எண்ணவில்லை.......
நீங்கள் "அந்தக்காலமே அணியா" பலேபலே......கருத்தாக ஆரம்பித்துள்ள உங்கள் பதிவுகள் சீக்கிரம் வாதங்களாக மாறிட வாழ்த்துகிறேன்.......இன்னும் நிறைய வாதங்களோடு வாருங்கள்........:)

வாங்க ஜெயா,
முதல் பட்டியா வருகைக்கு நன்றிகள் வாதங்கள் ஜொலிக்கட்டும்.......நீங்களும் அந்தகால அணியா.....

////அந்தகால இசைல பாடல் வரிகள் கேட்கவும் முடிந்தது,அர்த்தமும் புரிந்தது.இப்போ மியூசிக்ல பாடல் வரிகள் ஒன்னும் தெளிவா கேக்கல,அதுக்கு அர்த்தம் பார்க்க எந்த அகராதிய புரட்டனும்னு தெரியல நடுவர் அவ்ர்களே.உதாரனத்துக்கு ஓமகசியான் அ என்ன அர்த்தம் நடுவர் அவர்களே/////

எனக்கும் அர்த்தம் தெரியலை அகராதி கிடைத்தால் அனுப்புங்க ஜெயா,....மேலும் பல வாதங்களோட வாங்க நடுவர் காத்திருப்பார்......

தங்களின் வருகையால் பட்டி மகிழ்வுருகிறது.வாழ்த்துக்கள் சொன்னால் மட்டும்போதாது.வாதங்களும் வேனுமாக்கும்.இல்லன்னா நடுவர் அனைத்துப் படங்களும் அணுப்பிடுவோமாக்கும்.......

////இன்றைக்கு என்னடா தலைப்புனு ஆவலா அறுசுவையை திறந்தேன்.//////
இப்படி ஆவலா வந்து பார்த்து சந்தோசப்பட்டீங்களா......மிக நல்ல தலைப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றிப்பா.......
நீங்கள் "இந்தக்கால அணியா" (இனிதான பட்டி சூடுபிடிக்கப்போகுது)....ஆமாமா அனைத்து படங்களையும் ஒன்னா சேர்த்து சிறந்ததில்லைன்னு சொல்லிடமுடியாதில்லையா.....? மேலும் பல வாதங்களுடன் வாங்க.....

நடுவரே... அந்த காலத்தில் சண்டை, நடனம் எல்லாமே தத்ரூபமா ரியல் லைஃப் கூட ஒத்து போச்சு. இந்த காலத்தில் எல்லாமே சும்மா... உண்மையில் அதை எல்லாம் யாருமே செய்ய முடியாது, செய்ய மாட்டோம். சினிமா வாழ்க்கை. நிஜத்தில் சாத்தியமில்லை. இன்னைக்கு பறந்து பறந்து அடிக்கறாங்க, காலை ஓங்கி வெச்சா புழுதி பறக்குது, வில்லன் முகமும் சுருங்குது... அத்தனை வேகமா இருந்ததாம் ஹீரோ வெச்ச அடி... நம்புற மாதிரி இருக்க??? இது போலி.

அப்படி பார்த்தா அந்த காலத்தில் கூட ஹீரோக்கல் சண்டைக்குலாம் பயிற்சி எடுத்தாங்க. டெக்னாலஜி வளராத காலத்திலேயே எத்தனை பிரம்மாண்டம், எத்தனை வேலைப்பாடு... அது அவங்களோட டெடிகேஷனை காட்டுது. அந்த காலத்தில் வந்த ஔவையார் படத்தின் பிரம்மாண்டம் மறக்குமா??? இந்த காலத்தில் அது சாதாரணம், ஆனா அன்று அது எவ்வளவு பெரிய விஷயம்???+

ஒரு பாட்டு மனசுல நிக்காது இப்போ... இசை... டம் டும்ன்னு சத்தம் இசை ஆயிடுச்சு. அத்தி பூத்தாப்போல வரும் ஒரு சில நல்ல படம், ஒரு சில நல்ல கருத்து, ஒரு சில நல்ல பாட்டுக்காக இந்த கால படத்தை நல்ல படம்னு சொல்லலாம்னா... மெஜாரிட்டி நல்ல விஷயம், நல்ல பாடல், நல்ல இசை, நிஜத்தோடு ஒத்த கதைகள் கொண்ட பழைய படங்கள் சிறந்ததுன்னு சொல்ல கூடாதா??? நிச்சயம் அது தான் சிறந்தது நடுவரே.

ஒரு பஸ் ஆக்சிடண்ட்டை மையமா கொண்டு படம் வந்தது... அதை பார்த்து எத்தனை பஸ் ட்ரைவர் திருந்தினாங்களோ... தெரியல. ஆனா நிறைய பேர் பஸ்’ல போகவே பயப்படறாங்க.

நம்ம விஜய் டிவியில் சிறப்பு படம்னு வரும் எல்லாமே இதே மாதிரி ட்ராஜெடி படம் தான்... பாவம் அவங்களூம் தான் என்ன பண்ணூவாங்க, வருவதெல்லாம் இப்படியே இருந்தா???

ரேணிகுண்டானு ஒன்னு... எல்லாம் முடிஞ்சுது, இனியாவது ஹீரோ ஹீரோயின் சேருவாங்கன்னா, கடைசியில் ஹீரோ காலி. ;( என்ன கண்டாங்க அப்படி ஒரு க்ளைமேக்ஸ்லன்னு தெரியல. அது கூட ஓகே... ஆனா அந்த படம் முழுக்க வன்முறை... அப்பப்பா... சொல்ல முடியாது. ஒன்னுமில்லாதவங்கூட இனி யாரையும் கொல்லலாம் என்ற அளவுக்கு டெக்னிக் கத்து கொடுத்திருப்பாங்க. இவங்க பாராட்டும் பெயரும் எடுக்க சாதாரண மக்களுக்கு இப்படி கூட வன்முறை சொல்லலாமா???

தலைநகரம், 3, மயக்கம் என்ன, யுத்தம் செய், வெண்ணிலா கபடி குழு (இது பாவம்... ஒன்னுமே இல்லாம கடைசியில் ட்ராஜடியா முடிச்சிருப்பாங்க... கதைக்கும் முடிவுக்கும் சம்பந்தமே இருக்காது)... இப்படி உதாரனம் அடுக்கிட்டே போகலாம். எனக்கு தான் நேரமில்லை. :)

இந்த் அகால படம் பற்றி சொல்ல ஒரே ஒரு விஷயம்... தமிழ்’னு நினைக்கிறேன்... ஒரு படம்... இந்த கால படம், பாடலை எல்லாம் ஓட்டு ஓட்டுன்னு ஓட்டி ஒரு உதவாத ஹீரோ நடிச்ச படம்... மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஏன் தெரியுமா??? அதுல சொன்னதுலாம் உண்மை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்