குழந்தையை எப்படி வளர்ப்பது/ சமாளிப்பது.?

ஹாய் தோழிஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க?மன்றத்துல பேசியே ரெம்ப நாளாகுது.சரி விஷயத்துக்கு வரேன்.

என் தோழியோட பையன் அவனுக்கு 3 வயது ஆகுது. அவன் வாய் திறந்து பேசவே மாட்டிக்கிறான்.அவனுக்கு தெரிஞ்சாலும் ஆக்ஷ்சன் தான்.ஸ்பீக்கிங் தெரபி கூட அனுப்பி பார்த்தாச்சு.அவங்க சொல்லிட்டாங்க இவன் நல்லா பேசறான்.ஆனால் attitude பிராப்பளம் என்று சொல்லிட்டாங்க.

எப்படி அவனை இயல்பா பேச வைக்க?என்ன மாதிரி பேசினா அவன் பேசுவான்?அவன் பேசினாலே அழுது கேட்கும் குணம் போகும் அல்லவா?

அப்பறம் அவன் வயது பிள்ளைகளோ அல்லது அவனை விட சின்ன பிள்ளைகளையெல்லாம் திடிரென்று கீழே தள்ளி விட்டறான்.இது இப்ப தீடிர்ன்னு வந்த பழக்கமா இருக்கு. தோழியோ சமாளிக்க முடியாமா அடித்து விடறாங்க.நாங்களும் நிறைய எடுத்து சொல்லியாச்சு, அதட்டி,அடிச்சு,கொஞ்சி எல்லாம் சொல்லி பார்த்தும் இன்னும் எதையும் மாத்த முடியல.

இப்ப ஒரு மாதமா நர்சரி போறான்.இது வரைக்கும் அங்க கம்பிளைட் இல்ல,டீச்சருக்கு கொஞ்சம் பயந்து இருக்கான் போல.ஆனால் ரைம்ஸ் சூப்பரா பாடுவாம்பா,படிப்பு விஷயத்தில் பிரச்சனை இல்லை,ஆனால் எதுவுமே நம்ம கேட்டா சொல்ல மாட்டிகிறான். தானா பாடும் போது கேட்டுக்குவோம்.

எந்த மாதிரி கையாளலாம் சொல்லுங்களேன்?,அவனை திட்டிட்டோ அடிச்சிட்டோ என் தோழி ரெம்ப வேதனை படறாங்கப்பா.அவங்க படற கஷ்டத்தை பார்த்தாலே ரெம்ப கவலையா இருக்கு. இங்க கேட்டா படிக்கறவங்க எல்லாம் ஒரு ஐடியா கொடுப்பீங்க,சிலது நாங்க ட்ரை பன்னியதா இருக்கும்,சிலது புதுசா இருக்கும்.உதவுங்கப்பா கொஞ்சம்.

குழந்தையை எப்படி வளர்ப்பது/ சமாளிப்பது.?

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

இது ஒண்ணும் எனக்கு பெரிய விஷயமா படலை ரேனு..இங்கு வளரும் குழந்தைன்னு நினைக்கிறேன் டிவி பாக்குறதா இருந்தா பாஷை குழப்பமா இருக்கலாம் தமிழ்ல பேசவா இங்லீஷான்னு அதனால் பேசாம இருப்பதே பெட்டெர்னு இருக்கும்...எல்லா குழந்தைகளுமே பாடுன்னா பாடாது ஆடுன்னா ஆடாது நாம அப்படி கட்டாயப்படுத்துவதும் தப்பு தான்..நம்ம ஆசை கேக்குறோம் ஒவ்வொரு குழந்தையின் குணாதசியம் வேறுபடும்..மட்டுமில்ல ஆண்டிக்கு பாடுப்பான்னு சொல்லி குழந்தை ரைம்ஸ் சொல்ல எல்லா ஆண்டிகளும் விரும்பி கேட்பதுமில்லை;-)எதோ அவங்கம்மா ஆசைப்படுறாங்க கேட்டுக்குவோம் அவ்வளவே;-)
பைய்யன் ரைம்ஸ் நல்லா சொல்றான்னு சொல்றீங்க அப்ப ஒன்னும் ப்ரச்சனை இருக்கிறதா தெரியலை.மூனு வயசு தானே பாவம் போக போக சரியாகும் சும்மா குழம்பவும் வேண்டாம் குழப்பவும் வேண்டாம்னு சொல்லுங்க..கொஞ்சம் துருதுருன்னு கியூரியஸா இருக்கும் குழந்தைன்னு நினைக்கிறேன் சும்மா தள்ளி விட்டா எப்படி இருக்கும்னு பாக்குறான் போல;-)..

தளிகா எனக்கு தெரியும் உங்க பதிவு உடனே வரும் என்று.

எங்களுக்கு அவன் பாட்டு எல்லாம் பாட வேனாம்,இன்னும் சொல்ல போனா அவனா பாடி கேட்டு இருக்கோமே தவிர பேசி கேட்டதில்லை.

சின்ன சின்ன வார்த்தை பேசினா போதும் என்று இருக்கு,தா, வேனும் , வேனாம்,இல்லை ,ஆமாம், ஒத்த ஒத்த வார்த்தையா எதோ ஒன்னு சொன்னா போதுமே,எதுவுமே செய்யலப்பா ரெம்ப அதிசயம் அவன் தா ன்னு கேட்டா...
நானும் பிரெண்ட் கிட்ட இதையே தான் சொல்றேன்,நீங்க ரெம்ப குழப்பிக்காதீங்க போக போக சரியாயிடும் என்று ஆனாலும் அவங்களுக்கு இவன் வித்தியாசமா இருக்கான்னு கவலை. ஊருக்கு போனாங்க சமிபத்துல ஊரிலிருந்து வந்த பின் தான் தள்ளி விடற பழக்கம்.அவன் தள்ளிவிடறான் பிள்ளைங்க அவன் கிட்டவே போக மாட்டிக்குது, இவன் இராண்டாவது பையன் பா,அவங்க பெரிய பையன் 3 வது படிக்கிறான்.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரேணு,
உங்க தோழியை மூத்த பையன்,சின்ன பையன் இருவரையும் ஒன்றாக வைத்து சாதாரணமாக விளையாட சொல்லுங்க.பெரியவனிடம் படிக்கும்போது சில கேள்விகள் கேட்டு பதில் சொல்ல வையுங்க,அண்ணன் பதில் சொல்றான் நீயும் சொல்லு இருவருக்கும் பிடித்தமானதை தருகிறேன்னு சொல்லுங்க.

காய் நறுக்கும்போதோ,வெளியிடங்களுக்கு செல்லும்போதோ,ஒவ்வொன்றாக காட்டி பெயர் சொல்ல வைத்து திருப்பி கேளுங்க, குட்டி உனக்கு பிடித்த சாக்லெட் எது அம்மா வங்கி வரனும்னு சொல்லுங்க,பிடிச்ச கலர் எது?எந்தமாதிரி டிரஸ் வேனும்னு கேளுங்க.பொதுவா சொல்லனும்னா உங்க தோழியை குட்டியிட பேசிக்கொண்டே இருக்க சொல்லுங்கள்( எஃப். எஃம் போல),சிறிது நாட்களில் சரியாகிடுவான்......
உங்கள் தோழியை அவன் வயதுபோல விளையாடி,மழழையில் பேசி,நடித்து, கார்ட்டூன்ஸ்போலவெல்லாம் நடிக்க சொல்லுங்க, தோழியின் கேள்விக்கு குட்டி பதில் சொல்வதுபோல அவர்களையே இரண்டையும் இமிட்டேட் பண்ணி விளையாட சொல்லுங்கள்..........சரியாகிடும்னு நம்புகிறேன்........
மற்றபடிக்கு விளையாடும்பொது தள்வது,அடிப்பது இதெல்லாம் நாளடைவில் சரியாகிடும்ப்பா..........

ஹாய் ரேணுகா....... எப்படி இருக்கீங்க. ரொம்ப நாள் கழித்து உங்களை பார்க்க முடிகிறது.

உங்கள் தோழியின் குழந்தை போல தான் எங்க ஐஸ் ம் செய்வாள். அப்படியே டிக்டோவாக இருக்கிறது.

பொதுவாக இதுபோன்ற பிரச்சனைகள் ஏன் ஏற் ஏற்படுகிறது என்று பார்த்தால் குழந்தைக்கு பார்த்து கற்றுகொள்ள ஏதுவாக அவர்களுக்கு ஏரக்குறைய சம வயது நன்பர்கள் இல்லாதது தான். அவர் ஒரே பிள்ளை என்றாலும் இது போல நடந்துகொள்வார்கள்.

என் பொண்ணுக்கும் இது போல பிரச்சனை இருந்ததால் அவளை வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு ப்ளே ஸ்கூலில் சேர்த்து விட்டேன். அங்க படிப்பு எல்லாம் கிடையாது. ஒன்லி விளையாட்டு தான். 2 1/4 வயதிலிருந்துதான் ரைம்ஸ், ஜிகே போன்ற விஷயங்களை சொல்லிக்கொடுத்தார்கள்.

இப்போ மற்ற குழந்தைகளிடம் ரொம்ப நட்பா பழகுறா. 40 ஆங்கில& தமிழ் ரைம்ஸ், ஜிகே என அனைத்தையும் அவ்வளவு அழகா தப்பில்லாம பாடுவாள்.

இதில் வேடிக்கையான விஷயம் என்னன்னா என்னிடமோ அவள் அப்பாவிடமோ ஒருமுறைகூட 40 ஐயும் பாடிக்காட்டியதில்லை.

இரவு தூங்க படுக்கும்போது அவளாகவே ஒவ்வொன்றாகப் பாடிக்கொண்டே தூங்கிடுவா. மற்ற நேரத்தில் எல்லாம் சொல்லவே மாட்டா.

நானும் நாமளே ஒரு டீச்சர். நம்ம பிள்ளைக்கு நிறையா படிக்க சொல்லிகொடுக்கனும்னு எவ்வளவு முயன்றாலும் தோல்விதான்.

இன்னும் குறிப்பா சொல்லபோனா அவளுக்கு நம்ம ஊர் பெயர், மாநிலம், நாடு, தேசியப்பறவை, விலங்கு, பிரதமர், முதல்வர், ஜனாதிபதி ஆகியோரின் பெயர்கள் தெரியும் என்பதே அவள் பள்ளி ஆண்டு விழா அன்று அவளின் பெர்பாமென்ஸ்ல தான் தெரிந்துகொண்டோம்.

இதை எப்படி சமாளிக்கனும் என்றால் அவலுக்குத் தெரிந்த ரைம்ஸை நானும் பாடிக்கொண்டே இருப்பேன். அவளோட ரைம்ஸை நாம் பாடும்போது அவளுக்கு ரொம்ப ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் எண்ணி நாளடைவில் நாங்கள் இருவருமே சேர்ந்து பாடுவோம்.

பிறகு அதிலிருந்து என்னிடம் நிறைய பேச ஆரம்பித்துவிட்டாள்.

முதலில் அவர்களுக்கு ந்நம் கேட்க்கும் கேள்விகளுக்கு எப்படி பதில் சோல்லனும் என்றூ தெரியாது.

நாமே ஏதாவது கேட்டு அதர்க்கான பதிலையும் சொல்லி அப்படியானு கேட்டால் அவர்களும் அதை திரும்ப சொல்லுவார்கள். அப்படியே படிப்படியாக பேச்சு வந்துவிடும்.

முடிந்தவரை குழந்தைகளை அக்கம்பக்கது குழந்தைகளிடமும், உறவினர் வீட்டுக் குழந்தைகளிடமும் பழகுவதற்கான வாய்ப்பை நாம் தான் ஏற்படுத்தித்தரனும்.

நம் வீட்டுப் பெரியவர்களிடம் நெருக்கமாகப் பழக விடனும். நாம் சொல்லி கற்றுக்க்ள்வதைவிட மற்றவர்களீடம் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருப்பார்கள்.

தனித்து இருந்தே பழகியதால் தான் மற்ற பிள்ளைகளிடம் அவ்வாறு முரட்டுத்தனமாய் நடந்துகொள்வாங்க.

மற்ற குழந்தைகளை தள்ளி விட்டாலோ, அடித்தாலோ, கடித்தாலோ தயவுசெய்து பிள்ளையை அடிக்கக்கூடாது. அது மேலும் அக்குழந்தையின் மனதில் வன்முறையை தூண்டும்.

நீ இப்படி அடித்தால் அவர்கள் உன்னோடு விளையாட மாட்டாங்க, உன்னோடு பேசமாட்டாங்க என்று கூறினாலே எங்கே தமக்கு கூட விளையாட யாரும் வரமாட்டாங்களே என்ற பயத்தில் அமைதியாகிடுவாங்க.

அதன்பின் சாரி கேட்க வைத்து, சண்டை வராமல் விட்டுக்கொடுத்து விளையாடனும் என்று மறுபடி மறுபடி சொல்லி சொல்லி கண்கானித்து விளையாட வைத்தாலே எப்பேர்பட்ட முரட்டு குழந்தைகளும் நட்பான குழந்தையாகி விடுவார்கள்.

குழந்தைகள் செட்டை செய்யும்போது பெற்றவர்களான நாம் உடனே உடனே அடித்து கத்தி திட்டினால் அதே குணம் அக்குழந்தை மற்ற குழந்தைகளிடமும் அவ்வாறு நடந்து கொள்ளும்.

எனவே நாம ஒவ்வொரு விஷயத்தையும் சற்று ட்ரிக்கா ஹேண்டில் செய்தால் நாம் சொல்படி நடந்துகொள்வார்கள்.

அமைதியான சுபாவமுள்ள குழந்தை என்றால் பிரச்சனையே இல்லை.

வீட்டில் தாத்தா, பாட்டி, மாமா, அத்தை பிள்ளை, சித்தி பெரியம்மா அத்தை பிள்ளைகள் என்று கூட்டாக வளரும் பிள்ளைகளுக்கு எந்த பிரச்சனையும் வருவதில்லை.

அப்படி இல்லாத பட்சத்தில்தான் இதுபோன்ற குணங்கள் ஏற்படுகிறது. அதை நாம் புரிந்துகொண்டு அதற்கேற்ற சூழ்நிலைகளைஉருவாக்கிக் கொடுத்தாலே மாற ஆரம்பித்துவிடுவார்கள்.

உங்கள் தோழியிடம் கவலைபட வேண்டாம் என்று கூறுங்கள். ஸ்கூலுக்கு போக ஆரம்பித்தாலே படிப்படியாக குறைந்துவிடும்.

வாழ்த்துக்கள்.......

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

டோன்ட் வரி..அது இன்னும் சின்ன குழந்தை என் மகள் முன்பு யாரிடமும் பெரிசா பேசியதில்லை ஆனால் வீட்டில் மட்டும் சரியான சாமர்த்தியம்..எதுக்கு அதிகம் ஸ்கூள் சேத்ததும் அங்கும் சொல்ல கூச்சம் பயம்..ஆனால் இப்போ நிலமை தலைகீழ் தானா நான் போறேன் போறேன்னு போய் சேந்துக்குவாங்க எல்லாத்திலும்..நான் பாடவா நான் பேசவான்னு ஆசையா கேப்பாங்க..வளர வளர சரியாகிடும்..இதெல்லாம் சும்மா மத்த பிள்ளைகளோடு கம்பேர் பண்ரதால் வரும் கவலை

hai thalika mam enakku a, b, c, g, j letters il girl baby name sollunkalan plz

மேலும் சில பதிவுகள்