மாமியார் மருமகள் உறவு

குடும்ப உறவுகள் மேம்பட மாமியார் மருமகள் உறவு வலுவாக அமைய வேண்டும்.மாமியார் மருமகள் அம்மா பெண் போல நல்ல தோழியாக இருந்தால் ஆனந்தம் விளையாடும் வீடு தான்.எனவே தோழிகள் இது குறித்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாமே.

nikila solrathu hundred percent correct. but ellorukum appadi mamiyar kidaippathillai. mamiyargal ellam avunga ponnungala polavae marumagalaium pathukita yarukum entha problem um irukathu.

என் மாமியாருக்கு பெண் குழந்தை கிடையாது.என் கணவரோ கடைக்குட்டி அம்மா செல்லம்
எனவே,என்னால் அம்மா பிள்ளைக்கு இடையே எந்த பிரச்சனையும் வந்துவடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன் .என்னோட மாமியார் இன்னொசென்ட்,,சைல்டிஷ்....எங்கள் திருமணத்திற்கு பின் ஆறு ஆண்டுகள் அவர் உயிரோடிருந்தார்.இந்த மாதம் அவருடைய நினைவு நாள் வருகிறது.

பூமா
நாம் முதலில் அவங்க யேதும் சொன்னாகூட அதை பெரிது படுத்தாமல் விட்டு விடலாம். நாம் மாமியாருடன் நல்லுறவுடன் இருந்தால் முதலில் ரொம்ப சந்தோஷப்படுவது கணவர் தான்
அவரது மகிழ்ச்சி குடும்பத்தில் அனைவரிடமும் எதிரொலிகும்

neenga sonnathu correct. but ellorudaiya life la um ore mathiri nadakirathillai. enaku love mrg ennoda mamiyar v2la first problem irunthathu appuram accept pannitanga. avungala porutha varai naanum ennoda husbend um avungala poi parkanum nu ninaipanga. but engaluku udambu sari illaina kuda enga v2ku varamatanga. avunga ponnu mrg ku kuda enngaluku solla la. but ellorkitaium engala pathi complaint pannuvanga. appo ellam romba feel a irukum.

எனக்கு தெரிஞ்ச ஒருத்தருக்கு 5 ஆண்பிள்ளைகள் 5 மருமகள்கள் அவ்ங்க வீட்டுக்கு போனால் ஆசை வந்துடும் மருமகள்கள் மடியில் படுத்து கொஞ்சுவார்கள் மாமியாருடன் ஜாலியாக ஊர் சுற்றுவார்கள் ஜோக் சொல்லி சிரிப்பாங்க வேலையை ஒண்ணா போட்டி போட்டு செய்துட்டு போய் அரட்டை அடிப்பாங்க.எல்லா வீட்டிலும் அப்படி இருந்தால் நல்லா இருக்கும்..நான் அவங்க கிட்டயே சொல்லிட்டேன் அருமையானகுடும்பமென்று அப்போ அவங்க சொன்னாங்க என் மருமகள்கள் என் மகஙளை போல தான் என் மகஙளிடம் குறியில்லாமல் இல்லை நான் அவர்களை வெறுத்ததுமில்லை மருமகள்களிடம் குறை காணும்போது மட்டும் அதை பெரிசு படுத்தலாமா..எதையும் கண்டுகொள்ளாமல் அவஙவங்க வேலையை பார்ப்போமா சிரிப்போமான்னு இருந்தா எப்பவும் இப்படி இருக்கலாம் என்பார்.
சில வீட்டில் மருமகள்கள் அடங்கி போனாலும் மாமியார் குறை ச்ல்லியே ஆக வேண்டும் என்று இருப்பாங்க..சில வீட்டில் மாமியார் பொறுமையா இருந்தாலும் மருமகள்கள் அடங்கா பிடாரிகளாக இருப்பாங்க..எல்லாம் ஒன்று போல் அமைவது ஒரு பெரிய பாக்கியம் தான்

நிகிலா!! நல்ல டாபிக் பா.
என்னோட மாமியார் ரொம்ப நல்லவங்க. எங்க கணவன், மனைவி பிரச்சனையில தலையிடவே மாட்டாங்க. எனக்கு சமையலில் ரொம்ப ஹெல்ப் பண்ணுவாங்க. வீட்டையும் தானே முன்வந்து சுத்தப்படுத்துவாங்க.
எல்லா விஷயத்தையும் எங்கிட்ட ஷேர் பண்ணிப்பாங்க. எங்கே வெளியே போனாலும் எனக்காக எனக்கு பிடிச்சதை வாங்கி வருவாங்க. என்னை யாருக்காகவும், எதுக்காகவும் விட்டு தர மாட்டாங்க. என்னை பற்றி எல்லோர்கிட்டயும் பெருமையா பேசுவாங்க. என் அம்மா வீட்டு மனுஷங்களை மதிப்பாங்க. நான் சாப்பிடும் போது அன்பா தோசை வார்த்து தருவாங்க. எனக்கு பிடிச்ச ஸ்வீட்ஸை அப்பப்போ செய்து கொடுத்து அசத்துவாங்க. நாங்க அவுட்டிங் போனா பேரனை பொறுப்பா பார்த்துப்பாங்க.

ஆனா தோழீஸ் இன்று இவ்வளவு நெருக்கமா இருக்கும் எங்களுக்கு, ஒரு காலத்தில் சேரவே சேராது. குடும்பத்தில் நிறைய சண்டை வந்திருக்கு. நான் தப்பு செய்தாலும், என் மாமனார் சொல்வார், அது சின்ன பொண்ணு, நீ தான் விட்டு கொடுத்து போகனும். இப்படி நீயும் ஏட்டிக்கு போட்டியா நின்னா குடும்பம் வீணாயிடும்னு மாமியாருக்கு அட்வைஸ் பண்ணுவார். அதனால் நாங்களே எங்க தப்பை ரியலைஸ் பண்ணி திருந்த ஆரம்பிச்சோம். இன்று நானும், என் மாமியாரும் சேர்ந்து அடிக்காத லூட்டி இல்லை.

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

thalika madem, unmailaiae nalla mamiyar, nalla marumagl amaivatharku periya pakkiyam than seithirukanum. neenga sonna family la ulla ovorutharum punniyam seithavangala irupanga nu ninaikiren.

தாளிகா
மாமியாரும் மருமகளும் சேர்ந்து லூட்டியா? நினைச்சி பார்த்தாலே ஆனந்தம் தான்.
என் தோழி ஒருத்தி உடல் நலமில்லாத மாமியாரை நன்கு கவனிப்பாள் அதனாலேயெ அவள் கணவன் அவளை தாங்கு தாங்கெனெ தாங்குவான்.
மாமியாரிடம் எல்லா விஷயமும் ஷேர் பண்ணினால் ம் ம் நேருங்கிய தோழியுடன் இருப்பதை போல ஆனந்தம் தான்.
பூர்ணிமா
மருமகள் சிறு பெண் தானெ.மேலும் அவளுக்கு புகுந்த வீட்டினரை புரிந்து கொள்ள கால அவகாசம் கொடுக்க வேண்டும்.புகுந்த வீடு தான் நமக்குரிய உரிமையுள்ள வீடு.அங்கு நடப்பவைகளை வெளியே யாரிடமும்கூறக் கூடாது.
மாமியாரும்,தான் மருமகளாக இருந்த காலத்தில் தன் மாமியாரிடம் எதிர்பார்த்த நற்குணங்களுடன் மருமகளை நடத்த வேண்டும்

நல்ல டாபிக்.. அம்மா ஏதாவது கேட்டா சங்கடபடாத நம் மனது மாமியார் கேட்டா சங்கடபடுதுங்கற பட்சத்தில்,நம் மாமி அவர்களின் மகள் வார்த்தையை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நம் வார்த்தையை மட்டும் பெரியதாக எடுத்துக் கொள்கிறார் என நினைப்பதில் நியாமமே இல்லை..
அம்மா பொண்ணு மாதிரி எங்கேயும் வராது தான்..ஆனால் நம் கணவரை பெர்றேடுத்தவர், இத்தனை காலம் வளர்த்தவர் அவர் இல்லாமல் நம் கணவர் இல்லை என என்றும் மனதில் நினைக்க வேண்டும்.அவர் ஏதாவது பேசினா, சங்கடமா இருக்கு அப்படினா, பேசுற மாதிரி நடந்துக்க வேணாம்.. பொறுமை தான் எல்லாத்துக்கும் சரியான வழி.கணவனின் மனதை அறிந்து நடக்கிறோம். அதை போல அத்தையின் மனதை புரிந்துக் கொள்ள முடியாத வெகுளி இல்லை இன்றைய பெண்கள். அவர் இருக்கும் வரையில் சந்தோசமாக வைத்திருப்பது ஒவ்வொரு மருமகளின் கடமை தான்.கணவனிடம் சொல்லி எல்லா சூழ்நிலையிலும் மாமியாருக்கே முன்னுரிமை கொடுக்க சொல்ல வேண்டும்.நம்மை இரண்டாம் பட்சமாக நினைத்தால் தான் என்ன? நாம் கணவனையும், குடும்பத்தையும் பிரிக்க வந்தவர்கள் இல்லை என உணர்த்தி விட்டாலே போதும், மாமியார் போல தாங்குபவர்கள் வேறு யாராகவும் இருக்க முடியாது.. அலுவலகம், வெளியிடம், நண்பர்கள் என பல இடங்களில் விட்டு செல்கிறோம். மாமியாருடன் விட்டு சென்றால் என்ன குறைந்துவிடும்? .கணவனை அதிகம் வெளியில் புகழ வேண்டாம் என சொல்வதிலும், அம்மாக்கு முதல் உரிமை கொடுங்கள் என சொல்வதிலும், மாமியார்,அவருக்கு மட்டுமில்லை தனக்கும் ஒரு அம்மா தான் என தோன்ற வைக்க வேண்டும்..

அந்த இனிய சந்தர்ப்பத்தை நழுவ செய்து, ஏதாவது அவரசரபட்டு வார்த்தைகளை பேசி, சிறிய விரிசலை உண்டாக்கி , பின் என்ன செய்தாலும் அதில் பலன் இல்லாமல் போயி விடும்.மகன் , மனைவியை கூட என் முன் விட்டுக் கொடுக்கிறானே எனநினைத்து, அவரே மகனுக்கு அறிவுரை கூறும் நிலை கூட ஏற்படலாம்.
*நம் கணவன் நமக்கு தான்.அது எல்லாருக்கும் தெரியும்.நாலு சுவற்றுக்குள் கணவன் நம்மிடம் நடந்துக் கொள்வதையும், நம் மனம் உருக பேசுவதுமே போதும் .அவர் நமக்கு சொந்தம் என்பது முற்றிலும் உண்மை.அது வெளியே தெரிய வேண்டும்,என் கணவர் என் மேல் இத்தனை பாசம் வைத்து இருக்கிறார் என நிருபிக்க தேவையில்லை. பல பெண்கள்.. உங்கம்மா முன்னாடி இப்படி பெசிட்டிங்கலேன்னு மூக்கால அழுவாங்க.. கணவன் நமக்கு தாணு பல வழிகளில் உணர்த்த முடியும்.ஆனால் அம்மாவை மனைவி முன் தூக்கி வைத்து பேசி தான், இன்னும் நாம் உன் மகன் என புரிய வைக்க முடியும்.அங்கே நாம் மல்லுக்கு நின்றால் பிரச்சனை தான்.
* மகனுக்கும், தாயிக்கும் இடையே உறவு பாலத்தை வலுவாக்கிக் கொண்டே போவது நம் கடமை..அதை நாமே உடைத்து விடக் கூடாது.
* அவர் சமையலை செய்ய வேண்டும் என நினைக்கிறார் எனத் தெரிந்தால்,அவரிடமே சமையலை விட்டுவிட்டு உதவியாய் இருக்கலாம்.
*மற்றவரிடம், ஏன் தாய் வீட்டில் கூட அத்தையை விட்டுக் கொடுக்காமல் இருக்க வேண்டும்.
*பிறந்த நாள், திருமண நாள் என அனைத்தையும் நியாபகம் வைத்து ஏதாவது செய்யலாம்..
*குழந்தைகள் ஆகி வருபவர்களை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.நமது புரியாத வயதில் எத்தனை தவறு செய்தாலும், நம்மை பொறுமையுடன் கையாண்டவர்களை, அதே வழியில் நாமும் கையாள நமக்கு கிடைத்திருக்கும் அற்புதமான சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாது.
*இத்தனை தெளிவாக சிந்திக்கக் கூடிய இளைய சமுகமே பல வழிகளில் தவறு செய்யும் போது, வயதாகி போனவர்கள் செய்தால் அதை பெரிது படுத்தக் கூடாது.
*அம்மா மாதிரி பார்க்க வேண்டும்.அம்மாவாகவே பார்க்க முடியாது என்பது உண்மைதான். ஆனாலும் ஒரு பெரியவர் என பார்த்து சரியான முறையில் நடந்துக் கொள்ள வேண்டும்.
* தேவையில்லாத பேச்சு, மற்றவரை பற்றி புறம் கூறுவது எல்லாம் இருக்கக் கூடாது.
*கணவரிடம் நேரம் செலவிடுவது போல, கோவிலுக்கு செல்வது,தனியாக நேரம் செலவிடுவது,வெளியில் அழைத்து செல்வது, வாக்கிங் போவது,நமது கஷ்டங்களை சொல்வது, சின்ன வயதில் செய்த குறும்பை சொல்வது,போன்றவற்றை செய்யலாம்.
*புடவை , மற்ற தேவையான பொருட்களை அவ்வப்போது வாங்கி கொடுக்கலாம்.
* அத்தையை கணவனிடமும் கூட விட்டுக் கொடுத்து பேசக் குடாது.
*வயதாக வயதாக, தனக்கு மரியாதை குறைகிறது என இயலாமை காரணமாக, அவர்களுக்கு ஒருவித பயம் ஏற்படும்.அவர் தான் வீட்டில் எல்லாம் என்ற நிலையை கொடுத்து,முக்கியத்துவம் கொடுத்தால், மன அழுத்தத்தால் உண்டாகும் பிரச்சனை குறைந்து, நம் மனதையும் புரிந்துக் கொள்வார்கள்.
*சமைப்பதில் கூட அவர்களுக்கு பிரியாரிட்டி கொடுத்து அதிக காரம்,எண்ணெய் இல்லாமல் செய்வது.
* அவர்களுக்கு பிடித்த சுழலை வீட்டில் உருவாக்கிக் கொடுப்பது
* சின்ன சின்ன விஷயங்களில் கூட அவர்களின் அறிவுரையை கேட்டால் சந்தோசபடுவார்கள்.
*இளைமையாக இருக்கும் போது உள்ள காலங்களை விட்டுவிட்டு, வயதான பின்பா? அவர் கொடுமைபடுத்த நினைக்க போகிறார்? அதனால் அவருக்கு என்ன பயன்? கண்டிப்பாக யாரும் மகனின் சந்தோசத்தை கெடுக்க நினைக்க மாட்டார்கள். அதை சரியாய் கையாள வேண்டியது நமது கடமை தான்.
*நாம் கொடுக்கும் மரியாதை பார்த்து தான், நம் குழந்தைகள் தாத்தா பாட்டியுடன் நல்லமுறையில் நடந்துக் கொள்ளும்.
*மருமகள்னு வந்தா இனி எல்லாம் அவள் தான் என்ற எண்ணம் வரும்.இல்லை எப்பவும் அவர் தான் வீட்டில் எல்லாம் என்ற நிலையை கொண்டுவர வேண்டும்.இது கண்டிப்பாக சாத்தியம் தான்..
*புரிந்துக் கொள்ள முடியாத சுழலில் மௌனமாக செல்வது தான் நல்லது.
*என்ன செய்தாலும் சிரமத்தை கொடுக்கும் கொடுமைக்கார அம்மானா, நாசுக்கா கொடுக்க வேண்டுய இடத்தில் கொடுக்க வேண்டியதை கொடுத்து நம் வழிக்கு கொண்டு வர வேண்டியது தான்.
*மகன் திருமணத்துக்கு முன் என்ன செய்தாலும் ஒன்னும் பிரச்சனை இல்லை..ஆனால் தி பி சும்மா சாதரணமா பெரிவங்களை திட்டினாக் கூட அதில் நம் பெயர் வரும்.இரண்டு புறமும் சரியாக நடந்துக் கொள்வது நம் பொறுப்பு தான். அதிகம் பெற்றவர்களிடம் கணவரை கோபப்பட வைக்க கூடாது.பாவம்..பெத்தவங்க தாங்கக மாட்டாங்க.
*எங்கம்மா இப்படி அப்படின்னு பிறந்த வீட்டு பெருமை அடிக்கக் கூடாது.
*வீட்டை சுத்தமா வெச்சுக்கணும். காலை சரியாக எழுவது,கோலம் போடுவது ,சரியான நேரத்தில் வீட்டை பெருக்கி விளகேத்தனும். இதெல்லாம் அடிமைத் தனமோ, மூட நம்பிக்கையோ இல்லை. இதை செய்தால் நமக்கே ஒரு புத்துணர்வா இருக்கும். முக்கயமா பொருட்களை வேஸ்ட் பண்ணாம இருப்பது இது தான் அவர் விருப்பம்னா செய்ய வேண்டியது தானே. இதில் தவறுன்னு சொல்ல ஒண்ணுமில்லை.வேலைக்கு போகும் பெண்கள்னா கூட இதை பெரும்பாலான நாட்களில் செய்ய முடியும்.இதெல்லாம் மாமியாரிடம் மரியாதையை கண்டிப்பா பெற்று தரும். மென்மையாகவும்,அதே சமயம் பக்குமா மேச்சுரிட்டியாவும் நடந்துக்கணும்.பலர் நமக்கு ஒரு ஐடெண்டி வேலையிடத்தில் வேணும்னு உழைக்கறாங்க.வாழ்வின் ஆதாரனமான குடும்பத்தில் இருக்கும் ஐட்டேன்டியை குழி தோண்டி புதச்சிடறாங்க.
* புதுசா வீட்டுக்குள் நுழைந்து,கணவனை பற்றி எல்லாம் தெரிந்துக் கொண்டால் கூட, முகத்தில் அடித்தார் போல, முள்ளங்கி அவருக்கு பிடிக்காதுன்னு சொல்வது, அவர் இப்படி தான் தம்பட்டம் அடிப்பது எல்லாம் இருக்க கூடாது.ஆண்கள் படிப்பதில் இருந்து வேலை செய்வது வரை வெளியிடத்தில் தங்கி இருப்பதால், பல பெற்றோர்க்கு மகன் தேவை உண்மையாகவே தெரிவதில்லை தான். அதற்காக பட்டுன்னு சொல்லாம முறையா நடந்துக்கணும்.இப்ப வந்தவளுக்கு என் பையன் பத்தி என்ன தெரியும்னு ஈகோ வரும்..
மருமகள் மேல் எந்த மாமிக்கும் முன் ஜென்ம பகை இருப்பது இல்லை.மகனை பிரிச்சிடுவாங்களோனு பயம் தான் பக்கு பக்குன்னு இருக்கும்.அந்த சமயத்தில் நாம் எதோ செய்ய போக எல்லாம் சொதப்பி, நம் கணவரும் இருதலை கொள்ளி எறும்பு ஆகிவிடுவார்.அந்த பயத்தை போக்கி, குடும்பத்தில் ஒன்றாக நானும் இணைந்து வாழ வந்துள்ளேன் என்பதை உணர்த்திட்டாலே பாதி பிரச்சனை ஓவர்.
பிறந்த வீட்டில் தங்கி இருக்கும் போது , பல பெண்கள் கணவரிடம் தொலைபேசியில் அழைத்து பேசுவார்கள்.ஆனால் மாமியார் மாமனாரிடம் பேச தவறி விடுவார்கள்.அப்ப அவங்களுக்கு என் மகன் இருந்தால் போதும்னு நினைக்கிறான்னு எண்ணம் தோன்றும் இல்லையா?
இன்னும் நிறைய இருக்கிறது. புகுந்த வீட்டில், புது இடத்தில் நல்ல பெயர் வாங்க நாம் தான் மெனக்கெட வேண்டும்..நம் மாமியார் அப்படி செய்ய தேவையில்லை. ஏன் .. மேலே சொன்ன விஷயத்தை எல்லாம் மாமியே செய்ய வேண்டியது தானே ,அவர் சின்ன பெண் என விட்டுக் கொடுத்து போக வேண்டியது தானேனு நினைத்தாலே, முடிஞ்சி போச்சு ;) இது ஒரு சூப்பரான ஒரு டாபிக்ங்க.. நானும் , என் கணவரும் போட்டி போட்டுக் கொண்டு பெத்தவங்கள தாங்க நினைப்போம்.ஆனால் நான் டக்குனு பெரியவங்க ரெண்டு பெரும் என்ன நினைக்க வராங்கனு என் கணவருக்கு முன் புரிந்துக் கொள்வேன்.நல்ல பேரும் வாங்கிடுவேன். :)

அடிக்காதிங்க..பட்டி மாதிரி பேசிட்டேன் ;(

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

superb Ramya.. கலக்கிட்டிங்க.. உங்கள மாதிரி எல்லாரும் இருந்தா எப்படி இருக்கும்? வீடே சொர்க்கம் தான். எனக்கும் ஒரு நல்ல மாமியார் கிடைச்சிருக்காங்க. அவங்க ரொம்ப ரொம்ப நல்லவஙக. இளகிய மனசு. TV ல எதாவது cஎன்டிமென்ட் சீன் பாத்தாலே அழுதுடுவாஙக. நான் உனக்கு எப்பவும் ஒரு நல்ல தோழியா இருப்பென்னு சொல்லுவஙக.. ஐயம் வெரி லக்கி.

மேலும் சில பதிவுகள்