மாமியார் மருமகள் உறவு

குடும்ப உறவுகள் மேம்பட மாமியார் மருமகள் உறவு வலுவாக அமைய வேண்டும்.மாமியார் மருமகள் அம்மா பெண் போல நல்ல தோழியாக இருந்தால் ஆனந்தம் விளையாடும் வீடு தான்.எனவே தோழிகள் இது குறித்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாமே.

அன்பு ரம்யா
ரொம்ப அழகா தெளிவா சொல்லியிருக்கீங்க .உங்க பதிவை அப்படியே பிரின்ட் எடுத்து புதிதாக மணமாகி புகுந்த வீடு செல்லும் பெண்களுக்கு கொடுக்க தோனுகிறது. வெறும் பாராட்டுக்கு சொல்லவில்லை ரம்யா .சத்யமான வார்த்தை.
மாமியார்" கணவனைப் பெற்றவர்" என்பதை நாம் மறக்க கூடாது .கணவர் வேண்டும் அவரைப் பெற்றவர்கள் வேண்டாம் என்பது எந்த வகையில் நியாயம்?
சமீபத்தில் உறவுக்காரப் பெண் ஒருவருக்கு உடம்பு சரியில்லை என்று பார்க்க சென்றேன் .வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தேன் .விடை பெற்றுக் கொள்ளும்போது அவர் மருமகள் பற்றி கேட்டபோது அழுது விட்டார் . தன பேரக் குழந்தைகளைக் கூட தன் அருகில் வர விடுவதில்லை என்று வருத்தத்துடன் கூறினர் .
சில பெண்கள்" நான் சண்டை எனவே என் பிள்ளைகளும் பேசக்கூடாது "என்று தாத்தா பாட்டி அருகில் குழந்தைகளை விடுவதில்லை.
மாமனார் மாமியார் பெற்றெடுத்த அவர்கள் பிள்ளை (கணவன்) மட்டும் வேண்டும் .
((மருமகள் மேல் எந்த மாமிக்கும் முன் ஜென்ம பகை இருப்பது இல்லை.மகனை பிரிச்சிடுவாங்களோனு பயம் தான் பக்கு பக்குன்னு இருக்கும்)).
நுறு சதம் உண்மை ரம்யா .நான் உங்களில் ஒருத்தி என்று புரிய வைத்தாலே போதும் .
நான் குழந்தைகளை அடித்தால் என் கணவருக்கு என் மீது கோபம் வந்து விடும்.அந்த மாதிரி சந்தர்ப்பத்தில் என் மாமி தான் எங்கள் இருவரையும் சமாதனம் செய்வார் ஒருநாளும் எங்களிடையே மாமியாரால் பிரச்னை வந்ததில்லை.
சில விடுகளில் பெண்ணின் அம்மாவும் தான் மகளுக்குதனி வழியையே காட்டுகின்றனர். கணவர் மட்டும் போதும் பிற உறவுகள் தேவையில்லை என்று சொல்லி கொடுக்கின்றனர். இந்த கால பெண்கள் புரிந்து கொண்டு வாழக் கற்று கொள்ள வேண்டும்.
அப்படி வாழ்ந்தால் புகுந்த விடு இனிமையான மல்லிகைப் பந்தல் .

அன்பு ரம்யா

கண்டிப்பா இது ஒரு பட்டிக்கான தலைப்பே தான் சந்தேகமேஇல்ல
பட் என்ன புதுமை னா தீர்ப்பை முதலில் நீங்க எழுதிட்டீங்க. அவ்ளோ அருமை.

பக்கத்து வீட்டில் இருக்கும் பிள்ளையின் வயது 36 .(ஒரே மகன், அப்பா இல்லை ) இன்னும் திருமண ஆகவில்லை. நிறைய பெண்கள் தாய் உங்களோடு இல்லை என்றால் ஓகே என்கிறார்களாம். என்ன கொடுமை பாருங்க. சம்பளம் ஒரு புறம்.மாமியார் என்றாலே ஜூ வில் பார்க்கும் ஜந்து போல ஆகிவிட்டது.

சிவசங்கரியின் பாலங்கள் கதையில்-- எப்படி மருமகள்கள் தான் ஒரு குடும்ப அமைப்பில முன் தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் பாலமா இருக்கணும் என்பது சொல்லியிருப்பாங்க. அவரவர் இன்பம் மட்டுமே மேல் என்று ஆகிவிட்டால் தீவில் வாழ்வது போலே ஆகிவிடும் இல்லையா

உங்க பதிவு புதிதாய் திருமணம் ஆகி போறவங்களுக்கு சீர் வரிசை போல கொடுக்கலாம்.

கொஞ்சம் விட்டு கொடுத்தால் குறை ஒன்றும் வராது--நிறையே ஆகும் .

வாழ்த்துக்கள் பா

enaku marraige agi 3 yrs aagudhu.nenga solra ellam na follow pannitu than iruken but en mamiyar enna edhiriya than pakuranga enna panna? idhu varaikum enna yevalavo kayapaduthi irukanga aana na edhirthu oru varthai kuda pesunadhu illa aanalum enna patha avangaluku pidikala. en manasula irukuradha sollanumna oru naal aagum.... enakaga en husband 10rs selavu(adhu hospital selava irundha kuda) senja kuda avangaluku pidikadhu. deepavali ku mamiyaar ah than koopitu poi saree eduthu kuduthanga na kekave illa. but veetuku vandhu solranga unaku saree vangi kuduka enaku istame illa vangunadhe pidikalanu enaku ore alugaiya vandhuduchi na edhum pesala...idhu oru sample than idhu madhiri daily edho onnu nadakkum....elam solla time illa ...ippidi yevalavo irundhalum innum porumaiya kathutu iruken ennikavadhu oru naal enna purinjipanganu...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

பொருத்தமா அம்ஞ்சுட்டா நல்லது..அல்லது ப்ரச்சனை இருக்கும் வீட்டில் யாராவது ஒருத்தர் அடங்கி போய் தான் ஆகணும்..சின்ன பொண்ணாச்சேன்னு மாமியாரும் பெரியவங்களாச்சேன்னு மருமகளாவது பொறுமையா இருக்கணும்..இதனால் நிறைய குடும்பத்தில் ஆம்பிளைக நிம்மதியை தொலைக்கிறாங்க..என்ன தான் ப்ரச்சனை வந்தாலும் வேறோடு அறுத்துட்டு ஓடலாம் என்று ஒருபோதும் நினைக்கவே கூடாது..எவ்வளவு வருஷம் கஷ்டப்பட்டிருப்பாங்க வளர்க்க குடும்பம் குழந்தைங்கன்னு பசங்க இருப்பது சில சமயம் அவங்களுக்கு சங்கடத்தை கொடுக்கலாம்..இனி அப்படியே தப்புன்னாலும் ப்ரச்சனை பெரிசாகாம பாத்துக்கணும் அப்போ தான் நாளை நம்ம பிள்ளைகள் நம்மையும் மதிக்கும் இல்லைன்னா பாட்டி தாத்தாவை ஒதுக்கினதை இன்ஸ்பிரேஷனா எடுத்துட்டு பெரியவங்களை இப்படி ஒதுக்கிடலாம்னு நினைக்கும்..
இதே மாதிரி பெரியவங்களும் சில வீட்டில் ப்ரச்சனையை ஊதி குடும்ப வாழ்க்கையை பிரிச்சு வச்சுடறாங்க..அவங்கவங்க வாழ்க்கை சந்தோஷமா இருக்கட்டும்னு விட்டுக் கொடுக்கலாமே.என்ன தான் ஆனாலும் கணவரிடம் அவங்க வீட்டு குற்றத்தை பாடிகிட்டே இருக்க கூடாது.
என் மாமியார் என்னுடன் நல்லதுக்கும் இல்லை கெட்டதுக்குமில்லை அவங்குண்டு வங்க வேலை உண்டு ஆனால் என் மாமனார் ரொம ரொம்ப பாசமாக இருப்பார்..என் அப்பா எனக்கு தந்த பாசத்தை விட ஒரு மடங்கு அதிகமா செய்யனும்னு நினைப்பார்..அதுவும் ஒரு பாக்கியம் தான்

தாளிகா
மாமனார் இல்லாத வீடு, காவலாளி இல்லாத தோட்டத்தை போலன்னு ஒரு புத்தகத்தில் படித்தேன்.மாமனாருக்கு வெளி உலக அனுபவம் உண்டு .நாட்டு நடப்பை எடுத்து சொல்லி தன் மனைவியையும் சரி செய்வார் .தலைமை ஸ்தானத்தில் இருந்து குடும்பத்தை வழிநடத்துவார்.

nantri madam, ungaludia karutthukkal ellam vazhgaiku devaianavai.kandippa follow pannuven.

ப்ரென்ட்ஸ் எல்லோரும் வாங்க வந்து உங்க கருத்துக்களை சொல்லுங்க.....

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

ena panarenga elaraum

ennoda life um indira life mathiri than. enaku amma kidaiyathu, athanala ennoda mamiyara naan amma nu than kupuduven. entha visayama irunthalum avunga kita sollanum friendliya irukanum nu ninaipen. but ithu varaikum nadakala. enaku love mrg so avungaluku enna first irunthae pidikathu naanga thania than irukom. avungala hospital la admit pannirunthanga appo parka yarum illa nu enna kuputanga naanum ponen. appo en kita nalla paesunanga. athuku appuram athigama paesamatanga enga v2ku pakkathula iruthu call pannuvanga. avunga poi avunga amma va parpanga. v2ku ulla kuda vara matanga. ithu ellathaium vida avunga ponnu mrg ku kuda ennaium en husbendai um kupudala. enaku kulanthai illa nu than enna verukuranga nu ninaikiren. chinna vayasula irunthu pasam kidaikama valarnthen avungalavathu en mela pasama irupanga nu ninaichen athuvum nadaka la, athan romba feel la iruku.

பூமா
உங்க மாமி அவங்க உடம்பு சரி இல்லாதப்போ நீங்க கவனிக்கும் போது நல்லா பேசினத சொல்றிங்க .அதனாலே நீங்க பொறுமையா இருங்க .சிக்கிரம் உங்ககளுக்கு குழந்தை செல்வம் கிட்டும் .அப்புறம் ரொம்ப ஹேப்பி ஆயிடுவிங்க பாருங்க.

மேலும் சில பதிவுகள்