***முதல் அனுபவத்தை பகிர்ந்துக்கலாம்***

அன்பிற்கினிய தோழிகளே,
நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒருவிதத்தில் "அறுசுவை" தளத்தை பார்வையிட்டு தோழிகளாக பழகிவருகிறோம். நாம் எப்படி அறுசுவையில் இணைந்தோம்?எப்படி இத்தளத்தை கண்டறிந்தோம்?இதில் நடந்த சுவாரசியங்கள் என்ன?இவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளலாம் வாங்க......

நான் ஒருமுறை சமையல் குறிப்பிற்காக இணையத்தில்(கூகுள்)தேடிக்கொண்டிருந்தேன்.அப்போது "அறுசுவை"ன்னு வந்தது.சரி சமையல் குறிப்புன்னு திறந்தேன்.....உள்ள வந்ததும்தான் தெரிந்தது இது சமையலறை மட்டுமல்ல வீட்டு உறவுகளும் உள்ளனன்னு....அதன் பிறகு உறுப்ப்பினரானேன்.எனக்கு தமிழில் எழுதத் தெரியவில்லை அப்போது தோழி ராதாஹரிதான் பழக்கிவிட்டாங்க(தளத்தை உபயோகிக்க),பின் நானும் இக்குடும்பத்தில் ஒன்றாகிவிட்டேன்.......:-))

nan consive agi . abortion agiduchu apa confuse a eruntha ..than inta web enku therium..

ennoda friend than enaku arusuvai pathi sonna. naanum udanae joint panniten. inga vantha piragu namma feelings a mathavanga kita share panrathala romba relax a iruku. innum tamil la type panna mudiyala. sekirama tamil a type panren.

hi booma enaku neenga sona advise nalla erunthu chu pa........ perukalam la poi parunga unga kita oru doubt ketu eruka

நானும் சமையல் குறிப்பிற்காக தேடும் போது தற்செயலாக அறுசுவை தளத்தை பார்க்க நேர்ந்தது .அப்புறம் உறுப்பினர் ஆனேன் .என்னுடன் முதன்முதலில் பேசிய தோழி நம்ம தனா தான் .தளத்தை உபயோகிக்க சொல்லி தந்ததும் தனா தான். .அப்புறம் எனக்கு தமிழ் சொல்லி தந்தது நம்ம வனி.( குட் தமிழ் வந்திருச்சே )
இல்லம் பற்றிய இழையை படித்து ரொம்பவே பிடிச்சி போனது.
உங்க எல்லார் கிட்டயும் பேச எனக்கு நிறைய தோழிகள் கிடைச்ச மாதிரி சந்தோசம்.

-

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

எப்பவும் போல் எந்த வேலையும் இல்லாமல் நெட்டில் உக்கார்ந்து கேம் விளையாடிகிட்டு இருந்தேன், ரொம்ப போர் அடிச்சது. அப்போ யதேச்சயாக இத்தளத்தை பார்வையிட நேர்ந்தது. முதலில் வெறும் பார்வையாளராகவே இத்தளத்தில் சில மாதங்கள் இருந்தேன். பின்னர் தான் உறுப்பினரானேன்.

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

beauty tips tedumpothu "ARUSUVAI" KANNIL PATTATHU.

என்னுடைய ப்ரண்ட் முன்னாடி நம்ம அறுசுவைய பார்த்துட்டு இருந்தாங்க அவங்க இப்போ வெளிநாடு போய்ட்டாங்க இப்ப பார்க்கறாங்கலான்னு தெரியல நிச்சயம் பார்ப்பாங்கன்னு நினைக்கிறேன் அவங்க சொல்லி தான் நான் இங்க வந்தேன், நிறைய பயனடைந்துள்ளேன். நிறைய ப்ரண்ட்ஸ், புது புது குறிப்புகள், மனதுக்கு ஒரு புத்துணர்ச்சி, தைரியம் தன்னம்பிக்கை இப்படி சொல்லிட்டே போகலாம் தோழிகளின் பங்களிப்பை பார்த்தால் ப்ரமிப்பா இருக்கும்.

நா ஒரு வருஷமா இந்த தளத்த பார்வையிடறேன்.
ஆனா உறுப்பினராகணும்னா தமிழ பிழையில்லாம எழுதனும்னு நினைச்சேன்.
இந்த தளத்தில முதன்முதலா என்னோட கருத்த பதிவு செய்தப்ப ரொம்ப பெருமையா இருந்தது.

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்".
இறைவனை வணங்குவோர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பார்கள். இறைவனை வணங்காதவர்கள் பிறவியாகிய பெரிய கடலை நீந்திக் கடக்க மாட்டார்கள். திருவள்ளுவர்.

அருட்செல்விசிவ

மேலும் சில பதிவுகள்