காப்பர் -T(மெரினா காயில் )

ஹாய் தோழிகளே ,எப்படி இருக்கிங்க?என் தோழிக்கு உடல் ரீதியான ஒரு பிரச்சனையை சந்திது வருகிறாள்.அவளுக்கு 2 பெண்குழந்தைகள்.2 வது பெண்குழந்தை பிறந்த 6 மாதத்தில் அவள் மீண்டும் கர்பமாவதை தவிர்க்க காப்பர்-T ( மெரினா காயில் ) மாதிரி போட்டு கொண்டாள்.இந்த மே யோடு நான்கரை ஆண்டுகள் ஆகிவிட்டது.ஆனால் இது ஹார்மோன் சம்பந்தபட்டதால் கடந்த 4 ஆண்டுகளாக அவளுக்கு மாதவிலக்கு வரவே இல்லையாம்.ஆனால் இதை மாட்டி கொண்டால் மாதவிலக்கு வராது என்றுடாக்டர் சொன்னாராம்.இவளும் ஆரம்பத்தில் சரி என்று இருந்திருக்கிறாள்.இப்போ அவளுக்கு மாதவிலக்கு வருவதில்லை.வயிறு பெருசாயிட்டே போகுது.இப்பவெ பாக்க 6 மாத கர்ப்பிணி பெண் மாதிரி இருக்கிறாள்.என் அம்மாவிடம் அவள்பிரச்சனை கொண்டு சொல்லி ஆலோசனை கேட்டேன்.அம்மா சொன்னாங்க,4வருடமா பீரியட்ஸ் வராமால் இருப்பது ரொம்ப தப்பு.முதலில் அதை ரிமூவ் பன்ன சொல்லு.பிரீயட்ஸ் வந்தால் வயிறு ஆட்டமேட்டிக்கா வத்திவிடும் என்று சொன்னாங்க.அதை அவளிடம் சொன்ன அவள் சொல்கிறாள்வயிறு பெருசானது பெருசானது தானேஎப்படி கம்மியாகும்னு சொல்லி,கடவுள் தான் என்னை காப்பாத்தனும்முன்னு அழுகிறாள்.எனக்கு அவளை பாத்தா பாவமாக இருக்குங்க.அதான் உங்களிடம் ஓடி வந்தேன்.உதவுங்க தோழிகளே.காப்பர் -T(மெரினா காயில் )ஐ போட்டால் வயிறு பெருசாகுமாங்க?ரிமுவ் பன்னினால் பிரியட்ஸ் வந்துடும்.ஆனா வயிரு கம்மியாகுமா?இல்லை ஏதாவது உடற்பயிச்சி செய்ய சொல்லனுமா?தயவு பன்னி என் தோழிக்கு உதவுங்க.please.

4 வருஷமாவா?அதுவும் டாக்டர் சொல்லியா..இது நான் இதுவரை கேள்விப்படாத ஒண்ணா இருக்குங்க.பீரிய்ட்ஸ் வந்தா தானே வயிற்றிலுள்ள அழுக்கு எல்லாம் நீங்கும் அப்போ கண்டிப்பா வயிறு சுருங்கும்..வயிறு மட்டுமில்லாம இடுப்பிலிருந்தே சுத்தி சுத்தி வேண்டாத சதை போடும்..கண்டிப்பா நல்ல டாக்டரை பார்த்து அதை நீக்கிட்டு உடம்பை சரி பண்ண சொல்லுங்க
யாராவது இது பற்றி தெரிஞ்சா சொல்லுங்க வருஷக்கணக்கா இப்படி நிறுத்தி வைப்பாங்களா..கண்டிப்பா அது உடம்புக்கு கேடு தான்

காப்பர் டீ போட்டா பீரியட் வராம இருக்காது, சரியா டேட்ல வந்து விடும், தாமதிக்காமல் ஒரு கயன்கோலொஜிஸ்ட் ஐ பார்க்க சொல்லுங்க.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

குழந்தை பிறந்து எத்தனை நாட்களுக்கு பிறகு காப்பர் T போடலாம்?

ஒரு மாதத்தில் போடலாம் என்று நினைக்கிறேன்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

காப்பர் t போட்டாலும் பீரயொட்ஸ் கண்டிப்பா கரெக்டா வந்திடும்பா. நல்ல டாக்டர் கிட்ட போய் first செக் பண்ண சொல்லுங்க.

ஜென்னிவினோ

Dare To Paly With Life

நீங்கள் சொல்வது Mirena தானே? இதனால் வரும் பின் விளைவுகள் ஓவ்வோருவருடைய உடலை பொருத்தது. இது ஹார்மோன் சம்மந்தமானது. இதனால் சிலருக்கு எடை கூடும், சிலருக்கு முடி உதிர்வு, சிலருக்கு ஒரு பின் விளைவுகளும் இல்லாமல் இருக்கிறார்கள்.

நீங்கள் கூறியிருப்பது போலவே நிறைய இருக்கிறது. அதில் பல ஆப்ஷன்களும் இருக்கும் அதில் ஒன்னு தான் பீரியட்ஸ் வரவே வாராத மாதிரியான ஒன்னு. சிலர் இதை நல்லது என்று முதலில் தேர்ந்தெடுத்துக் கொண்டு பின்பு கஷ்டப்படுகிறார்கள்.

வேண்டாம் என்று வேறு எத்தனையோ விதமான கருத்தடை சாதனங்கள் இருக்கு. நம் உடலுக்கு எது பொருந்துதோ அதை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இப்பொழுது உங்களுடைய தோழிக்கு தேவை நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள். தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வந்தால் கண்டிப்பாக உடை எடை, எங்கிருக்கும் ஊளை சதையையும் குறைக்கலாம்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

Tmt. Manoranjitham, ungal thozhiyai adhe doctor idam pogamal veru doctor idam poga sollungal. Thaamadhikka vendam. Oru maadhamo irandu maadhamo periods varaavittal prachanai illai. 4 years varamal irupadhu thavaru. Udanadiyaga doctor idam kaanbikka sollungal.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Thozhigale... Pinvilaivugal illaadha, 5 varudangaluku kuzhandhai pirappai thadukum nalla copper T brand therindhal sollungalen. Please... indha maadha mudivirkul mudindhal avasaramaga badhil thevai thozhigale... please... please... please... please...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

காப்பர் டி போட்டாலும் பீரியட்ஸ் கண்டிப்பா எப்பவும் போலவே சரியா வந்திடும். குழந்தை சிசேரியன் என்றால் நான்கு அல்லது ஆறு மாதங்களுக்கு பிறகு காப்பர் டி போட்டுக்கலாம். 5 வருடத்திருக்கு மேல் போட்டிருக்க கூடாது. சில பேருக்கு காப்பர் டி போட்ட பின் பீரியாட்சில் அதிகமா உதிரப்போக்கு இருந்தால் அதை உடனடியா ரிமூவ் பண்ணிட வேண்டும்.
அவங்களை விரைவ வேற நல்ல கைனகாலஜிஸ்ட் போய் பார்க்க சொல்லுங்க.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

தளிகா,நன்றி உங்கலுக்கு.நான் அவளை பார்க்கும் போது என்ன நல்ல வெயிட் போட்டுட்டா நீங்க சொன்ன மாதிரி வயிறு,இடுப்பு பகுதி தான் ரொம்ப பெருத்து இருக்குது.தினமும் 1 மணி நேரம் நடப்பாள்.சாப்பாடும் அளவு சாப்பாடு தான் பின் ஏன் வெயிட் இறங்கவே மாட்டேங்குதுன்னு யோசிச்சிருக்கா அப்புறந்தான் தோனிருக்கு நமக்கு 4 வருசமாக பிரியட்சே வரலைன்னு.ரெம்ப பயந்துட்டு தான் என்னை கூப்பிட்டு கேட்டா.எனக்கும் முதல்ல எதுவுமும் புரியலை.அம்மாவிடம் கேட்டு சொன்னேன்.அம்மாவும் ரிமூவ் பன்னதான் சொன்னாங்க.

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

மேலும் சில பதிவுகள்