தயிர் வெள்ளரி

தேதி: May 22, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

வெள்ளரிக்காய் - ஒன்று
பச்சைமிளகாய் - 1 (அ) 2
மாங்காய் இஞ்சி - ஒரு துண்டு
எலுமிச்சை சாறு - ஓரிரு துளிகள்
உப்பு
தயிர் - 2 தேக்கரண்டி


 

தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.
வெள்ளரியை மெல்லிய வட்டங்களாக சீவி வைக்கவும்.
அதில் உப்பு, எலுமிச்சை சாறு, துண்டுகளாக்கிய பச்சைமிளகாய், தோல் நீக்கி சீவிய இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.
அதில் புளிப்பில்லாத கட்டி தயிரை சேர்க்கவும். தயிரில் நீர் இருந்தால் நன்கு வடித்து விடவும்.
ப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் கூல் கூல் தயிர் வெள்ளரி ரெடி

வெள்ளரி கொஞ்சம் நீர் விடும். அந்த நீரை இறுத்து அதனுடன் மோர் கலந்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். வெயிலில் செல்லும் முன்னரும், சென்று விட்டு வந்த பிறகும் இந்த தயிர் வெள்ளரியை சாப்பிட உடல் நன்கு குளிர்ச்சியாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

புளிப்பும், காரமும் கலந்த கூல் குக்கும்பரா.... சூப்பரா இருக்குங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு தானே அந்த தட்டு அப்படியே எடுத்துக்கறேன் ரொம்ப வெயில் தாங்கல, ரொம்ப சிம்பிள் ஆனா ரொம்ப ரொம்ப கூலான குறிப்பு ப்ரியா.

எளிமையான சம்மர் ரெசிப்பி மாங்காய் இஞ்சி வாசனையோடு தயிர் வெள்ளரி சூப்பரா இருக்கு. வாழ்த்துக்கள்.

ப்ரியா,
அருமை.....இது போல் கேள்விப்பட்டதேயில்லை.வெள்ளரிக்காய் அப்படியே உப்பு-மிளகு தூள் தூவி தான் சாப்பிட்டு இருக்கேன்.ரொம்ப நல்லா செய்துருக்கீங்கவிரைவில் செய்து பார்த்துட்டு சொல்றேன்.வாழ்த்துக்கள் ப்ரியா.

பிரியா,

இது போலே காரட் கொண்டு செய்வதுண்டு,,
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ப்ரியா இந்த கொளுத்துற வெயிலுக்கு ஏத்த நல்ல கூல் குறிப்பு. வாழ்த்துக்கள். நான் ட்ரை பண்ணி பார்க்கிறேன்பா.

அடடா!!!சூப்பர் குறிப்பு.

ஹெல்தியான குறிப்பு.. இப்போவே செய்து விடுகிறேன்..

"எல்லாம் நன்மைக்கே"

அன்பு பிரியா,

தயிர்ல வெள்ளரி போட்டு, ரய்தாவாகத்தான் செய்திருக்கேன். அடுத்த முறை இப்படி சாலட் ஆக செய்து பார்க்கிறேன்.

ரொம்ப நல்லா இருக்கு.

பாராட்டுக்கள் பிரியா

அன்புடன்

சீதாலஷ்மி

சிம்பிள் & சூப்பர்! நல்லதொரு சம்மர் ஸ்பெஷல் சாலட் ஆ சாப்பிடலாம் போல!. நல்லாருக்கு ப்ரியா! வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ