கொத்தவரங்காய் பொரியல்

தேதி: May 23, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (7 votes)

 

கொத்தவரை - கால் கிலோ
வெங்காயம் - பாதி
தக்காளி - பாதி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு
எண்ணெய், கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க


 

கொத்தவரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பாதி வதங்கியதும் காய், தக்காளி சேர்த்து பிரட்டவும். இதை மூடி போட்டு சிறிது வேக விடவும்.
காய் பாதி வெந்ததும் தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டி, நீர் விட்டு மூடி மீண்டும் நன்றாக வேக விடவும்.
காய் வெந்ததும் திறந்து வைத்து பிரட்டி எடுக்கவும். சுவையான சுலபமான கொத்தவரங்காய் / சீனி அவரக்காய் பொரியல் தயார். விரும்பினால் கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து எடுக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அன்பு வனிதா,

சுலபமாகக் கிடைக்கக் கூடிய காயில் சிம்பிளான பொரியல். வெங்காயம், தக்காளி சேர்த்திருப்பது நல்லா இருக்கு.

முதல் பதிவு போடணும்னு ஆசை, எப்பவாவதுதான் சான்ஸ் கிடைக்குது:) இன்னிக்கு நான்தான் ஃபர்ஸ்ட்.:):)

அன்புடன்

சீதாலஷ்மி

வனி

சூப்பர்.சுலபமான காய்.. சாம்பாருக்கு அருமையா இருக்கும்.
எப்பவும் போல கடைசி படம் அசத்தல்
வாழ்த்துக்கள் )

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

சீதாலஷ்மி... மிக்க நன்றி.பல நாள் முயற்சி இன்று வெற்றி பற்றதா??? ;) முதல்ல நீங்க பொட்டாச்சா. ஹிஹிஹீ. மிக்க நன்றி. இங்க இந்த காய் கிடைக்காது... நான் ஊரில் இருந்து கொண்டு வந்தேன்.

ரம்யா... ஆமாம் ரொம்ப சுலபம். பார்த்தேன் இந்த குறிப்பை காணோம், அதனால் அனுப்பினேன். :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நல்லா இருக்கு எனக்கு இது போல இசியா வேர சமையல் தரமுடியுமா

மிக்க நன்றி. என்ன சமையல் வேணும்னு சொல்லுங்க... அதில் ஈஸீயான குறிப்பு சொல்லுவோம் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எளிமையான,சுவையான குறிப்பு அக்கா....வாழ்த்துக்கள்!!!

அன்பு சகோதரி... உங்க பெயர் தெரியாததால் உங்க மெம்பர்ஷிப் பெயரை பயன்படுத்திருக்கேன். விரும்பினால் பெயர் சொல்லவும். மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

weight Loss ஆகும் படி ஆனால் இசியா தினமும் செய்ய சுலபமாக ஒரு Resiby please

என் கணவரின்பெயரை( விப்ஜி )மெம்பர்ஷிப்பாக வைத்து உள்ளேன்,என் பெயர் ஜெபி. உங்கள் குறிப்பு&தளிகா அக்காவின் குறிப்பை மிகவும் ரசித்து முயற்சி செய்வேன்.அறுசுவைப்பயணம் தொடர கனிவான வாழ்த்துக்கள்!!!

வனிதா,
இந்த பொரியல் என்னவருக்கு ரொம்ப பிடிக்கும். செய்து நாளாச்சு.கண்டிப்பா வாங்கி,செய்து கொடுக்கிறேன்.அழகான ப்ரசண்ட்டேஷன்.வாழ்த்துக்கள்.

அன்பு லலிதா... வெயிட் குறைக்க என்கிட்டயா??? ;) நான் என்ன பண்ண... தோழிகள் யாரும் தெரிஞ்சா கண்டிப்பா சொல்வாங்க. மன்னிச்சுடுங்கோ, எனக்கு அது போல பர்ட்டிகுலரா குறிப்புகள் தெரியாது.

அன்பு ஜெபி... மிக்க நன்றி. எல்லார் குறிப்பும் இனி ட்ரை பண்ணுங்கோ... ஒவ்வொருத்தர் ஒருவகை சமையலில் கெட்டிக்காறர்கள் இங்கே :)

அன்பு ஹர்ஷா... அப்படின்னா அங்கே இந்த காய் கிடைக்குதா??? பரவாயில்லையே... இங்கே கிடைக்காது, நான் ஊரில் இருந்து கொண்டு வந்தேன். அவசியம் செய்து பாருங்க. மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா