கார உணவு உண்ண மறுக்கும் 41/2 வயது குழந்தையை மாற்றுவது எப்படி?

என்னுடைய மகளுக்கு 41/2 வயதாகிறது. ஆனால் காரமான உணவு ( (சிறிதளவு காரம் கூட) எதையும் உண்ண மறுக்கிறாள். அவளை சற்று காரமான உணவு உண்ண வைக்க எப்படி பழக்குவது என்று ஏதேனும் யோசனை இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள்.

நன்றி.

- பிந்து வினோத்

பெரிசாக ஆக மெல்ல தானே பழகும் அதுவரை விட்டுடுங்க காரம் அவ்வளவு நல்லதில்லை..அதனால் சாப்பிட வைக்க தேவையுமில்லை.நாமளும் காரம் குறைத்து சமைப்பது தான் நல்ல வழி

உங்கள் பதிலுக்கு நன்றி தளிகா :) எனக்கும் புரிகிறது.. நானும் அவளை கட்டாயபடுத்துவது இல்லை... ஆனால் அவள் விரும்பி உண்பது தயிர், மோர், மற்றும் காரம் குறைந்த சாம்பார் தான். மற்றபடி எந்த உணவையும் அவளுக்காக தனியாக காரம் தெரியாமல் செய்து தந்து பழக்கம் ஆகிவிட்டது... ஆனால் அது சரியா என்று சந்தேகமாக இருக்கிறது... ரொம்ப செல்லம் கொடுத்து spoil செய்கிறேனோ என்று தோன்றுகிறது...

ரொம்ப காரம் வேண்டாம் சிறிது காரம் அதுவும் pepper சேர்த்த உணவு மட்டுமாவாது அவள் சாப்பிட தொடங்கினால் பரவாயில்லை என்று தோன்றுகிறது...

சரி பார்க்கலாம்... :)

- பிந்து

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

என்னுடைய புகுந்த வீட்டில் இப்படித்தான் காரம் பழகுவார்கள் குழந்தை சாப்பிட தொடங்கும் போதே .அதாவது ஏழு எட்டு மாதங்களில் முட்டை ஆம்லேட் செய்யும் போது இரண்டு மிளகு தட்டி போடுவார்கள் .பின் சிறிது சிறிதாக மிளகின் அளவை கூட்டுவார்கள் .பிள்ளை மூன்று வயதாகும் போதே மற்றவர்கள் சாப்பிடும் காரத்தை பழகி விடும் .மிளகு உடலிற்கு குளிர்ச்சியை தருவதுடன் நோயெதிர்ப்பு சக்தியையும் கூட்டும் .நீங்களும் இப்படி முயற்சி செய்து பாருங்கள் .

எல்லாப் புகழும் இறைவனுக்கே

Thanks Rathiya. Will surely try this...

Rgds,
Bindu

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ஹலோ தோலிகலே,

நான் மசாஜ் சென்டர் வைத்துல்லேண் உங்கள் உடம்பில் உள்ள அனைத்து விதமான பிரச்சனைகலுக்கும் உடலுக்கு ஏற்ரார் போல் உங்கள் வீட்டிலேயே வந்து மசாஜ் செய்யப்படும் கட்டனம் : 500தொடர்புக்கு :9843787941

ஹலோ தோலிகலே,

நான் மசாஜ் சென்டர் வைத்துல்லேண் உங்கள் உடம்பில் உள்ள அனைத்து விதமான பிரச்சனைகலுக்கும் உடலுக்கு ஏற்ரார் போல் உங்கள் வீட்டிலேயே வந்து மசாஜ் செய்யப்படும் கட்டனம் : 500தொடர்புக்கு :9843787941

Rathiya, நீங்கள் சொன்னதை போல் மிளகு பொடி கொண்டு முயற்சி செய்து பார்த்தேன்... முதலில் கொஞ்சம் அடம் பிடித்தாலும், இப்போது சாப்பிடுகிறாள்.

இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பழகி விடுவாள் என்று நம்புகிறேன்...

மிக்க நன்றி.

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

hello bivi,en paiyan kooda ippadithan irunthan,medhuvaga veliyil kooti chenru vedikai kamithu vaiyungal,mudhalil lite karathai vaiyungal,oru murai karamagavum,oru murai karamilamalum vaiyungal,adhiga karam vendam,matra pillaigaloda vilaiyadumbodhu naisaga vaiyungal,karam naakil padapada thanaga kuzhandhai sapiduval

நன்றி Poorni..
என் மகளுக்கு கொஞ்சம் காரமாக சாதம் கொடுத்தாலும், ஒரு பாட்டில் தண்ணீர் குடித்து முடிக்கும் வரை அடுத்த வாய் சாதம் வாங்க மாட்டாள். வெளியில் வேடிக்கை காட்டி, பிடித்த படங்கள் போட்டு கொடுத்து, விளையாட விட்டு, சாக்லேட் தருகிறேன் என்று லஞ்சம் கொடுத்து, இப்படி என்ன செய்தாலும் அதே தான்.

இப்போதெல்லாம் ஆம்லெட் செய்யும் போது அவளையும் கூட அருகில் உட்கார வைத்து எதை எதை எதற்காக சேர்க்கிறேன் என்று சொல்லி கொஞ்சம் மிளகையும் சேர்த்து கொடுக்க தொடங்கி இருக்கிறேன். முதலில் அடம் பிடித்தாலும், இதை சாப்பிட்டால் சளி பிடிக்காது எவ்வளவு வேண்டுமென்றாலும் ஐஸ் கிரீம் சாக்லேட் சாப்பிடலாம் என்றெல்லாம் சொல்லி இப்போது கொஞ்சம் பரவாயில்லை :)

ஒரு 6-7 வயதாகும் போது நார்மல் காரம் சாப்பிட தொடங்குவாள் என்று நம்புகிறேன்...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

kandipaga sapiduval kavaipadatheergal,schho pogum bodhu ellam sariyagi vidum,edhu sonalum sapidavilai enral adikamal mirati sapida vaiyungal,sapidum bodhu thaneer kodukatheergal,edhavathu vithyasamaga animals kadhaigalai sollunga,en paiyan schooluku pona piragu sariyagivittan ippothu karam sapidugiran,pakathu veetil pillaigal sapidum bodhu vidungal,adhai parthu thanum sapidanum thonum pilaigal thanaga mari viduvar

மேலும் சில பதிவுகள்