பாப்பா தோய் (Bhapa doi)

தேதி: May 31, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (6 votes)

 

கெட்டி தயிர் - ஒரு கப்
கண்டன்ஸ்டு மில்க் - ஒரு கப்
ஏலக்காய் தூள் - சிட்டிகை [விரும்பினால்]
நட்ஸ் - சிறிது


 

தயிரை துணியில் கட்டி 4 மணி நேரம் வரை விடவும்.
நீர் முழுவதும் வடிந்து இப்படி கெட்டியான தயிர் கிடைக்கும்.
கெட்டியான தயிர் ஒரு கப் என்றால் அதே அளவு கண்டன்ஸ்டு மில்க் சேர்க்கவும்.
இவற்றை நன்றாக கலந்து கொண்டு இதில் ஏலக்காய் தூள் சேர்க்க விரும்பினால் சேர்த்து கலந்து விடவும்.
இப்போது குக்கரில் வைக்க போகும் பாத்திரத்தில் ஊற்றி மேலே பொடியாக நறுக்கிய நட்ஸ் தூவி விடவும்.
இந்த பாத்திரத்தின் வாய் பகுதியை அலுமினியம் ஃபாயில் கொண்டு மூடி விடவும். இப்போது குக்கரில் நீர் விட்டு கீழே ஒரு ஓட்டை உள்ள தட்டை போட்டு அதன் மேலே இந்த தயிர் கலவை வைத்து மூடவும். விசில் வைக்க கூடாது.
நன்றாக ப்ரெஷர் வந்ததும் மிதமான தீயில் 30 நிமிடம் வரை வேக விட்டு எடுக்கவும். ரூம் டெம்பரேச்சருக்கு வந்ததும் ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ந்ததும் எடுக்கவும். சுவையான பாப்பா தோய் தயார்.

இது ஒரு பெங்காலி உணவு (Steamed yogurt என்று பொருள்). தயிர் கெட்டியாக இருப்பது அவசியம். இதை குக்கரில் வைப்பதற்கு பதிலாக அவனிலும் செய்யலாம், ஸ்டீமரிலும் வேக வைக்கலாம். தயிருடன் கண்டன்ஸ்டு மில்க் மற்றும் பால் (அளவு: 1:1:1) சேர்த்தும் செய்யலாம். வேக வைக்கும் முன் நட்ஸ் சேர்க்காமல் கேக் போல தலை கீழாக எடுத்து விட்டு மேலே நட்ஸ் தூவியும் பரிமாறலாம். குங்குமப்பூ வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். குக்கரில் உள்ள நீர் தயிர் கலவை உள்ள பாத்திரத்தில் படாமல் இருப்பது அவசியம். இதை பார்க்க சீஸ் கேக் போல் இருக்கும். சுவை அருமையாக இருக்கும். சர்க்கரை தேவை இல்லை.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாவ் வனி அசத்தலான மற்றும் சுலபமான குறிப்பு. எனக்கு கன்டன்ஸ்டு மில்கில் செய்யும் எல்லா இனிப்பு வகைகளும் ரொம்ப புடிக்கும். இந்த வாரமே செய்து அசத்தி விடுகிறேன். வாழ்த்துக்கள் அருமையான குறிப்பிற்கு!!!

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

அன்பு வனிதா,

சூப்பரான, சுவையான, செய்வதற்கு சுலபமான, குறிப்பு.

படங்கள் அழகோ அழகு1

பாராட்டுக்கள் வனிதா

அன்புடன்

சீதாலஷ்மி

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

அன்பு ஷீபா... மிக்க நன்றி. அவசியம் செய்து பாருங்க... நல்ல க்ரீமி யம்மி டெஸர்ட் இது. நிச்சயம் பிடிக்கும். :)

அன்பு சீதாலஷ்மி... மிக்க நன்றி. அவசியம் நீங்க செய்து பார்த்து சொல்லி ஆகனும்... சுத்த சைவம் தானே :) அதனால். சரியா? செய்துட்டு எப்படி இருந்துதுன்னு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி,

பாப்பா தோய் - ரொம்ப சிம்பிளான, சூப்பர் டேஸ்டியான குறிப்பா தெரியுது! படங்கள் எல்லாமும் எப்போதும்போல அழகா, தெளிவா இருக்கு! கூடிய சீக்கிரமே செய்து சுவைத்திட்டு வந்து சொல்றேன்! ;) வாழ்த்துக்கள் வனி!

அன்புடன்
சுஸ்ரீ

வனி வாழ்த்துக்கள்.

அறுசுவையில் உங்க பாப்பா தோய் பார்க்கும்போதெல்லாம் செய்ய தோன்றும். விருப்பபடியலில் சேர்த்திட்டேன். ஆனால் ஒரு சில சந்தேகங்கள்.
1 . இதில் இனிப்பு சேர்க்க தேவை இல்லையா?
2. இங்கு கண்டன்ச்டு மில்க் ல இனிப்பு சேர்த்து தான் இருக்கு
3. கண்டன்ச்டு மில்க் சேர்த்து தான் பண்ண முடியுமா ஏன் பால் பவுடரில் செய்ய முடியாதா?
உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

நன்றி.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

கண்டன்ஸ்டு மில்க் என்றால் என்ன?

GOD IS LOVE

பாப்பா தோய் புதிய குறிப்புகளில் பார்த்தேன். இப்படி படத்துடன் செய்து காட்டியதும் ஸ்வீட்ட எடுத்து டேஸ்ட் பண்ணனும் போல இருக்கு. நிச்சயம் செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள். கண்டெஸ்டு மில்குக்கு பதிலா ஒரு கப் சர்க்கரை சேர்த்தும் செய்யலாமா. டேஸ்ட் மாறுமா வனி.

சூப்பர் குறிப்பு! அலுமினிய ஃபாயில் என்றால் என்ன? அதற்கு பதில் வேறு ஏதேனும் மூட பயன்படுத்தலாமா? கன்டன்ஸ்டுMilk பதில் பால் சேர்த்தால் சுவை மாறுபடுமா

வனி
பேரைப் பார்த்ததுமே உங்க குறிப்புனு தெரிஞ்சிகிட்டேன்.
ரொம்ப ஈசியான குறிப்பு.சமையல் குறிப்புன்னாலே அது செய்முறை சுலபமா இருக்கனும்.
கட்டாயம் செய்து பார்ப்பேன் வனி.அதுக்கு முன்னாலே நீங்க எல்லோருடைய டவுட்டும் க்ளியர் பண்ணுங்க வனி.

சுஸ்ரீ... மிக்க நன்றி. அவசியம் செய்து பாருங்க. வெய்யிலுக்கு ஜில் ஜில்ன்னு நல்லா இருக்கும் :)

பிரேமா... மிக்க நன்றி. 1. கண்டன்ஸ்டு மில்க் சரி அளவு சேர்த்தால் இனிப்பு தனியாக சேர்க்க தேவை இல்லை. 2. இனிப்பு சேர்த்தது தான் இதற்கு தேவை. அதையே சேருங்க. 3. பால் பவுடரில் நான் இதுவரை முயற்சி செய்ததில்லை. பாலில் செய்யலாம். ஆனால் 1/4 ஆக காய்ச்ச வேண்டும். ஓக்கேவா??? அவசியம் செய்து பாருங்க :) தாமதமான பதிலுக்கு மன்னியுங்கள்.

சுதா... கண்டன்ஸ்டு மில்க் என்பது பாலை ரொம்ப திக்கான பதத்தில் மாற்றி இருப்பது தான். ரெடிமேடாக கடைகளில் கிடைக்கும். நம்ம ஊரில் மில்க்மெய்டு என்றால் கிடைக்கும். :) மிக்க நன்றி.

வினோ... கண்டன்ஸ்டு மில்குக்கு பதிலாக பாலை திக்காக 1/4 ஆக காய்ச்சி பயன்படுத்தலாம். காய்ச்சும்போது சர்க்கரை சேர்த்து காய்ச்சலாம். ஆனால் நிச்சயம் இதை சேர்க்கும் போது கிடைக்கும் டெக்‌ஷர் கிடைக்காது. கொஞ்சம் நீர் விட வாய்ப்பிருக்கு. சுவை ரொம்ப மாறுபடாது. தாராளமா செய்யலாம். :) செய்து பாருங்க. மிக்க நன்றி.

சுபா... மிக்க நன்றி. அலுமினியம் ஃபாயில் என்பது கடைகளில் ரோலாக கிடைக்கும். பேக்கிங் போன்றவைகளுக்கு பயன்படுத்துவாங்க. சைனீஸ் ரெஸ்டாரண்ட்டில் சிக்கன் லாலிபாப் சாப்பிட்டு இருக்கீங்களா??? அதனை கையில் பிடிக்கும் பகுதியில் ஒரு வெள்ளி நிற பேப்பர் கொண்டு சுற்றி இருப்பாங்க... அது தான். :) நீங்க மூடி போட்ட டிஃபன் பாக்ஸ் கூட பயன்டுத்தலாம். நீர் பட கூடாது அவ்வளவே. பால் மேல சொன்ன மாதிரி திக்காக 1/4 ஆக சர்க்கரை சேர்த்து காய்ச்சி பயன்படுத்தலாம்

நிகிலா... மிக்க நன்றி. ரொம்ப சாரி எல்லா கேள்விக்கும் பதில் சொல்ல லேட் ஆயிட்டுது. வர முடியல இந்த பக்கம் :( அவசியம் செய்துட்டு சொல்லுங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி

பார்க்கவே வெட்டி சாப்பிட தோன்றுது.
எளிமையான பொருட்களை வைத்து அலாதியான இனிப்பு செய்திட்டிங்க
வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சாப்பிடுங்க சாப்பிடுங்க... ஒன்னு நீங்க செய்து சாப்பிடுங்க, இல்லன்னா மாலே வாங்க, நான் செய்து தரேன் :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

romba esiya supera seithu irukeengaidha pol innum isiya irukiratha sollungspa pls

வனி அக்கா பாப்பா தோய் சூப்பர்.சீஸ் கேக் மாதிரியே இருந்துச்சு..இனிப்பு மட்டும் கம்மியா இருக்கணும்னு condensed milk கொஞ்சம் குறைத்து சேர்த்தேன்,.சுவை சூப்பர் .குறிப்புக்கு நன்றி.

Kalai

பூரணி... மிக்க நன்றி :) எனக்கென்னவோ நான் செய்வதெல்லாமே ஈசியானதான் தான் தெரியும். அறுசுவையில் நிறைய சுலபமான குறிப்புகள் இருக்கு... செய்து பாருங்க.

கலா... மிக்க நன்றி. ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு உங்க பதிவுகள் பார்த்து. நலமா? உங்களுக்கு பிடிச்சதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி கலா. உடனடியாக செய்து பார்த்து பின்னூட்டம் அளித்தமைக்கு மீண்டும் நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர் டேஸ்ட்!! விரும்பி சாப்பிட்டோம்! செய்யவும் ஈசியாக இருந்தது! டிபன்பாக்ஸ் வைத்துதான் செய்தேன்! உங்களுக்கு நன்றி

செய்துட்டீங்களா??? அப்பாடி... நல்லா வந்ததா பதமா? ரொம்ப சந்தோஷங்க. செய்து பார்த்து மறக்காம பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்புள்ள வனிதா உங்க ஸ்வீட் செய்தேன்.செய்த அன்று சாப்பிட்டதை விட மறு நாள் வைத்து சாப்பிடும் போது கூடுதல் சுவையுடன் இருந்தது.எளிமையானா,ரிச்சானா குறிப்பு.சுவையும் அலாதி.உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.

மிக்க நன்றி. தயிர் என்பதால் அதிக நேரம் ஃப்ரிட்ஜில் இருந்தால் நல்ல சுவை தரும். செய்து பார்த்து மறக்காம பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி பர்வீன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அவனில் preheat & எவ்வளவு நேரம் வைக்க வேண்டும்.

அவனை 180 C’ல முற்சூடு செய்யுங்க. 10 - 15 நிமிடம் வரை எடுக்கும் (பாத்திரம், அளவை சார்ந்தது). உள்ளே ஒரு கத்தியை விட்டுப்பாருங்க. வெந்திருக்கான்னு தெரியவரும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா