காப்ஸ்யூல் பூக்கள்

தேதி: June 2, 2012

4
Average: 3.9 (13 votes)

 

காலாவதியான காப்ஸ்யூல்கள்
சிறிய மெல்லிய கத்தரிக்கோல்
சாதாரண கத்தரிக்கோல்
பச்சை நிற ஸ்ப்ரே கான் மூடி (ப்ளாஸ்டிக்)
குரடு
சிறிய மண்தொட்டி
தெர்மாக்கோல்
காய்ந்த பாசி

 

காப்ஸ்யூல் பூக்கள் செய்வதற்கு தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
காப்ஸ்யூல்களைத் திறந்து உள்ளே உள்ள மருந்தினை கொட்டி கவனமாக அப்புறப்படுத்தவும்.
சிறிய கத்தரிக்கோல் கொண்டு மிக மெல்லிதாக மூன்றில் இரண்டு பாகம் வரை நேர் கோடுகள் வெட்டி வைக்கவும்.
விரலை உள்ளே வைத்து மெதுவே அழுத்தி விரித்து இதழ்களைச் சரி செய்து விடவும்.
பச்சை ப்ளாஸ்டிக் மூடியிலிருந்து காம்புகளுக்கென நீளமான மெல்லிய துண்டுகளும், இலைகளுக்கு சிறிய அகலமான துண்டுகளும் வெட்டி எடுக்கவும். மூடியின் போக்கிலேயே வெட்டினால் அழகாக வளைந்த காம்புகளும், இலைகளும் கிடைக்கும்.
நீளத்துண்டுகளின் மெலிந்த பகுதியில் குரட்டினால் சற்று அழுத்தி திருகி விடவும்.
பூக்களின் நடுவில் சிறிய கத்தரிக்கோலால் சின்னதாக துவாரம் செய்துகொண்டு, காம்புகளை அடிப்புறமிருந்து உள்ளே சொருகவும். திருகி உள்ள பகுதி பூவின் துவாரத்தை அடைந்ததும் கைகளில் உணரக் கூடியதாக இருக்கும், அப்போது நிறுத்திவிடலாம்.
தெர்மாக்கோலை வட்டமாக வெட்டி தொட்டியில் இறுக்கிவிட்டு பூக்களையும், இலைகளையும் அழகாகச் சொருகி விடவும். விரும்பினால் இறுதியாக தெர்மாக்கோல் தெரியாதபடி பாசியை வைத்து மூடிவிடவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

மாத்திரையில் ஒரு கலைநயமா? நம்பவே முடியல.அருமையிலும் அருமை. எப்படிங்க இப்படி யோசிக்கறீங்க..உண்மையாவே பொறாமையா இருக்கு. கலை சேவை தொடர வாழ்த்துக்கள்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

கேப்ஸ்யூல்ல அழகான பூ...நல்ல ஐடியா இமா.தப்பா எடுக்காதீங்க... இதில் சின்னதா ஒரு மாறுதல் பண்ணலாம்..சொல்லட்டுமா..கேப்ஸ்யூல் (பூ) மையத்தில் பட்ஸ் வைத்து மஞ்சள்,கருப்பு கலர் கொடுத்தால் மகரந்தம் மாதிரி தெரியும்..கேப்ஸ்யூல்ல பார்த்து சட்னு யாருக்கும் இந்த ஐடியா வராது.இது இமாவிற்கே வரும் கலை..:)

radharani

காப்ஸ்யூல் பூக்கள் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. ஐடியா சூப்பர். வாழ்த்துக்கள். சின்ன பொருட்கள கூட வீணாகாம எவ்வளவு அழகாக செய்திருக்கீங்க. நானும் இதுப்போல் ஒன்னு செய்து வைக்கபோறேன். எப்படி தோணுச்சு இந்த ஐடியா.

melum melum ungal kalai payanam valara valthukkal pa

lifela onnum illai 8344525601

வீட்டில் ஒன்னையும் விட்டு வைக்கிறதில்லையாமே... செபா ஆண்ட்டி கம்ப்ளைண்ட் பண்ணாங்க... எல்லாத்தையும் எடுத்து பூ செய்துடுறீங்கன்னு ;) ஹிஹிஹீ. ரொம்ப அழகான வேல்லைப்பாடு இமா. வித்தியாசமான சிந்தனை. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இமா, எப்படி இப்படியெல்லாம்???? சூப்பர் போங்கள். உங்க வீட்டுக்கு வந்தா கவனமா எல்லாத்தையும் உள்ளே வைச்சிருக்கோணும் போல இருக்கே.

இமா
நல்ல கலைநயம் மிக்க படைப்பு.அழகாக இருக்கிறது இமா.

வாழ்த்துக்கள் இமா.. ரொம்ப நல்லா இருக்கு..

அன்புடன்,
zaina.

ஹாய் ராதா...
தப்பாக எடுக்கவில்லை. :-) ஆமாம், நடுவில் ஏதாவது வைத்திருக்கலாம். யோசனை நன்றாக இருக்கிறது. கைவினையில் ஈடுபாடு இருக்கிற ஒருவருக்கு, ஒன்றைப் பார்த்தால் கூடுதலாக இன்னொரு யோசனை வருவது இயல்புதான்.

//பட்ஸ்// !! காட்டன் பட்!! ம்... காப்ஸ்யூலுக்கு காட்டன் பட் & அதன் தண்டு மொத்தமாக இருக்கும். வளைவுகள் இல்லாமல் நேராக, மொத்தமான காம்பு கிடைக்கும். பூக்கள் கீழே இறங்காமல் இருக்கவும் தண்டை மறைக்கவும் பச்சை கம்டேப் சுற்ற வேண்டும். முயற்சி செய்து பாருங்கள். அதைவிட, கொத்தாக இருக்கும் readymade stamens காப்ஸ்யூல் அளவுக்குப் பொருத்தமாகச் சின்னதாக வாங்கலாம்; கச்சிதமாக இருக்கும், அழகாகவும் இருக்கும். கம்பி, கம்டேப் கொண்டு தண்டை அமைக்கலாம்.

காப்ஸ்யூல்கள் கரையக் கூடிய ஜெலடின் அல்லது ஸ்டார்ச் பொருட்களால் செய்யப்படுபவை. கையில் பிடித்து வைத்து வேலை செய்ய இயலாத அவற்றின் அளவையும், சட்டென்று கிழிந்து / உடைந்து போகும் அவற்றின் தன்மையும் மனதில் கொண்டுதான் இத்தோடு நிறுத்திவிட்டேன்.

உங்கள் முறையில் செய்து அறுசுவைக்குக் குறிப்பை அனுப்புங்கள். பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

அன்புடன்

‍- இமா க்றிஸ்

பாராட்டுக்கு நன்றி சுகி & வினோஜா. //எப்படி தோணுச்சு இந்த ஐடியா.// படிப்பு முடிந்ததும் சில மாதங்கள் ஊரிலிருந்த ஒரு மருத்துவ நிலையத்தில் வேலை பார்த்தேன். காலை நேரம் நோயாளர் வருகை குறைவாக இருக்கும். தேவையான 'காட்டன் பட்ஸ்', குறிப்பிட்ட சிலவகைக் களிம்புகள் எல்லாம் நாங்களே தயாரித்து வைப்போம். மேலதிகமாக நேரம் கிடைத்தால் தூக்கிப் போடும் சேலைன் பாட்டில்கள், பாட்டில் தூக்கி, காப்ஸ்யூல் கேஸ் என்று கிடைக்கும் எல்லாவற்றிலும் ஏதாவது செய்து பார்ப்போம். ;)

நன்றி வேல். கீழே... வலது பக்கம், 'எழுத்துதவி' இருக்கிறது. போய்ப் பாருங்கள், இலகுவாகத் தமிழில் தட்டச்சு செய்யலாம்.

தாங்ஸ் வனி ;))) நன்றி நிகிலா & Zaina.

வாணி... எங்கும் ஆளைக் காணோம் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். தாங்ஸ். ;) இதற்குப் பயந்து வராமல் இருக்க வேண்டாம். வாங்க. ;)

‍- இமா க்றிஸ்

அன்பு இமா,

எத்தனை அழகு! அத்தனையும் உங்கள் பொறுமையில் விளைந்த பெருமை!

இன்னிக்குக் காலையில் மாத்திரை சாப்பிடறதுக்கு காப்ஸ்யூலை கையில் எடுத்துகிட்டு, இந்தப் பூக்களையும் உங்கள் பொறுமையையும் நினைத்துக் கொண்டே, கொஞ்ச நேரம் மாத்திரையைக் கையில் வைத்துக் கொண்டு யோசிச்சிட்டே இருந்தேன், எப்படித்தான் இவ்வளவு நுணுக்கமாக செய்தாங்களோன்னு!

அதுதான் இமா என்று பதிலும் மனசுக்குள் இருந்தே கிடைச்சுது:)

மனம் நிறைந்த பாராட்டுக்கள் இமா!

அன்புடன்

சீதாலஷ்மி

;)) போட வேண்டாம் என்று இடைநடுவே டாக்டர் சொன்னதால் மீந்து போன மாத்திரைகளில்தான் நான் செய்திருக்கிறேன். நீங்க ஒழுங்காக மாத்திரையைச் சாப்பிடணும். எதையும் மீதம் வைக்கப்படாது சீதாலஷ்மி. ;)
கருத்துக்கு நன்றி.

‍- இமா க்றிஸ்

ஆஹா... அருமை இமா!

இப்படி கொஞ்சமும் நினைக்காத பொருட்களில், மிகப் புதுமையான‌ ஐய்ட்டங்கள் செய்து காட்டுவதில் உங்களுக்கு நிகர் நீங்களேதான்! :)
வெரி நைஸ்! வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

very super nice congrats.....

கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட சுஸ்ரீ & ஹர்ஷிகாவிற்கு எனது நன்றி.

‍- இமா க்றிஸ்

wow superb.Room pottu yosipingalo.Very nice. innum idhu madhiri niraiya engalukku solli kudunga.

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

அபார க்ரியேடிவிட்டி கூடவே பொறுமை எல்லாம் சேர்ந்தால் அழகு..இமான்னா சும்மாவா.அதுசரி எப்படி இமா இவ்ளோ பெரிய காப்சியூலை முழுங்குறது

Wow! Art out of waste!

நன்றி ரேவ்ஸ் & விஷ்ணுபிரியா.
//எப்படி இமா இவ்ளோ பெரிய காப்சியூலை முழுங்குறது// ;)) அண்ணாந்து, வாயை பெருசா திறந்து, உள்ள 'டொம்' என்று போட்டு, ஒரு டம்ளர் தண்ணியை கடகட என்று முழுங்கினா போய்ரும். ;D அது படத்துலதான் பெருசா தெரியுது தளி. ;D

‍- இமா க்றிஸ்