மன உளைச்சலாக உள்ளது தோழிகளே

நான் உங்கள் அறுசுவை தோழி மாலதி ,எனக்கு கொஞ்சம் மனம் உளைச்சலாக உள்ளது ,எனக்கு தக்க பதில் கூறுங்கள் தோழிகளே .என்னுடையது காதல் திருமணம் ,பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்தவள் நான் ,நல்ல கணவர்.நாங்கள் கல்லூரியில் ஒன்றாக படித்தோம் .என் கணவருக்கு இரண்டு அக்காக்கள் ,ஒரு அண்ணன் ,எல்லோருக்கும் திருமணம் ஆகி விட்டது ,எல்லோருக்கும் குழந்தையும் இருக்கிறது ,எனக்கு திருமணமாகி இரண்டரை வருடம் ஆகி விட்டது ,இன்னும் மழலை செல்வம் வாய்க்கவில்லை ,பார்க்காத மருத்துவம் இல்லை ,எல்லாம் நன்றாக உள்ளது ,என் பிரச்சனை என்னவென்றால் ,நான் இப்பொழுது வரையிலும் கூட்டு குடும்பத்தில் இருக்கிறேன் ,என் கணவரின் அண்ணன் அண்ணி தனி குடும்பமாக உள்ளார்கள் ,என் கணவரின் அண்ணி கொஞ்சம் செல்வாக்கானவர் ,அவர் அரசு நர்ஸ் ஆக பணி புரிகிறார் ,அவர் எப்போது வந்தாலும் ஒரு வேலை கூட தொட மாட்டார் ,எங்கள் வீட்டிற்கு எப்போது உறவினர் வந்தாலும் ,மொத்தமாக அதாவது நாத்தனார்கள் ,அவர்கள் பிள்ளைகள் ,அவர்களின் கணவர் என்று ஒரு கூட்டமாக தான் வருவார்கள் ,நாத்தனார்களும் எனக்கு எந்த வேலையிலும் எந்த ஒரு உதவியும் செய்ய மாட்டார்கள் ,விடுமுறைக்கு எல்லாரும் இங்கேயே வந்து தங்கி விட்டு போனார்கள் ,கடந்த ஒரு மாதமாக என்னால் இரவில் தூங்க கூட முடியாது ,எல்லா வேலையும் முடித்து தூங்க இரவு 11 மணி ஆகிவிடும் ,உடல் அசதியாகி விடும் .நான் மிகவும் டென்ஷன் ஆகி விடுகிறேன் ,ஆனால் அவர்கள் முன்னர் நான் அதை காமித்து கொள்ள மாட்டேன் ,அனைத்து வார இறுதிகளில் இதே கதை தான் நடக்கும் , ,என் கணவரும் என் மேல் அன்பு கொண்டிருந்தாலும் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று அவர்களை கேட்கவும் மாட்டார் ,எனக்கு மாமியார் இல்லை ,மாமனார் ,என் வீட்டுக்காரரின் தாத்தா ,பாட்டி இப்பொழுது இருக்கிறோம் ,மேலும் எனக்கு குழந்தை இல்லை என எப்போதும் நச்சரித்துக் கொண்டே இருப்பார்கள் ,,எனக்கு ஒரு குழந்தை வந்து விட்டால் எல்லாம் சரி ஆகி விடும் என்று நம்புகிறேன் ,எனக்கு மன உளைச்சளினால் தான் குழந்தை இல்லாமல் இருக்கிறதா? ,நான் என்ன செய்வது எப்படி விடுபடுவது மன உளைச்சளிலிருந்து ,உதவுங்கள் தோழிகளே ,செல்வாக்குக்கு முக்கியத்துவம் கொடுக்கும் குடும்பத்தில் இருக்கும் எனக்கு எப்பொழுது விடிவு என்று எனக்கே தெரியவில்லை ,எனது பெற்றோர் சப்போர்ட் கூட இல்லை ,செத்து விடலாம் போல இருக்கிறது .மிகுந்த உளைச்சலில் உள்ளேன் ,

kavalaipadatheergal,ungalin nilaiyai ungal kanavaridam meduvaga solli puriya vaiyungal,avvapodhu neengal ungal kanavarudan veliyur senru varungal,avargal veetirku varuvadarku mun neengal kilambi vidungal,avargal veetirku vandal ovvoruvaridam naisaga pesi oru velaiyai koduthu vidungal,adarkum mudiyavilaiya avargal vandal rendu velai seithu vittu adutha udambu mudiyavilai,mayakam,vayiru vali enru edanum solli paduthukollungaladarkaga neengal en mana ulaichalagereer,relaxaga irungal,appodhudhan santhosamana mana nilai irukkum,kuzhandaiyum nirkum,namma mudiyadadu onrum illai,thunindhu nillungal,idhellam ungaluku isiyaga theriyum

ஹாய் மாலதிபாஸ்கர்
உங்கள் பிரச்சனைக்கு தீர்வு இருக்கிறது.கவலையை விடுங்கள் ஏன் எல்ல பிரச்சனைக்கும் தீர்வு உண்டு என்ன கொஞ்சம் நேரம் தன் மாறுபடும் . உங்கள் கவலை நன்றாக புரிகிறது. என்னுடைய அக்காவுக்கும் உங்களை போல கஷ்டம் இருந்தது. பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துள்ளீர்கள் அவர்களிடம் சேர முயற்சி செய்யுங்கள். என இருந்தலு அம்மா அப்பா போல வராது.
ஏன் அக்கா வுக்கும் குழந்தை பிறக்க லேட் ஆனது. அவன்க மாமியார் வீட்டில் வேலையை எப்ப பரு இழுத்து போட்டு செய்து கொண்டிருப்பர் . அவங்க கணவர் தம்பி திருமணம் ஆனது அவங்கல்கு குழந்தை பிறந்தது. என் அக்கா நமக்கு ஒரு நல்லது நடகளைஎன்னு கவலையை மனசில் போட்டு அடக்கி அடக்கி மாங்கு மங்கு என்று வேலைஆள் (அப்பது ட்சுனாமி வந்து வீடு வேலைஆள் um வரலை )போல வேலை பாத்து பாத்து மன வியாதியும் வந்துவிட்டது . பிறகு அதற்கென்று ட்ரீட்மென்ட் பாத்து சரியாக்கி பிரார்தனை செய்து செய்து ஏழு வட்ருடம் களைத்து இப்பொழுதுதான் ஒரு நல்ல குழந்தை பிறந்தது. Avanga அம்மா தன் அவங்களை பதுகிட்டது. மாமியார் வீடு திரும்பி கோட பார்களை இப்போ எல்லாம் நன்றாக ஆனவுடன் வந்து சேர்கிறார்கள் .

அதனால்
ரொம்ப கவலயை படாதீர்கள் . கவல நாம் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் அது நம்மலை கண்டுகாம போய்டும். உங்களுக்கு குழந்தை சீக்கிரம் கண்டிப்பாக பிறக்கும் நம்பிக்கையி மனதில் விதையுங்கள் சரியா? பூரணி சொன்ன மாதிரி சில Tricks um Folloe பண்ணுங்க . முதலில நம்ம நலம்தான் நமக்கு முக்கியம் . தனக்கு மிஞ்சிதான் தானம்மும் தர்மம்மும். நல்ல பிரார்த்தனை செய்யுங்கள் நல்லதே நடக்கும் நடதே தீரும் . மனச லேசா வச்சிருங்க . Gud luck .

அன்பு மாலதி ,
ஒன்னும் கவலைப்பட வேண்டாம்,நீங்கள் முதலில் உங்கள் கணவருக்கு உங்கள் நிலைமையை மெதுவாக புரியவையுங்கள் .உங்கள் நாத்தனார்களுக்கு எப்படி தாய்வீட்டு ஓய்வு தேவையோ அதுபோல் உங்களுக்கும் மனமும்,உடலும் ஓய்வை வேண்டும் என எடுத்து சொல்லுங்கள் ,எனக்கே நீங்கள் இரவு தூங்க முடியாமல் வேலை செய்வதாக சொல்வதைகேட்டால் கஷ்டமாக இருக்கும்போது உங்கள் கணவருக்கும் இரககம் வரும்.சில காதல் திருமணங்களில் இப்படிதான்,ஒரு ஆள் கிடைத்துவிட்டது என்றால் (கேட்க ஆள் இல்லை என்று )படுத்தி எடுத்து விடுவார்கள்.நிலைமை கொஞ்சம் இறங்கிவிட்டால் நிழலும் கூட மிதிக்கும் என்ற கண்ணதாசன் வரிதான் நினைவுக்கு வருகிறது,எனவே உங்கள் பிறந்த வீட்டினரோடு தொடர்பு ஏற்படுத்திகொள்ளுங்கள். உங்களுக்கென நேரம் ஒதுக்கி சில தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்.இதெல்லாம் சரியாக வரவில்லையெனில்,அவர்கள் வரும்போது உடம்பு சரியில்லை என்று படுத்து கொள்ளுங்கள்,தானாக உங்கள் அருமை புரியும்.
கவலை தீர பிரார்தனை செய்யுங்கள் ,இதெல்லாம் விரைவில் மாறி நல்ல குழந்தை கிடைக்க வாழ்த்துகிறேன்.

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

அன்பு மாலதி,

உங்கள் நிலைமையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது தோழியே,

முதலாவதாக : உங்களுக்கு வேலைக்குப் போக முடியுமா என்று சிந்தியுங்கள்,உங்கள் கணவரிடம் அனுமதி கேளுங்கள்,

அப்படியே வீட்டில் உங்களுக்கும்,மற்ற பெரியவர்களுக்கும் உதவியாக இருக்கும் படி வேலைக்கு யாரையாவது அமர்த்துங்கள்.

வேலைக்கு செல்வதினால் உங்கள் மன உளைச்சல் குறைவது மட்டுமின்றி உங்களுக்கு குடும்பத்தில் ஒரு மரியாதையும் கிடைக்கும்.

அம்மா குடும்பதினரிடம் மன்னிப்பு கேட்டு அவர்களிடம் சேர்ந்து கொண்டால் நீங்களும் கணவரை அழைத்துக் கொண்டு மாதம் இருமுறை வார இறுதியில் உங்கள் பெற்றோர் வீட்டிற்கு சென்று விடுங்கள்.

உங்களுக்கும் ஓய்வும்,மகிழ்ச்சியும் முக்கியம் என்பதை உங்கள் கணவருக்கு மிகவும் அன்பாக எடுத்து கூறுங்கள்.

எல்லாவற்றிற்க்கும் மேலாக தோழியே, உங்களுக்கென்று ஒரு குழந்தை வந்ததும் நேரம் பார்த்து தனி குடித்தனம் சென்று விடுங்கள்.

எக்காரணத்தைக் கொண்டும் பிற்காலத்தில் வீட்டில் உள்ள முதியோர்களை கவனிக்கும் பொறுப்பை உங்கள் ஒருவரின் தலையில் மட்டும் ஏற்று கொள்ளாதீர்கள் அவர்கள் வயிற்றில் பிறந்த எல்லோருடைய கடமை அது.

மேலும் உங்கள் கஷ்டங்களை மனதில் போட்டு அழுத்தாமல் கணவரிடம் கொட்டி தீருங்கள், அதே சமயம் அவர் மனம் நோவாமல் பார்த்துக் கொள்ளுங்கள்(அவர் குடும்பத்தினரைப் பற்றி சொல்லும் போது)

முடிந்தால் கணவரோடு ஒரு வார இறுதியில் ஏதாவது ஒரு சுற்றுலா சென்று வாருங்கள்,இல்லையெனில் முடிந்தால் இருவரும் உங்கள் தோழிகள் யார் வீட்டிற்காவது சென்று இரண்டு நாட்கள் இருந்து விட்டு வரவும்.

கணவரோடு தனியாக இருக்கும் அந்த நாட்களில் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடியுமோ அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கப் பாருங்கள்.

பின்னர் அவருக்கு நீங்கள் உங்கள் நிலைமையை எடுத்து கூறலாம்.அவரும் எளிதாக புரிந்து கொள்வார்.

எப்பொழுதும் மனதை இலகுவாக வைத்திருங்கள்.

உலகத்தில் எல்லோருக்கும் பிரச்சனைகள் உள்ளது தோழியே,மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள்,

எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு ஒரு குழந்தை அருள வேண்டுகிறேன்

பதிலளித்த தோழிகள் அனைவருக்கும் நன்றி .நீங்கள் சொன்ன அனைத்தையும் நான் செயல் படுத்த தொடங்கி விட்டேன் .நானும் எனது கணவரும் அடுத்த மாதம் தனி குடித்தனம் செல்ல முடிவு செய்து உள்ளோம் ,மாற்றத்திற்கு காரணம் என் மாமனாரிடம் கொஞ்சம் மனம் விட்டு பேசினேன் ,நான் வேலைக்கு செல்ல வேண்டும் ,பின்னர் குழந்தை பிறக்கும் வரை தனியே இருந்து பின்னர் வந்து இங்கேயே நிரந்தரமாக தங்கி விடுகிறேன் என்று ,அவரும் ஒத்துக் கொண்டார் ,இவ்வளவு நாள் எனக்கு வாய்ப்பு இருந்தும் எனது பெற்றோர் சப்போர்ட் இல்லாததால் எதுவும் செய்ய முடியவில்லை ,ஆனால் இப்போது என் கழ்டம் உணர்ந்து என் அம்மாவும் அண்ணனும் என்னிடம் பேசுகிறார்கள் ,தனியே போகும் போது சாமான்கள் எல்லாம் என் அம்மா வீட்டில் வாங்கி தருகிறார்கள்.ஆனால் என்னை வீட்டில் சேர்க்க வில்லை . இருந்தாலும் பரவாயில்லை ,கிடைத்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி கொள்ள போகிறேன் ,தோழிகள் தந்த தைரியத்தால் தான் என்னாலே என் மாமனாரிடம் பேச முடிந்தது ,என் நாத்தனார்கள் தான் மிக மிக என்னை கரித்து கொட்டி கொண்டு இருக்கிறார்கள் ,ஆனால் நான் இப்போதைக்கு எதையும் காதில் வாங்குவதாக இல்லை ,இனி கடவுள் விட்ட வழி .எனக்கு தைரியம் தந்த தோழியர்க்கு மிக்க நன்றி

don't worry be happy enjoy ur life with ur hubby. try to be happy for each and every day. u try to go outing daily or 2 days once......be happy enjoy ur life...

by,
AnuGopi,
Be happy and Make others happy........

மேலும் சில பதிவுகள்