11/2 வயது குழந்தைக்கு காய்ச்சல் அவசரம்

வணக்கம் தோழிகளே , என் குழந்தைக்கு 11/2 வயது ஆகிறது. 2 வாரமாக காய்ச்சல் அடிக்கிரது. டாக்டரிடம் காண்பித்தோம் ப்ளாட் , சிறுநிர் டெஸ்ட் செய்து பார்த்து விட்டு எல்லாம் நொர்மல் பிரச்சினை இல்லை என்று கூறினார்கள். சாதரண வைரஸ் காய்ச்சல் என்று கூறி காய்ச்சல் மருந்து கொடுத்தார்கள். ஆனால் இன்னும் காய்ச்சல் விட வில்லை. சாப்பிட மாடேன் என்கிறாள் . என் குழந்தைக்கு காய்ச்சல் சரியாக ஏதாவது வீட்டு வைத்தியம் கூறவும். என் குழந்தை படும் கஷ்டத்தை பார்க்க மிகவும் கஷ்டமாக இருக்கிரது. அழுது கொண்டே இருக்கிறாள். ப்ளீஸ் உதவி செய்யுங்கள்.

வைரல் ஃபீவருக்கு இப்படி தான் சிலருக்கு ரொம்ப நாள் இருந்துவிட்டு போகும்..கவலை படாதீங்க சரியாகிடும்..காய்ச்சல் வந்து வந்து தான் நோய் எதிர்ப்பு சக்தியும் வரும்..ஆனால் குழந்தை பாவம் படா பாடு படும்..நல்ல நீராகாரமா கொடுத்து நல்ல தூங்க வைப்பதை தவிற வேற வழியில்ல..ரெண்டு வாரம்னு சொல்றீங்க இப்போ கண்டிப்பா மாறும் நேரமாச்சு மாறிடும்.கவலை படாதீங்க காய்ச்சல் விட்டதும் குழந்தை முன்பை விட பசியோடும் சுறுசுறுப்போடும் விளையாட தொடங்கிடும்.காய்ச்சல் வந்தால் போர்வையால் மூடாதீங்கபருத்தி ட்ரெஸ் போட்டு விடுங்க..ரொம்ப காய்ச்சல் கூடினால் வெதுவெதுப்பான தண்ணியில் துணி நனைச்சு ஒத்தடம் கொடுங்க..உடம்பில் லேசா மசாஜ் பண்ணி விட்டு ரிலாக்ஸா தூங்க விடுங்க..இரவில் காய்ச்சல் இருந்தா சப்போசிட்டரி வைய்யுங்க ரொம்ப நேரத்துக்கு தொஅந்தரவில்லாம தூங்கும்..உடம்பை பாத்துகுங்க
நாக்கு கசக்கும் அதனால் சாப்பிடாது..நமக்கே அப்படி தான்.அரிசி கஞ்சி வச்சு கொடுங்க சத்தானது லேசா தேங்காய்ப் பாலெடுத்து சேர்த்தால் தெம்பும் கூட..உப்பு மட்டும் சேத்து கொடுங்க.

மிகவும் நன்றி தாளிகா அக்கா. நானும் அரிசி கஞ்சி கொடுத்தேன் ஆனால் சாப்பிட மறுக்கிறாள். என் மடியிலேயே தூங்க வேண்டும் என்கிறாள். இரவு முழுதும் தண்ணீர் குடிக்கிறாள். காய்ச்சல் வந்ததிலிருந்து சாப்பிட வில்லை. நிற்க கூட தெம்பு இல்லை. அதை பார்க்கும்பொது கவலையாக உள்ளது

கவலை படாதீங்க உங்க கஷ்டம் புரியுது..டோன்ட் வரி..காய்ச்சல் விட்டதும் சரியாகிடும்..சாப்பிடாமலும் இருக்காங்க உடம்பு சரியில்ல அதான் தெம்பில்ல.சரியானதும் ரெண்டே நாளில் பழைய படி ஆரம்பிச்சுடுவாங்க.பாதி தூக்கத்துல இருக்கும்போது அல்லது தூங்கி அரை தூக்கத்தில் எழும்போது மடியில வச்சுட்டே கைய்யில் தலையை உயர்த்தி வச்சுட்டு ஸ்பூனால் கொஞ்சமாக கொடுத்து பாருங்க பசிக்கு சாப்பிடலாம்..சில சமயம் பசிக்கும் ஆனால் கசப்பதால் சாப்பிடாமல் கூட இருக்கும்

மேலும் சில பதிவுகள்