தேதி: June 9, 2012
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
சிக்கன்
வெங்காயம்
தக்காளி
எண்ணெய், உப்பு
அரைக்க:
இஞ்சி - சிறுத் துண்டு
பூண்டு - 5
பட்டை - சிறுத் துண்டு
மல்லி - 2 மேசைக்கரண்டி
சீரகம் - 2 மேசைக்கரண்டி
வரமிளகாய் - 6
கிராம்பு - 4
மிளகு - ஒரு மேசைக்கரண்டி
சிக்கன் மற்றும் அரைக்க தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும்

சிக்கனுடன் உப்பு, மஞ்சள் தூள், சிறிது மிளகாய் தூள் கலந்து சிறிது நேரம் வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும்

பச்சை வாசனை போனதும், தக்காளி போட்டு வதக்கவும்

அதன் பின், அரைத்து வைத்து இருக்கும் கலவையை இதனுள் ஊற்றி கலந்து விடவும். தேவைக்கேற்ப தண்ணீர் விட்டு கலக்கவும்.

கொதி வந்த பின்பு, சிக்கன் துண்டு, உப்பு போட்டு கலக்கி மூடி வைக்கவும்.

5 - 10 நிமிடம் ரெண்டு விசில் விட்டு இறக்கி, பரிமாறலாம். சப்பாத்தி மற்றும் எல்லா வகையான சாதத்துக்கும் ஏற்ற சைடு டிஷ். மிகவும் காரசாரமான குழம்பு.

Comments
சுகந்தி...
சுகந்தி... குழம்பு சூப்பர் சிம்பிளான செய்முறை.... வாழ்த்துக்க்ள்....
பிரசண்டேஷன் நல்லா இருக்கு
பிரசண்டேஷன் நல்லா இருக்கு சுகந்தி சூப்பர்
சுகி
சுகி
இன்னொரு கலக்கலான சிக்கனா சூப்பர்.
கறிவேப்பிலை அழகு செர்த்திடுச்சு..
வாழ்த்துக்கள் :)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
சுகி,
சுகி,
எளிமையான சிக்கன் ரெசிபி..
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
சுகி !!!
நம்ப முடியலயே... உங்க குறிப்புன்னு நிச்சயமா நினைக்கல... வழக்கமான உங்க குறிப்புகளில் இருந்து படமெல்லாம் ரொம்ப வித்தியாசமா... ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு. உங்க பங்களிப்பு மீண்டும் அறுசுவையில் இடம்பெருவது எல்லை இல்லா மகிழ்ச்சி எனக்கு :) தொடர்ந்து கலக்குங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஹாய் சுகந்தி!
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்ய கூடிய சுலபமான குறிப்பு! வாழ்த்துக்கள்!
சுகி
ஹாய் சுகி மீண்டும் மீண்டும் சிக்கன் குறிப்பா செஞ்சிடுவோம் :)) சூப்பரான குறிப்பு வாழ்த்துக்கள்..
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
சுகி
சுகி,
நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்க குறிப்புகளை பார்ப்பதில் சந்தோஷம். விரைவில் செய்துவிடக்கூடிய சுலபமான குறிப்பு. வாழ்த்துக்கள்!
அன்புடன்
சுஸ்ரீ
நன்றி தோழிஸ்...
குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு நன்றி...நன்றி
பிரியா - ரொம்ப சுலபமாக செய்ய கூடிய டிஷ்..கண்டிப்பா பண்ணி பாருங்க
நிகிலா - அழகான பேருங்க, வாழ்த்துக்கு நன்றி..
ரம்யா - ஏதோ சிம்பிள் லா தான் பண்ண முடியுது,,, வாழ்த்துக்கு நன்றி
கவிதா - வாழ்த்துக்கு நன்றி...
வனி - இதை அனுப்பவே ரொம்ப யோசுச்சு இருக்கேன்.... உங்களுக்கு தெரியாததா...மீண்டும் பழைய மாதிரி வர ஆசை தான், பாப்போம் :-)
சுபா - ரொம்ப எளிமையா பண்ண கூடிய குறிப்பு, பண்ணி பாருங்க...
ஸ்வர்ணா - இதை கண்டிப்பா பண்ணி பாத்து கருத்து சொல்லணும், மறந்துடாதீங்க...
சுஸ்ரீ - ரொம்ப நீண்ட இடைவெளி தான்..வாழ்த்துக்கு மிக்க நன்றி
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
சுகி
இங்க நாங்க அதிகமா சிக்கன் தான் செய்வோம், அடுத்த முறை உங்க குறிப்பு படி செய்திடுவோம்.
வாழ்த்துக்கள்.
பிரேமா ஹரிபாஸ்கர்
என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்