கரேலா கறி

தேதி: June 13, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (4 votes)

 

பாகற்காய் - கால் கிலோ
பச்சை மிளகாய் - 3
வெங்காயம் - 2
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 5 பல்
தக்காளி - 2
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
கடுகு, பெருங்காய தூள், காய்ந்த மிளகாய், கலோஞ்சி , கறிவேப்பிலை - தாளிக்க
எண்ணெய் - சிறிதளவு
வறுத்து பொடிக்க :
சோம்பு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கலோஞ்சி - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
கடுகு - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
தனியா விதை - ஒரு தேக்கரண்டி
கசூரி மேத்தி - ஒரு தேக்கரண்டி


 

எண்ணெயில்லாமல் வறுத்து பொடிக்க கொடுத்துள்ளதை (கசூரி மேத்தியை தவிர்த்து) வறுத்து எடுக்கவும். ஆரிய பின் கசூரி மேத்தி சேர்த்து பொடித்து வைக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு எல்லாத்தையும் ஒன்றாக போட்டு விழுதாக அரைத்து வைக்கவும்.
எண்ணெய் சூடானதும் அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரையில் மிதமான தீயில் வைத்து வதக்கவும். சிவக்க வேண்டும் என்றில்லை.
பச்சை வாசம் அடங்கியதும் வில்லையாக நறுக்கி வைத்துள்ள பாகற்காயை சேர்த்து கிளறவும்.
இரண்டு நிமிடம் கழித்து தக்காளி விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, புளிகரைசல் சேர்க்கவும். தேவையெனில் சிறிதளவு தண்ணீர் தெளித்து கிளறவும். இப்பொழுது மூடி வைத்து வேக விடவும்.
ஓரளவுக்கு வெந்ததும் பொடித்து வைத்துள்ள பொடியை தூவி கிளறவும். திரும்பவும் தண்ணீர் தெளித்து மேலும் வேக விடவும்.
வேறு ஒரு பாத்திரத்தில் தாளிக்க கொடுத்துள்ளதை கொட்டி தாளிக்கவும்.
பாகற்காய் நன்கு வெந்ததும் தாளித்து வைத்துள்ளதை கொட்டி ஒரு கிளறி கிளறி பரிமாறவும். சுவையான அதிகம் கசப்பில்லாத கரேலா கறி ரெடி. இது எல்லா சாத வகைகளுக்கும் நல்ல காம்பினேஷன். பாகற்காய் பிடித்தால் சப்பாத்தியுடன் கூட வைத்து சாப்பிடலாம். இப்படி செய்தால் பாகற்காய் பிடிக்காதவர்கள் கூட சாப்பிடுவார்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அம்மாஆஆஆஆஆஆ

தேவையான பொருட்களே இவளோ இருக்கு :-)
நான் பேரை பாத்து சிக்கன்னு வந்தேன், கொஞ்சம் ஏமாற்றம் தான். வேற காய் வெச்சு பண்ணி பாக்கலாமா? பாகற்காய் க்கும் எனக்கும் முன்ஜென்ம பகை :-(

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அன்பு லாவண்யா,

நான் கூட, ஏதோ நான் வெஜ் ஐட்டம்னு யோசிச்சுட்டே பார்த்தேன்.

எப்பவும் போல, நிறைய பொருட்கள் சேர்த்து செய்திருக்கீங்க. நல்லா இருக்கு செய்முறை.

சுகி சொல்றது கூட நல்ல ஐடியாதான் போல, இதே முறையில் மற்ற காய்களும் செய்து பார்க்கலாமா?

அன்புடன்

சீதாலஷ்மி

பார்க்க சூப்பர் இருக்கு ஆனா ஒரு டவுட் இந்த கலோஞ்சி நா என்ன? நான் இது வரைக்கும் கேட்டது இல்ல

லாவி
என்னுடை பேவரிட் பாவற்காய்ல குறிப்பா..
ரொம்ப வித்தியாசமா நல்லா செய்து இருக்கிங்க.
பார்ட்டிக்கு செய்துடலாம்.வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஆஹா... லாவி, கொஞ்சநாள் தூங்கிய நம்ம டெலிபதியை தட்டி எழுப்பியது யாரு, யாரு?! :)

கரேலா கறி, சூப்பர்! படங்களும் நல்லா வந்திருக்கு! நிறைய பொருட்கள் சேர்த்து செய்திருக்கிங்க... நல்லா இருக்கு! வாழ்த்துக்கள்!

கரேலா கறி, மிர்ச் மசாலா, தஹி பிண்டி ஒரே நார்த் இன்டியன் ஸ்டைல்ல, படு ரைமிங்கான குறிப்புகளா வருது! :) தொடர்ந்து கலக்குங்க!

அன்புடன்
சுஸ்ரீ

கரேலா கரி நல்ல இருக்கு... மத்த அயிட்டம்ஸ் எல்லாம் சரி தான் ஆனா இந்த கலோஞ்சி மற்றும் கசூரி மேத்தினால் என்னது? அது அவசியம் போடா வேண்டுமா?

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் அறுசுவை குழுவினருக்கு மிக்க நன்றி.

சுகி இந்த குசும்புக்கு குறைவே இல்லை ;) அது "காய் (கறி)" அந்த "கறி".....சரியா? வேற காய் எதற்கு இதையே சிக்கனிலும் செய்து பார்க்கலாமே. இப்போ சந்தோஷமா? பாகற்காய் என்றால் எங்கள் வீட்டில் அமோக வரவேற்ப்பு. நீங்க வீட்டுக்கு வாங்க சமாதனம் பேசிடுவோம் ;)

சீதாலக்ஷ்மி இதெல்லாம் ஓவர்.....அதான் கூடவே அந்த காயும் சேர்த்து தானே பரெசன்ட் பண்ணியிருக்கேன். .....அப்புறம் அழுதுருவேன். புளி தாங்கும் வேறு எந்த காய்கறியிலும் செய்து பார்க்கலாம். வெண்டையில் ட்ரை பண்ணி பாருங்க அமோகமா இருக்கும்.

நன்றி அகிலா. கலோஞ்சி என்றால் ஆனியன் சீட்ஸ் , ப்ளாக் சீட்ஸ், நைஜெல்லா , கருஞ்சீரகம் என்றும் சொல்லுவார்கள்.

நன்றி ரம்மி. பார்ட்டிக்கு என்றால் ரொம்பவே யோசிக்க வேண்டிய விஷயம். எத்தனை பேருக்கு பாகற்காய் பிடிக்கும் என்று தெரியாது. செய்துட்டு சொல்லுங்க.

நன்றி பிரேமா. கலோஞ்சி ஏற்க்கனவே சொல்லியிருக்கேன். கசூரி மேத்தி என்றால் உலர்ந்த வெந்தய கீரை. பொதுவாகவே நார்த் இந்தியன் ஐட்டம் எல்லாமே கடைசியில் இந்த கசூரி மேத்தி சேர்ப்பார்கள். அது தான் அந்த வித்தியாசமான சுவை மற்றும் மனதை கொடுக்கும். இதை சேர்க்காமலும் செய்யலாம். சுவையும் மனமும் கண்டிப்பாக மாறுபடும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா,
இப்போ இங்கே பாகற்காய் கிடைக்குது..அவசியம் செய்து பார்த்துவிட்டு சொல்றேன்..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஆஹா பாக்குரப்பவே சாப்டனும் போல இருக்கு உங்க கரேலா கறி. இந்த வீக் என்ட் செய்து பாத்துட்டு சொல்றேன்...

Hard Work Never Fails..

லாவண்யா, இன்னிக்கு லன்சுக்கு பிஸிபேளா பாத், உங்க கரேலா கறி செய்தேன். சூப்பரா இருந்தது காம்பினேஷன். கரேலா கறி சுவை சூப்பர்! கசப்பே தெரியவில்லை. என்னிடம் கலோஞ்சி இல்லை. அதை தவிர மற்ற அனைத்தும் போட்டு செய்தேன். சுவையான குறிப்பு பகிர்ந்தமைக்கு நன்றி! விருப்ப பட்டியலிலும் சேர்த்துவிட்டென்!