பாகற்காய் குழம்பு

தேதி: June 15, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (8 votes)

 

பாகற்காய் - 4
சிகப்பு வெங்காயம் – ஒன்று (பெரியது)
பூண்டு - 5/6 பற்கள்
தக்காளி - ஒன்று
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
புளி – சிறிய எலுமிச்சை அளவு
வெல்லம் – சிறிய துண்டு
உப்பு - சுவைக்கேற்ப
வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் – 3 (அல்லது) காரத்திற்கேற்ப
தனியா – 2 மேசைக்கரண்டி
மிளகு – அரை தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் – ஒரு மேசைக்கரண்டி
பயத்தம்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
தாளிக்க:
கடுகு - அரை தேக்கரண்டி
வெந்தயம் – அரை தேக்கரண்டி
எண்ணெய் – 4 தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு இணுக்கு


 

முதலில் பாகற்காயை கழுவி சுத்தம் செய்து, வட்டவடிவ வில்லைகளாக நறுக்கி விதைகளை நீக்கி வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். பூண்டை தோலுரித்து, பெரிய பல்லாக இருந்தால் நீளவாக்கில் இரண்டாக நறுக்கி வைக்கவும். புளியை சிறிது நேரம் தண்ணீரில் போட்டு வைக்கவும்.
பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் சில நொடிகள், சற்று வாசனை வர வறுத்து தண்ணீரில் போட்டு வைக்கவும்.
பிறகு கால் தேக்கரண்டி எண்ணெய் விட்டு, அதில், ‘வறுத்து அரைக்க’ லிஸ்ட்டில் உள்ளவற்றில் மிளகாய், மிளகு, தனியா, சீரகம் ஒவ்வொன்றாக போட்டு வறுக்கவும்.
சேர்ந்து லேசாக வறுப்பட்டதும், கடைசியில் கால் பாகம் நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து ஒரு வதக்கு வதக்கி தனியே எடுத்து ஆற வைக்கவும். கூடவே சில கறிவேப்பிலை இலைகளையும் சேர்த்துக் கொள்ளலாம், நல்ல வாசனையாக இருக்கும்.
அடுத்து, ஊற வைத்த பயத்தம் பருப்புடன், ஆற வைத்த மசாலா பொருட்களையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு மசாலாவாக அரைத்து வைக்கவும். ஊற வைத்த புளியை பிசைந்துவிட்டு புளித்தண்ணீர் எடுத்து வைக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில், 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும், பாகற்காயை போட்டு சில நிமிடங்கள் வதக்கவும். காய் வதங்கியதும் அதை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
அதே பாத்திரத்தில், மேலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும், கடுகு, வெந்தயம் தாளித்து, கூடவே வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் சிறிது நிறம் மாறி வதங்கியதும், பூண்டு, கறிவேப்பிலை, தக்காளி ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து சிறிது மஞ்சள் பொடியும் போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் தக்காளி சேர்ந்து நன்றாக குழைந்து வந்ததும், முன்பே வதக்கி வைத்த பாகற்காய் துண்டுகளை போட்டு, கூடவே அரைத்து வைத்த மசாலாவையும் சேர்க்கவும்.
அதில் ஒரு கப் தண்ணீரையும் சேர்த்து, குழம்புக்கு தேவையான உப்பை போட்டு கலந்துவிட்டு, ஒரு மூடியிட்டு நன்றாக கொதிக்க விடவும்.
சுமார் 5 - 8 நிமிடங்களில் காய் ஓரளவு வெந்ததும், கரைத்து வைத்த புளித்தண்ணீர், வெல்லம் சேர்த்து மேலும் கொஞ்ச நேரம் நன்றாக கொதிக்கவிட்டு இறக்கவும்.
சுவையான பாகற்காய் குழம்பு தயார்! சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் இந்த பாகற்காய் குழம்பு.

காயின் உள்ளே இருக்கும் விதைகளை நீக்குவது அவரவர் விருப்பத்தை பொறுத்தது. காய் கொஞ்சம் முற்றலாக இருக்கும்போது இப்படி விதைகளை நீக்கி சமைப்பது கண்டிப்பாக கசப்பை குறைக்க உதவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

படங்கள் சூப்பர்... குறிப்பு அதன் பின் தான் கண்ணில் படுது ;) அந்த அளவு படங்களின் கலர் இழுக்குது. சூபரா இருக்குங்க... இங்க சுலபமா கிடைப்பது தான் பாகற்காய். அவசியம் செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

recipe nala iruku pakum pothye sapadum pola iruku akka

"AANAI PIRANTHAL ARUMAI
PENNAI PIRANTHAL PERUMAI"

வாவ் இந்த பாகற்காய் குழம்பு புது விதமா இருக்கு, சுவையும் நல்ல இருக்கும்னு நினைக்கிறேன். வனி சொன்னது போல் இங்கும் பாவைக்காய் சுலபமாக கிடைக்கும் காய். சோ கண்டிப்பா செய்து பார்த்திடலாம்.

வாழ்த்துக்கள்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

குழம்பு நல்லா இருக்குங்க சுஸ்ரீ. பயத்தம்பருப்பு அரைச்சு புளிகுழம்பு, எனக்கு ரொம்ப புதிய செய்முறை!

முதல் படத்தில காய் நறுக்கி வைச்சிருக்கீங்களே, எவர்சில்வர் முறம், சூப்பரா இருக்கு! :) ஊரில் எங்க சமையல் அறையில் இந்த முறம் (எவர்சில்வர், அலுமினியம் ரெண்டுமே) கண்டிப்பா இருக்கும். கடந்த முறை ஊருக்குப் போனப்ப இதே போல ப்ளாஸ்டிக் முறங்கள் கூட பார்த்தேன். வாங்கிட்டு வரலாம்னு ரொம்ப டெம்ப்டிங்கா இருந்தது. கிளம்பும் அவசரத்தில் மறந்துபோய் வந்துட்டேன். (சரி, கொழம்ப விட்டுட்டு எதுக்கு இவ்ளோ கதைன்னு படிக்கிறவங்க டென்ஷன் ஆகிருவாங்க, நிறுத்திக்கறேன்! ;) )

அன்புடன்,
மகி

சுஜா

பாவக்காய் என்னோட ஃபெவரிட் ..
அதுவும் நீங்க சமைத்ததை சொல்லவா வேணும்.. படங்கள் பளிச்.
செய்து பார்த்துட்டு சொல்றேன்.
கடைசி படத்தில் இருப்பது சுடு சாதத்திற்கு அருமையா இருக்கும்.வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அதே அதே......எனக்கும் அந்த முறம் பார்த்து ரொம்பவே ஆசையா இருக்கு......அதிலும் அந்த பாகற்காயை நறுக்கி வைத்திருக்கீங்க பாருங்க....அழகோ அழகு.....பாகற்காய் ரிங்க்ஸ் போல இருக்கு. பருப்பு சேர்த்து குழம்பு கலக்கலா இருக்கு. அவசியம் செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.

//ஆமா டெலிபதி தான்......//

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

பாகற்காய் குழம்பு சூப்பர். இப்பதான் சாப்பிட்டோம். குறிப்புக்கு நன்றி!!!

அன்பு சுஸ்ரீ,

பாகற்காய் செய்ய, ரொம்பத் தயங்குவேன். எனக்கு டேஸ்ட் ஆக செய்ய வராது. இப்ப உங்க குறிப்பு பாத்ததும் செய்யணும்னு தைரியம் வருது.

பாசிப்பருப்பு ஊற வச்சு அரைச்சு சேர்த்திருப்பதால், கசப்பு தெரியாதுன்னு நினைக்கிறேன்.

இந்த முறையில் செய்து பார்க்கிறேன். விருப்பப் பட்டியலிலும் சேர்த்து விட்டேன்.

பாராட்டுக்கள், சுஸ்ரீ.

அன்புடன்

சீதாலஷ்மி

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

வனி,
முதலாவதா வந்து தந்த பாராட்டுகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் ரொம்ப நன்றி! குறிப்புக்கும்மேலே ப‌ட‌ங்க‌ள் ரொம்ப அட்ராக்டிவா ந‌ல்லா வந்திருக்கா?! நீங்க சொன்னா சரிதான். ரொம்ப சந்தோஷமா இருக்கு வனி! :)
பாகற்காய் ஈசியா கிடைக்குமா?! நல்லதா போச்சு, முடியும்போது செய்துபார்த்து சொல்லுங்க வனி. தேங்க்ஸ் அகைன்!
--

சங்கரி,
வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி!
--

ப்ரேமா,
பாராட்டிற்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!

--
மகிஅருண்,
பாராட்டிற்கு மிக்க நன்றி!

முறம் பற்றி குறிப்பிட்டு பாராட்டியமைக்கு மிக்க நன்றி! இது எங்கம்மா ஸ்பெஷல்! :) எப்பவும் இப்படி ஒரு முறம் வைச்சி, காய்கறி அதிலதான் நறுக்கி வைத்து சமைப்பாங்க, எனக்கும் இது ரொம்ப இஷ்டம்! இந்த முறம், நான் கல்யாணம் முடிந்து முதல்முறை இங்கே வந்தப்பவே என்னோட வந்தது! :) ப்ளாஸ்டிக்கிலும் போனமுறை போனபோது ஒன்னு கொண்டு வந்திருக்கேன்!

--
ரம்ஸ்,
பாகற்காய் உங்க ஃபேவரட்டா?! பாகற்காய்க்கு இங்கயும் ஒரு ஃபேன் இருக்கார்! :)
பாராட்டுகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி! கண்டிப்பா முடியும்போது செய்துபார்த்து சொல்லுங்க ரம்ஸ். நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

லாவி,
உங்களுக்கும் முறம் பிடிச்சுதா?! ;) பாகற்காயையும் கவனித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி! முடியும்போது செய்துபார்த்து சொல்லுங்க லாவி. வாழ்த்துக்களுக்கும் நன்றி!

--
சுபா தியாகு,
அதற்குள்ள செய்தே பார்த்தாச்சா?! :) ரொம்ப சந்தோஷம்!
உடனடியா செய்து பார்த்ததோட இல்லாம மறக்காம வந்து சொன்னதற்கும் சேர்த்து மிக்க நன்றி!

--

சீதாலஷ்மிமா,

பாராட்டுகளுக்கு மிக்க நன்றி! விருப்பப்பட்டியலில் சேர்த்ததற்கும் நன்றி! :)

என்னவருக்கு பாகற்காய் என்றால் ரொம்ப இஷ்டம், ஆக நான் எதாவது ஒரு ஸ்டைலில் அப்பப்ப பண்ணிடுவேன்.
நீங்க, நம்பி செய்து பாருங்க. பாசிப்பருப்பு+தேங்காய் அரைத்து சேர்ப்பதனால் கசப்பா இருக்காது. மீண்டும் நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ