எந்த airways சிறந்தது

தோழிகளுக்கு வணக்கம், நான் இன்னும் 2 மாதம் கழித்து இந்தியா போலாம் நு இருக்கேன், எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு pls பதில் போடுங்க...,
1. எந்த airways ல் ticket சீப் ஆஹ இருக்கும்,
2. எதில் குழந்தைக்கு தேவையான வசதிகள் அதாவது bassinet, குழந்தையின் உணவு எல்லாம் கிடைக்கும், என் குழந்தைக்கு இந்தியா செல்லும்போது 6 மாதம் முடிந்து இருக்கும்., என் தோழிகள் சிலர் bassinet இருக்கு என்று சொன்னாலும் நேரில் போய் கேட்கும்போது இல்லை என்று சொல்லி ஏமாற்றுவார் என்று சொல்லுகின்றனர்...,
3. அதனால் நீங்கள் சென்று வந்த அனுபவத்தில் எந்த ஐர்வய்ஸ் சிறந்தது என்று எனக்கும் சொன்னால் வசதியாக இருக்கும் நான் இந்த மாத இறுதியில் டிக்கெட் புக் செய்ய உள்ளேன்,
direct flight aaga புக் பண்ணால் நல்லதா இல்லை இடையில் transit இருப்பது போல் புக் பண்ணுவது நல்லதா?
[(newyork to newdelhi) or (newyork to any gulf countries or europe countries)] குழந்தைக்கு எது கஷ்டமா இருக்கும்.., உங்கள் அனுபத்தில் நீங்கள் தெரிந்ததை சொல்லுங்கள் என்னை போல இருக்கும் மற்ற தோழிகளுக்கும் இது உதவும்!!!
அப்றம் ஒரு முக்கியமான கேள்வி, எங்களுடைய விசா validity முடிந்து விட்டது ஆனால் extension பண்ணும் form மட்டும் கையில் உள்ளது, இந்தியா சென்று திரும்பி வரும்போது extension வாங்கி வரவேண்டும், இங்கு உள்ள என் மற்ற இந்தியர்கள் ஐரோப் வழியாக சென்றால் transit விசா கேட்பார்கள் என்று கூறுகின்றனர், சிலர் தேவை இல்லை என்கின்றனர், அதனால் அமெரிக்காவில் வாழும் தோழிகள் இதை பற்றி தெரிந்தால் சொல்லவும் நாங்கள் j1, j2 visa.,

நன்றிகள் பல !!!!

மத்த எதுவுமே விவரம் தெரியாது..ஆனால் குழந்தையோட போறப்போது எமிரேட்ஸ் தான் பெஸ்ட்.அதுலயும் பிசினெஸ் க்லாஸ் இல்ல ஃபர்ஸ்ட் க்லாஸ் எடுத்தா ஆஹா சொர்க்கம் தான் நேரம் போறதே தெரியாது.ரம்யா சொன்ன அந்த baby Hammock நானும் பார்த்தேன் இப்போ தான் நியாபகம் வருது முன்ன என்கூட வந்தவங்க அப்படி முன் சீட்டில் கட்டி ஹாயா குழந்தையோட விளையாடிட்டிருந்தாங்க இது எங்கிருந்து வாங்கியிருப்பாங்கன்னு யோசிச்சேன்.வசதியா தான் தெரிஞ்சது.ஆனா சாப்பிட எதாவது சேன்ட்விச் வாங்கி கைல புடிச்சி இறக்கிட வேண்டியது தான்.
ஆயிரத்தெட்டு தடவை போய் வந்தாலும் அடுத்த முறை குழந்தைகளோட தனியா ந்னு யோசிக்கும்போதே தலைசுற்றல் மயக்கம் எல்லாம் சேந்து வருது

லாவண்யா உங்கள அக்கா நு கூப்பிட்டா வயசு அதிகமாக தெர்யும் நு தான் மேடம் நு சொன்னேன், சரி விடுங்க இனி அக்கா நு கூப்பிடுறேன், நான் ஏர்லைன்ஸ் க்கு கால் பண்ணி கேட்டேன் நீங்க சொன்ன மாதிரி first come first serve நு சொல்லிடாங்க, ப்ருச்செல்ஸ் வழியாக போனால் transit விசா தேவை இல்ல நு சொன்னாங்க jet airways க்கு கால் பண்ணி கேட்டால் 2 பச்சிநெட் தான் தருவோம் அதனால் டிக்கெட் புக் பன்னுபோது கேட்டுட்டு பண்ணுங்க நு சொலிட்டாங்க.,
எமிரேட்ஸ் ரொம்ப ticket fare அதிகமா தெரியுதே, அதான் யோசிச்சுட்டு இருக்கோம்,
flyeebaby நல்லா இருக்கே!!!
ரம்மி நீங்க சொன்ன அந்த தொட்டில் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு வாங்கலாம் நு யோசிச்சுட்டு இருக்கேன், ஜெர்மனி வழியா போனால் விசா வேணுமான்னு தெரியல இப்ப தான் நான் ஓவொரு embassy கால் பண்ணி கேட்டுட்டு இருக்கேன், ஆனால் எல்லாருக்கும் transit விசா கேட்க மாட்டாங்க, எங்க விசா validity முடிந்து விட்டது அதனால் எங்களுக்கு கண்டிப்பா கேட்பாங்க நு சொன்னங்க,
அப்றம் லாவண்யா அக்கா நீங்க கலிபோர்னியா நு எங்கேயோ மன்றத்துல பார்த்த மாதிரி ஞாபகம், உண்மையா? நாங்களும் கலிபோர்னியா க்கு போலாம் நு தான் பிளான் பண்ணி வச்சு இருந்தோம், ஆனால் திடீர்னு என் கணவருக்கு அங்க வேலை அமையல, அதுக்குள்ள நான் என் கணவர்ட்ட நான் கலிபோர்னியா போனால் லாவண்யா மேடத்தை போய் பார்ப்பேன் நு பெருமை வேற பீத்துனேன்., முடியாம போச்சு :( :( :( இப்ப திரும்ப இந்தியா போறோம் இங்க வரமாட்டோம் நு நெனைக்கிறேன்,
ரம்மி உங்களையும் ஒரு தடவையாவது எப்படியாது பார்க்கணும் நு நினச்சேன், நம்ம தா பக்கத்துக்கு ஸ்டேட் ஆச்சே!!! அது முடியல..., :( :( :(

//இருந்தாலும் அந்த இருபத்தி நான்கு மணி நேர ஃபளைட் ட்ராவலில் இரண்டு முறை தான் என்னால் ரெஸ்ட் ரூம் செல்லவே முடிந்தது // அட கடவுளே!!! இந்த பையனை இந்தியா எடுத்துட்டு போறத நெனச்சா இப்பவே கண்ண கட்டுதே!!! சொன்னால் நம்ப மாடீங்க எனக்கு flight travel நெனச்ச niteல தூக்கமே வரமாடீங்குது ...., :( சரி சரி பையன் அழுறான் ஒரே நாளில் 3 ஊசி போட்டு அழுக வச்சுடாங்க :( (தடுப்பு ஊசி )

அன்புடன் அபி

// ஆஹா சொர்க்கம் தான் நேரம் போறதே தெரியாது// நீங்க சொல்லும்போதே தெரியுது அது எவ்ளோ சொகுசா இருக்கும் நு , ஆனால் first கிளாஸ் புக் பண்ணி போற அளவு நாங்க பெரிய ஆள் இல்லீங்கோ!!! :) :) :)
பேபி hammock வாங்கலாம் நு தான் அமேசான் ல பார்த்து இருக்கேன், அழகா இருந்தது !!!
//ஆயிரத்தெட்டு தடவை போய் வந்தாலும் அடுத்த முறை குழந்தைகளோட தனியா ந்னு யோசிக்கும்போதே தலைசுற்றல் மயக்கம் எல்லாம் சேந்து வருது// நீங்க எல்லாரும் சொல்றத பார்த்தா எனக்கு இப்பவே ரொம்ப பயமா இருக்கு !!!

அன்புடன் அபி

மேலும் சில பதிவுகள்