தையல் மெஷின் பற்றிய தகவல் வேண்டும் தோழிகளே!

ஹாய் ஃப்ரண்ட்ஸ் நான் ஒரு தையல் மெஷின் வாங்கலாம்னு இருக்கேன். ஓசூர் ல விசாரிச்சேன். நார்மல் மெஷின் இருக்கு அப்புறம் வெள்ளை கலர்ல எம்பிராய்டரி போடுறமாதிரியும் இருக்கு.. எனக்கும் எம்பிராய்டரி போடணும்னு ஆசை ஆனா அந்த மெஷின்ல எப்டி போடுறதுன்னு தெரியாது வாங்குனா நாம்ளே கத்துக்கலாமா இல்ல எதா கிளாஸ் போகணுமா? அந்த மெஷின் 7700/- சொல்றாங்க.. நார்மல் மெஷின் 5300/- சொல்றாங்க... நான் சும்மா வீட்ல தைக்க தான் வாங்கலாம்னு இருக்கேன் எது வாங்கலாம்.. ப்ளீஸ் யாராவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா... அதோட லைப்பும் எதுல நல்லா வரும்... ரிப்பேர் ஆச்சுனா பார்ட்ஸ்லாம் கிடைக்குமா ஈசியா?

மீனு
நான் சிங்கர் எம்பிராய்டரி மிஷின் வச்சிருக்கேன்.அதுல ஃப்ரேம் வச்சி எம்பிராய்டரி போட மூணு நாள் கிளாஸ் போய் கத்துகனும். அவங்களே கத்து கொடுப்பாங்க.
ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாம் ஈசியா கிடைக்கும்.
கிளாஸ் போகாவிட்டால் ஃப்ரேம் இல்லாமல் ஸ்ரைய்ட்டா அதாவது நேரா மட்டும் எம்பிராய்டரி போடலாம்..
வாங்கலாம் .

ஹாய் நிகிலா மிக்க நன்றி அப்ப கிளாஸ் எங்கன்னு நான் விசாரிக்கிறேன். உங்க பதிலுக்கு மீண்டும் நன்றி

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மிஷின் வாங்கிற கடையிலே சொல்லி குடுப்பாங்க மீனு

ஓ அப்டியா ஓகே அப்ப அங்கயே வாங்குனதும் சேர்ந்து படிச்சுக்குறேன். ஃபுல் டேவா கிளாஸ் நடக்கும்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மீனு ஃபுல்டே இல்லை.ஆனா நான் க்ளாஸ் போகல. எனக்கு நேரா மட்டுமே தைக்க தெரியும். அதுவே ரொம்ப பிடிச்சது.

ஓசூருல எந்த கடைல கேட்டீங்கனு சொல்லுங்க. நானும் வாங்கனும்

ஓசூர்ல சிங்கர் டீலர் இருக்காங்க... அவங்கட்ட தான் கேட்டேன். எனக்கு இடம் சரியா தெரில. அப்பல்லோ ஹாஸ்பிடல் அப்புறம் ஃபெர்டிலிட்டி ஹாஸ்பிட்ல நிறையா இருக்கும் அந்த ஏரியால தான் விசாரிச்சோம்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

நான் இப்போதான் தையல் கிளாஸ் போயிட்டு இருக்கேன். நான் மிஷின் வாங்கலாம்னு இருக்கேன் அதுதான் கேட்டான். எனக்கு அட்ரஸ் மட்டும் கொடுங்க

Address... Singer Dealer, Gandhi Statue Opposite, Tank Street, Hosur.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ரொம்ப நன்றி. நான் இப்போது கோவையில் உள்ளேன்.ஜுலை மாதம் தான் பெங்களூர் வருகிறேன். இங்கு சின்ன தையல் மிசினே 6000 சொல்கிறார்கள். அதுதான் உங்களிடம் கேட்டேன்.

மேலும் சில பதிவுகள்