நான் தாய்மை அடைந்துள்ளேன் தோழிகளே

வணக்கம் தோழிகளே ,நான் உங்கள் தோழி பாரதிமதனசெல்வம் ,எனக்கு திருமணமாகி மூன்று வருடம் ஆக இன்னும் ஒரு மாதமே உள்ளது ,எனக்கு நீர்க்கட்டி பிரச்சனை இருந்தது ,எவ்வளவோ மருத்துவம் செய்து உள்ளேன் ,ஆனால் எதுவுமே பலன் அளிக்கவில்லை ,ஆனால் கடைசி முயற்சியாக கடந்த 12 ம் தேதி மார்ச் மாதம் லேப்ரோஸ்கோபி செய்து முடித்தேன் ,நான் பட்ட இன்னல்களுக்கு அளவே இல்லாமல் இருந்தது ,இப்போது எனக்கு கருதரித்து உள்ளது .மருத்துவர் இன்று தான் உறுதி செய்தார் ,எனக்கு கரு நிலைக்கவும் நல்ல படியாய் குழந்தை பிறக்கவும் வேண்டிக்கொள்ளுங்கள் தோழிகளே .நான் சந்தேகம் கேட்டால் தாய் போல் பதில் போடும் உள்ளங்களுக்கு நன்றி .தாய்மை பற்றி இன்னும் நிறைய பல சந்தேகங்கள் உள்ளன ,அவைகளை தேவைப் படும் போது உங்களிடம் கேட்டு தெரிந்து கொள்கிறேன் ,நன்றி

தோழி பாரதி
நீங்க நல்ல முறையில் குழந்தையை ஆரோக்கியமாக பெற்று சகல பாக்கியங்களும் பெற இறைவனை வேண்டுகிறேன் வாழ்த்துகள் தோழி

மிக்க நன்றி தோழி நிகிலா ,உங்களின் வேண்டுதல் எனக்கு என்றுமே தேவை

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

பாரதி ரொம்ப சந்தோஷமா இருக்கு, இறைவனை பிராத்தனை செய்துக்கிறேன் நீங்க நல்ல ஆரோகியமான அழகான குழந்தையை பெற்றெடுக்க வேண்டும்.
அப்பறம் பாரதி நல்ல ஓய்வும் நல்ல ஆரோக்கியமான உணவுகளும் எடுத்துக்கோங்க.

elarum epadi erukenga

Hai bharathy... Kadavul varappogum ungal pirandha naalukku parisaga ungalukku kuzhandhai selvathai alithullar... Nalla murayil kuzhandhai petredukkavum, naalai marunaal ungalin pirandha naalukkum vazhthukkal...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

உமா -மிக்க நன்றி பா.எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்
நித்யா -மிக்க நன்றி பா ,எனது பிறந்த நாள் நாளை மறுநாள் என்று எப்படி தெரியும்.facebook la பார்த்திங்களா ?

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

Bharathy... enaku mail la facebook la irundhu intimation vandhadhu pa... En friend name also bharathy... Avalukum marriage aagi 3 yrs aagudhu. Avalukum still kuzhandhai illa pa. Ava madurai. Neenga?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

பாரதி... ரொம்ப சந்தோசமா இருக்கு.. நீங்க குழந்தை செல்வத்தை நல்ல முறையில் பெற்றெடுக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். நல்ல ஆரோக்கியமான சாப்பாடு சாப்பிடுங்க. பழங்கள் நெறைய சாப்பிடுங்க. உடம்பை பத்திரமா பாத்துக்கோங்க. வாழ்த்துக்கள். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பாரதி நல்ல முறையில் ஆரோக்கியமான குழந்தையை பெற்று எடுக்க வாழ்த்துக்கள் நல்ல பாடல்களை கேளுங்கள் மனதை எப்போதும் சந்தோசமாக வைத்து கொள்ளுங்கள்
உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளும்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

வாழ்த்துக்கள். நீங்கள் நல்ல படியாக குழந்தையை பெற்று எடுக்க நானும் கடவுளை பிராத்திக்கிறேன்.

மேலும் சில பதிவுகள்