ரைஸ் க்ரிஸ்பி பார்ஸ்

தேதி: June 20, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (4 votes)

 

வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
மார்ஷ்மெல்லோ க்ரீம் - 5 (அ) 6 oz
சாக்லெட் ரைஸ் க்ரிஸ்ப்பி சீரியல் - 3 கப்
ஸ்பிரிக்கிள்ஸ் - அலங்கரிக்க


 

தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும். ஒரு ட்ரே எடுத்துக் கொண்டு, அதன் அளவிற்கு ஏற்றாற்போல பார்ச்மென்ட்/பட்டர் பேப்பர், கட் செய்து ட்ரேயில் போட்டு தயாராக வைக்கவும். (அல்லது) நாண்ஸ்டிக் ஸ்ப்ரே அடித்தும் ட்ரேயை தயார் செய்துக்கொள்ளலாம்.
முதலில் ஒரு அடி கனமான பாத்திரத்தில் வெண்ணெயை போட்டு உருக்கவும். அடுப்பில் தீ குறைவாக இருக்கவேண்டும்.
வெண்ணெய் உருகியதும், இதனுடன் மார்ஷ்மெல்லோ க்ரீம் சேர்த்து, கலந்து விடவும்.
சிறிது நேரத்தில் க்ரீமும் நன்கு உருகி, வெண்ணெயுடன் சேர்ந்து காணப்படும்.
இப்போது அடுப்பை அணைத்துவிட்டு, ரைஸ் க்ரிஸ்ப்பீசை கொட்டி வேகமாக கலக்கவும்.
ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் ட்ரேயில் கொட்டி, சமப்படுத்தி விடவும். (சமப்படுத்தும்போது கலவை கரண்டியில் ஒட்டும் வாய்ப்பு உள்ளது. கரண்டியில் சிறிது நாண்ஸ்டிக் ஸ்ப்ரே அடித்துக் கொண்டு சமப்படுத்த சுலபமாக இருக்கும்.)
மேலே அலங்கரிக்க ஸ்பிரிக்கிள்ஸ் தூவி விடவும்.
ஒரு 15 - 20 நிமிடங்களில், லேசாக சூடு ஆறி செட் ஆகிவரும்போது, கத்தியால், விருப்பமான அளவுகளில் வில்லைகளாக கட் செய்து விடவும்.
மேலும் சற்று சூடு ஆறியதும், ட்ரேயில் இருந்து எடுத்து வேறு ஒரு செர்விங் ப்ளேட்டில் வைத்து பரிமாற, சுவையான ரைஸ் க்ரிஸ்பி பார்ஸ் ரெடி! எளிதில் தயாரித்துவிடக்கூடிய இந்த பார்ஸ் குழந்தைகளின் மிக விருப்பமான ஒரு ஸ்நாக்.

ரெடிமேட் மார்ஷ்மெல்லோ க்ரீம் கிடைக்காதவர்கள், ரெகுலர் மார்ஷ்மெல்லோஸ் வாங்கி இதே அளவிற்கு, செய்ய 8 oz பயன்படுத்தலாம். இங்கே பயன்படுத்தி இருக்கும் சாக்லேட் ரைஸ் க்ரிஸ்ப்பிஸ்க்கு பதில், ப்ளைன் ரைஸ் க்ரிஸ்ப்பிஸும் உபயோகிக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அட அட அட..வர வர அறுசுவையில் எல்லோருமே ஹீரோயினிகளா மாறிட்டே இருக்கீங்க..வரும் குறிப்புகள் எல்லாமே புதுவிதமா இருக்கு.நம்ப எல்லார் வீட்லயும் இதே தட்டு இருக்கு போலிருக்கு;)

சம சூப்பர். மார்ஷ்மெலோஸ் சேர்ப்பது புதிது. நல்லா இருக்குங்க... கலர்ஃபுல்லா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பரா இருக்கு. ட்ரை பண்றேன்.

‍- இமா க்றிஸ்

அன்பு சுஸ்ரீ,

குழந்தைங்களுக்கு மட்டுமா, எங்களை மாதிரி பெரியவங்களுக்கும் இதைப் பார்த்தவுடனே சாப்பிடணும்னு ஆசையா இருக்கு. கலர்ஃபுல்லா இருக்கு.

பாராட்டுக்கள் சுஸ்ரீ

அன்புடன்

சீதாலஷ்மி

சுஜா
வாவ் .. சூப்பர். நானும் டேட்ஸ் ஓட்ஸ் ஸ்கொயர் செய்து படம் எடுத்து வைத்துள்ளேன். செம் பின்ஜ் :)
கலக்கலா இருக்கு.வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இது என்னுடைய ஃபேவரைட். அழகா செய்து அசத்தி இருக்கீங்க. இருந்தாலும் நீங்க வேலைக்கும் போயிட்டு குழந்தைகளை பல கிளாசுக்கும் கூட்டிட்டு போயிட்டு ஜமாய்க்கிறீங்க போங்க. சூப்பர் மாம். வாழ்த்துக்கள்.

//தளிகா கோரல் ல புது டிசைன் போட சொல்லிடுவோம்//

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா - ஆமா கண்டிப்பா சொல்லி அணுப்பணும்;)

இங்க ரைஸ் க்ரிஸ்பி பார்ஸ் படத்தை பார்த்ததும் ஏதோ கேக் வெரைட்டி நு நினைச்சேன். ஆனா இந்த ரைஸ் க்ரிஸ்பி பார்ஸ் வித்தியாசமா இருக்கு. சுவையாகவும் இருக்கும்னு நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

சுஸ்ரீ அடடா பார்க்கவே கண்ணை பறிக்குதே கலர், சூப்பர்ங்க வாழ்த்துக்கள்..

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

குழந்தைகளுக்கு ஏத்த பார்ஸ்..பளிச் படங்கள். ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க, வாழ்த்துக்கள் :-)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

குறிப்பை வெளியிட்ட அட்மின் & அறுசுவை நண்பர்களுக்கு நன்றி!

--
வாழ்த்து தெரிவித்த‌ அனைத்து தோழிக‌ளுக்கும் மிக்க‌ ந‌ன்றி!

(ரொம்பவும் நேர நெருக்கடியில், அவசர வேலையாக இருப்ப‌தால், தற்சமயம் த‌‌னித்த‌னியா ந‌ன்றி சொல்ல இயலவில்லை... தவறாக நினைக்கவேண்டாம்.)

மீண்டும் ஒரு நாள், நிதான‌மாக‌ வ‌ருகிறேன்! :)

அன்புடன்
சுஸ்ரீ