காகித மயில் செய்யும் முறை பகுதி - 1

தேதி: June 20, 2012

5
Average: 4.1 (8 votes)

 

கோல்டன் வென்சர் ஃபோல்டட் காகித முக்கோணங்கள் - 3 கலர்ஸ்
பச்சை கலர் - 800 +
சந்தன கலர் - 150 +
வயலட் கலர் - 25 +

 

பேப்பர்களை http://www.arusuvai.com/tamil/node/15022 இதில் உள்ளபடி மடித்து வைக்கவும்.
பேப்பர் பூ ஜாடி குறிப்பில் படம் 9 மற்றும் 10ல் குறிப்பிட்டுள்ளபடி ஒரு வரிசைக்கு 30 பச்சை காகிதங்கள் என்ற எண்ணிக்கையில் 3 வரிசை சேர்க்கவும்.
அதன் பின் ஒரு சந்தன வரிசை, மேலே பச்சை, மேலே சந்தனம் என 5 வரிசை சேர்க்கவும்.
இனி சந்தன கலரை முதலில் 6 பீஸ், அதன் மேல் 5, அதன் மேல் 4 என 1 வரை சேர்க்கவும்.
அதன் இரண்டு பக்கமும் 2 பச்சை கலர் காகிதங்கள் வைத்து பார்டர் கொடுக்கவும்.
மேலே 2 பீஸ் நிற்பது போல் முடிக்கவும்.
இதன் அருகே இரு பக்கமும் 2 பீஸ் சேர்க்கும் இடத்தை வட்டு விடவும்.
மீதம் உள்ளதில் பச்சை சேர்க்கவும். இதன் மேல் இன்னும் 4 பச்சை வரிகள் சேர்க்கவும். இதன் கடைசி முக்கோணம் மட்டும் படத்தில் உள்ளது போல் ஒரே ஒரு பக்கம் சேர்த்து இன்னொரு பக்கம் உள் பகுதியில் வருவது போல் விடவும்.
இடப்பக்கத்தில் இருந்து 4 பச்சை பின் ஒரு வைலட் கலர் பின் 3 பச்சை அதை தொடர்ந்து 1 வைலட் என சேர்க்கவும்.
இப்போது இரண்டு ஓரமும் 4 பச்சை, நடுவில் உள்ளவை 3 என்ற கணக்கில் வைலட் நடுவில் இருக்கும். (4-1-3-1-3-1-3-1-4)

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அன்பு வனிதா

800 ஃபோல்டிங்கா !!!!!

150 + 25 ஃபோல்டிங்கா !!!!!!!!!!

எத்தனை நாள் ஆச்சு வனி? விரலும் கைகளும் சிவந்து போயிருக்குமே!

இதோ அடுத்த பகுதியையும் பார்த்துட்டு வ்ந்துட்டே இருக்கேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

ஆஹா! ம்.. அடுத்த பகுதியையும் பார்த்துவிட்டு வருகிறேன். :)

‍- இமா க்றிஸ்

கைவினையை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

சீதாலஷ்மி, இமா... மிக்க நன்றி. இருங்க அடுத்ததிலேயே விளக்கமா சொல்றேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா