காகித மயில் செய்யும் முறை பகுதி - 2

தேதி: June 20, 2012

5
Average: 4.2 (14 votes)

 

கோல்டன் வென்சர் ஃபோல்டட் காகித முக்கோணங்கள் - 3 கலர்ஸ்
பச்சை கலர் - 800 +
சந்தன கலர் - 150 +
வயலட் கலர் - 25 +

 

படத்தில் உள்ளது போல் அடுத்த வரிசையில் ஒவ்வொரு வைலட் கலர் மேலும் 2 சந்தன கலர் வரும் படி சேர்க்கவும்.
மீதம் உள்ளவை பச்சை சேர்க்கவும்.
இதன் மேல் மீண்டும் முழுவதும் பச்சையாக 3 வரிசைகள் சேர்க்கவும்.
இப்போது ஒவ்வொரு 3 பச்சைக்கும் அடுத்து ஒரு வைலட் கலர் சேர்க்கவும். (3-1-3-1-3-1-3-1-3-1-3-1-3)
அதன் மேல் முன் போல் 3 சந்தன கலர் சேர்க்கவும். அதன் மேல் 2 பச்சை, 1 வயலட், 3 பச்சை 1 வயலட் என தொடர்ந்து சேர்த்து முடிக்கவும்.
இதன் மேல் மீண்டும் 1 பச்சை வரி சேர்க்கவும்.
இரண்டாவது வரியில் 7 பச்சைக்கு பின் ஒரு வைலட் பின் அதை தொடர்ந்து 6 பச்சைக்கு பின் ஒரு வைலட் என் சேர்க்கவும். (2-1-3-1-3-1-3-1-3-1-3-1-3-1-3-1-2)
இதன் மேல் எண்ணிக்கை ஒவ்வொன்றாக குறைத்து மேலே 3 பச்சை இருக்கும்படி முடிக்கவும். அதன் மேல் 2 வைலட், 1 சந்தனம், 1 பச்சை சேர்த்து முடிக்கவும்.
40 பச்சை கலர் பீஸ்களை 2 வரிகளாக சேர்த்து அதன் முனையில் 1 வைலட் மற்றும் 1 சந்தன கலர் வரும்படி கழுத்தை சேர்க்கவும். இதன் மேலே 2 வைலட் பீஸ் சேர்த்து கொண்டை போல் செய்யவும்.
கண் வைத்து முடித்தால் மயில் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அன்பு வனிதா

காகித மயிலா இது! கண்ணைக் கவரும் வண்ண மயில் - பார்த்துப் பார்த்து, பிரமிப்பில் ஆழ்ந்து போயிருக்கிறேன். நிஜமாகவே பேச்சே வரலை.

அசத்தல், அபாரம், அற்புதம்!!!

இன்னும் என்ன சொல்ல, மயிலின் அழகில் உங்க உழைப்பு தெரிகிறது. சிரத்தை தெரிகிறது.

ரசிக்கிறேன், ரசிக்கிறேன், ரசித்துக் கொண்டே இருக்கிறேன்.

பாராட்ட வார்த்தைகளைத் தேடுகிறேன். எத்தனை முறை பாராட்டினாலும் போதாது.

மனம் நிறைந்த பாராட்டுக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

hai vanitha madam, idhu rombavey azhaga irruku. idha yarumey paper la seithadhunu sonna nambavey maattanga. asathuringa ponga.no words to say,,, superbbbbbbbbbbbbbbbbbb

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

அழகா வந்து இருக்கு வனி. பாராட்டுக்கள்.

‍- இமா க்றிஸ்

அக்கா,
இவ்வளவு அழகு! சொல்ல வார்த்தை இல்லை என்னிடம்.. அற்புதமா இருக்குங்க அக்கா.. பார்த்துடே இருக்கனும் போல இருக்கு. இவ்ளோ அழகான செய்முறையும் படங்களும்.. சிம்பிளி க்ரேட் அக்கா.. தொடருங்கள் உங்கள் அருமையனா படைப்புகளை. என்றும் காத்திற்றுபோம்.
வாழ்த்துக்கள் அக்கா!
அன்புடன்,
சந்திரா

நான் இத சொல்லியே ஆகனும் மயிலே நீ அவ்வளவு அழகு இப்படி ஒரு அழகா யாரும் இதுவரை பார்த்து இருக்க மாட்டாங்க(வாரணம் ஆயிரம் டயலாக்ங்க இது) இத பார்த்ததும் அது தான் தோணுச்சு. எப்படி வனிதா கலக்குறீங்க போங்க அவ்வளவு அழகா இருக்கு பார்த்து பார்த்து ரசிச்சு ரசிச்சு நேரம் போகுது. உங்களோட பொருமையும் நேரம் இதில் இருக்கு. வாழ்த்துக்கள்ங்க.

அழகு மயில் ரொம்ப அழகா இருக்கு.உங்களிடம் ஒன்னு சொல்ல மறந்திட்டேன்.எனக்கு கை வேலையில் சுத்தமா ஆர்வம் கிடையாது.ஆனா உங்க எளிமையான ஹென்னா டிசைன் என்னை சிறிது ஆர்வப்பட வைத்தது.உடனே print outஎடுத்து கையில் போட்டு பார்த்தேன் .மாங்காவின் வலைவு மட்டும் வர சிரமப்பட்டென்.பின்பு இந்தியா சென்ற சமயம் உறவினர் கல்யாண்திர்க்கு எனக்கு நானே போட்டு அசத்திடேன்.ஆனா ஒரு கைக்குதான் ஒரு மணிநேரம் ஆச்சு.சந்தோசாமா இருந்தது.எல்லா பாராட்டும் உங்கலுக்குதான்.உங்களின் திறமை சுறுசுறுப்பு சொல்ல வார்தை இல்லை

மயில்
வண்ண மயில் அழகா தொகை விரித்து ஆடுது.
பளிச் கலர்ல பச்சை மயில்.
கிளியுடன் போட்டியிடும் கலர். அருமை போங்க
வாழ்த்துக்கள்
:)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

எனக்கு சொல்ல வார்த்தையே இல்லை. இத்தனையையும் பொறுமையாக மடிக்கணும், அதை குழந்தைக்கிட்டே இருந்து காப்பாத்தனும் (இது இன்னமும் கஷ்டம்) அதைவிட பொறுமையாக அடுக்கனும். அதுவும் கலர் காம்பினேஷன் வேற அழகா செலக்ட் பண்ணி சொதப்பாமல் இருக்கணும். ஷப்பா சொல்லும்போதே கண்ணை கட்டுதே......முடியலை.....கண்டிப்பா நான் செய்யனும்னு கனவுல கூட சொல்ல என்ன நினைக்க கூட மாட்டேன்......

//கண் வைத்து முடித்தால் மயில் தயார்// எவ்வளவு சாதரணமாக சொல்லி முடிச்சிட்டீங்க......எங்களையெல்லாம் பற்றி யோசிக்கவே மாட்டீங்களா?

வாழ்த்து சொல்லி உங்களின் உழைப்பு திறமையை சின்ன வார்த்தையில் அடக்க விரும்பலை. கீப் கோயிங் கேர்ள் :)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நல்ல அழகு
சுபா

be happy

அம்மாடியோவ் ரொம்ப ரொம்ப பொறுமைங்கோ உங்களுக்கு. பொறுமைக்கும் எனக்கும் ஏணி வச்சாலும் எட்டாது. பார்த்து ரசிக்கறதோட இப்போ நிறுத்திக்கறேன் :).

மயில் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. இன்னும் நிறைய செய்து அசந்துங்க்கோ. நாங்க பார்த்து ரசிக்கிறோம் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கலக்கலா இருக்கு கலர்புல் காகித மயில்.....

வாழ்த்துக்கள்!!!

”அழகு மயிலாட..
அபிநயங்கள் கூட.. " அடடடட அடடடட டாஆஆஆஆ :)

சரி சரி போன முறை போட்ட அடடாக்கே செய்து பார்க்கச் சொன்னது நினைவில் இருக்கு.. :) இந்த முறை நானே சொல்லிடறேன்.. அதுவோ இதுவோ எதுவோ ஒன்று செய்து ஃபோட்டோ எடுத்து அனுப்புகிறேன்.. ஆனா எப்போனு மட்டும் கேட்டுடாதீங்க ;)

பச்சை கிளி போல் இது பச்சை மயிலோ?

ரொம்ப அழகா பண்ணி இருக்கீங்க, ஆனாலும் உங்களுக்கு ரொம்ப பொறுமைங்க. உங்க குட்டீஸ் எப்படி இது எல்லாம் செய்ய உங்களை அளோ பண்றாங்களோ தெரியலை. எனி வே படங்கள் தெளிவாகவும் அழகாகவும் குடுத்திருக்கீங்க வனி. கிரேட் வொர்க். வாழ்த்துக்கள்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

கைவினையை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

சீதாலஷ்மி... மிக்க நன்றி. உடல் மட்டுமே எனக்கு 300 வந்தது. தோகை 1000 இருக்கும். செய்து முடிக்க 5 நாள் ஆச்சு. சமையலில் அடுப்பில் வெச்சுட்டு மடிப்பேன், டிவி பார்த்துகிட்டு மடிப்பேன், அறுசுவை பார்க்கும் போது மடிப்பேன், இரவு கொஞ்ச நேரம் மடிப்பேன்... இப்படியே தான் முடிஞ்சுது. ஆனா முடிவு பார்த்து அந்த கஷ்டமெல்லாம் மறந்து போச்சு. :) உங்க பாராட்டு கிடைச்சதை விட கஷ்டம் பெருசு இல்லைங்க.

ரேவதி... மிக்க நன்றி. செய்த வேலைக்கு எல்லாருக்கும் பிடிச்சது மிகுந்த மகிழ்ச்சி. :)

இமா... பிடிச்சிருக்கா?? மிக்க நன்றி :)

சந்திரா... உங்களை போல் அன்பான சகோதரிகள், தோழிகளின் பாராட்டு இன்னும் இன்னும் செய்ய வைக்குது... அடுத்த ப்ராஜக்ட்டை சீக்கிரம் துடங்கிடுறேன். மிக்க நன்றி :)

உமா... மிக்க நன்றி. ஓ... இப்படி ஒரு டயலாக் இருக்கா?? நான் முதல்ல நீங்க சொந்தமா சொல்றீங்கன்னு நினைச்சேன்... சாரி நான் படத்தில் ரொம்ப வீக். என் பொறுமை மட்டும் இல்லைங்க... என்னவர் ரொம்ப பொறுமையா வேணும்னு கேட்டபலாம் பேப்பரை வாங்கி தந்தார் :) இல்லன்னா எங்க முடிக்க.

பர்வீன்... அட... மருதாணி போட்டீங்களா?? ஆஹா என்னால் பார்க்க முடியலயே ;( எப்படியோ நீங்க போட்டு அசத்துனதே எனக்கு பெரிய சந்தோஷம் தான் :) முதல்ல போடும் போது நேரம் அதிகம் எடுக்க தான் செய்யும்... நானும் மணி கணக்கா உட்கார்ந்து போட்டிருக்கேன்... பழக பழக சீக்கிரம் போடுவீங்க... டச் விடாம போடுங்க... எக்ஸ்பர்ட் ஆயிடுவீங்க. மிக்க நன்றி பர்வீன்.

ரம்யா... மிக்க நன்றி. உணமியில் இங்க மயிலுக்கு தேவையான அந்த கலர் கிடைக்கல... நிறைய இடத்தில் தேடிட்டேன். அதனால் பச்சை கலர்ல செய்தேன். இவரும் இதையே தான் சொன்னார்... “மயில் செய்யறேன்னு சொல்லிட்டு கிளி செஞ்சிருக்க...”னு. :)

லாவி... மிக்க நன்றி. நீங்க சொல்றது உண்மை... இவன்கிட்ட இருந்து இந்த பேப்பர்களை காப்பாற்ற நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். “வனிதா... பேப்பி... பேப்பி”னு கையில் இருக்குறதை பிடுங்குவான். அவன் கையில் ஒரு பேப்பர் குடுத்தா தான் என்னை 1/2 மணி நேரமாவது விடுவான். முடிஞ்ச வரை அவன் கண்ணில் படாம தான் செய்தேன். செய்து அவன் கண்ணில் படாம உயரமா எங்கையாவது மறச்சு வைக்கனும். ////கண் வைத்து முடித்தால் மயில் தயார்// எவ்வளவு சாதரணமாக சொல்லி முடிச்சிட்டீங்க......எங்களையெல்லாம் பற்றி யோசிக்கவே மாட்டீங்களா?// - அத ஒரு பெருமூச்சோட படிக்கணும்... ;) செய்து முடிச்ச நிம்மதி.

சுபா... மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவிசிவா... மிக்க நன்றி. பொறுமை எனக்கே கிடையாதுங்க... ஏதோ ஒரு இண்ட்ரஸ்ட்... எடுத்தோம், முடிச்சாகனும்னு செய்தேன். இவர் தினமும் ஆபீஸ்ல இருந்து வந்ததும் போய் எடுத்து பார்ப்பார்... இவ்வளவு முடிச்சிருக்கீயா, இன்னும் எவ்வளவு இருக்கு செய்ய’னு கேள்வி கேட்பார். :) அதனால தான் முடிச்சேன் கொஞ்சம் வேகமா.

சுபா... மிக்க நன்றி :)

சாந்தினி... மிக்க நன்றி. பாட்டெல்லாம் போட்டு அசத்துறீங்க. //அதுவோ இதுவோ எதுவோ ஒன்று செய்து ஃபோட்டோ எடுத்து அனுப்புகிறேன்.. ஆனா எப்போனு மட்டும் கேட்டுடாதீங்க ;)// - இது இது... இது போதும் எனக்கு :) எவ்வளவு நாளானாலும் பொறுமையா வெயிட் பண்ணுவேன். மறக்காம அனுப்புங்க.

பிரேமா... மிக்க நன்றி. நான் இதை தான் இப்ப சொன்னேன்... ;) மயிலுக்கு தேவையான கலர் இங்க கிடைக்கல... பச்சையில் செய்ததும் இவரும் இதையே தான் சொன்னார்... ;) பச்சை கிளின்னு குட்டீஸ் எந்த வீட்டில் தாங்க அலோ பண்ணாங்க??? ;) எல்லாம் அவங்க தூங்கும் போது, எங்கையாவது விளையாடும் போது கண்ணில் படாம செய்வது தான். ஹிஹிஹீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆனாலும் வனி இது ரொம்ப வேலைப்பாடுங்க

மிக்க நன்றி. மடிப்பது தான் சிரமம்... சேர்ப்பது 1 - 2 மணி நேர வேலை தான். முடிஞ்சுடும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தோகை இளமயில்
ஆடி வருகுது, வானில்
மழை வருமோ...?!

வாவ்.. வனி, உங்க மயில் அழகோ அழகு, அத்தனை அழகு!! :)
எனக்கு வேற என்ன சொல்றதுன்னே தெரியலை! எத்தனை பொறுமை உங்களுக்கு... அருமை,அருமை! அசத்திட்டிங்க வனி!

மனம் நிறைந்த பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்! தொடர்ந்து அசத்துங்க வனி, நாங்க பார்த்து ரசிக்கிறோம் :)

அன்புடன்
சுஸ்ரீ

மிக்க நன்றி. வேலை அதிகம்னாலும் செய்தா கிடைக்கும் திருப்த்தியும் அதிகமா இருக்கே ;) நான் உங்க மகளோட பேப்பர் க்ராஃப்ட்டுக்காக தான் வெயிட்டிங்... சீக்கிரம் செய்து முடிக்க சொல்லுங்க மேடம்கிட்ட. ஆண்ட்டி பார்க்கணுமாம்னு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

காகித மயில் ரொம்ப அழகா இறுக்கு. எனக்கு செய்யணும் ஆசையா இருக்கு. ஆனா இந்த பேப்பர் இங்கே கிடைக்குமா என்று தேடி பார்க்கணும்.வாழ்த்துக்கள் வனிதா அக்கா

இதுவும் கடந்து போகும்

மிக்க நன்றி. :) இந்த பேப்பர் கிடைக்கலன்னா என்ன இருக்கவே இருக்கு மேகசின் பேப்பர்ஸ் ;) கட் பண்ணி பயன்படுத்துங்க. அழகாவும் இருக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா