எங்களைப் போன்று யாரும் ஏமாற வேண்டாம்.

அன்புள்ள தோழிகளே எங்களைப் போன்று யாரும் ஏமாற வேண்டாம். என் கணவருக்கு கான்சர் உடல்நிலையூம் சரியில்லை. எங்கள் வீட்டிலும் அத்தை மாமாவிற்கு உடல்நலம் சரியில்லை. அடிக்கடி மருத்துவமனைக்கு வெளியூர் செல்ல வேண்டும் என்பதற்காக என் கணவர் ஒரு கார் வாங்காலாம் என்றார். அது மட்டும் இல்லாமால் அவருடையா நீண்ட நாள் ஆசையூம் கூட அதனால் திண்டுக்கல்லில் உள்ள PLA ஏஜேண்டை அனுகினோம். அவர்கள் பழனியில் உள்ள ஏஜேண்டை அனுகுமாறு கூறினார்கள். அவர்கள் முன் பணம் செலுத்த வேண்டும் என்றார்கள். Rs.10,000த்தை கட்டினோம். பின் வங்கியில் லோன் போட்டு Balance Amount வாங்கி கொடுத்தோம். கார் டெலிவரி வேண்டுமானால் நீங்கள் மீதி பணமான Rs.67,000 கொடுக்க வேண்டும் என்றார்கள். நாங்களும் கொடுத்தோம். அதற்கு ரசீது கேட்டதற்கு கார் டெலிவரி கொடுக்கும் போது கொடுப்போம் என்றான். சரி என்று சொல்லிவிட்டு கார் எப்ப கொடுப்பீங்க என்று கேட்டதற்கு 3 நாள் கழித்துக் கொடுப்போம் என்றான். ஆனால் அந்த பணத்தை எடுத்துக் கொண்டு அவன் ஓடி விட்டான் நாங்கள் அந்த கம்பெனியிடம் கேட்டதற்கு அவன் ஓன்றும் எங்களிடம் கொடுக்கவில்லை அதற்கு நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லி விட்டார்கள். நாங்கள் ஏஜெண்ட் என்று தான் கொடுத்தோம் , இப்ப பணத்தை ஏமாற்றியது தான் மிச்சம். மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். அதனால் ஏதேனும் ரொக்கம் கொடுக்கும் போது ஏதேனும் ரசீதை வாங்கி கொள்ளுங்கள். ஏஜண்ட் என்று ஏமாறா வேண்டாம்.

நீங்க கூறியிருப்பதை படிப்பதற்கே கஷடமாக உள்ளது. உடல் நிலை சரியில்லாத நிலையில் காரின் அவசியத்தை உணர்து அதை வாங்க திட்டமிட்டு இப்படி செயல் படுத்தும்போது கோட்டைவிட்டு விட்டீர்களே?

உங்களை இந்த நிலையில் குறை கூறுகிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம். இதை படிக்கும் தோழிகளுக்கும் உதவும் என்று தான் இதை இங்கே சொல்ல விழைகிறேன். இப்பொழுதிருக்கும் காலத்தில் யாருக்கு பணம் கொடுத்தாலும் அதற்க்கு அத்தாட்சி இல்லாமல் கண்டிப்பாக கொடுக்கவே கூடாது. எஜென்ட்டே ஆனாலும் நீங்கள் எப்படி ரசீது இல்லாமல் கொடுத்தீர்கள். அதுவும் ரொக்கமாக?

நீங்கள் வங்கியில் தானே பணம் லோன் போட்டு எடுத்தீங்க? வங்கியில் அந்த நோட்டின் எண் இருக்கும் அதை கேட்டு வாங்கி அதை வைத்து அந்த தலைமறைவாகிப் போன ஏஜென்ட் மேலும் அந்த டீலர் மேலும் நீங்கள் புகார் கொடுக்கவும். கண்டிப்பாக உங்களுக்கு நியாயம் கிடைக்கும். பாடுபட்டு உழைத்த பணமோ பொருளோ நம்மை விட்டு எங்குமே போகாது. அதற்க்கு சொந்தக்காரர் நீங்கள் எனில் அது கண்டிப்பாக அது உங்களிடமே வந்து சேரும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

Nithya ganesh... ungal padhivai padithen. romba varuthama irukunga. udane Lavanya sonnadha try pannunga. Kastapattu sambadhichadhu, ennaikum veenagadhu... Kavalai padadheenga. Indha nerathil neengathaan annakum, unga mama, mamikum aarudhal sollanum.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

கண்டிப்பாக டிரை பன்றைன். என்னால் இன்னும் மீள் முடியவில்லை. நான் ரொம்ப அதிர்ஷ்டம் இல்லாதவ அதான் இப்படி நடக்குது. அவர் கார் வரப்போற சந்தோஷத்தில இதை விட்டு விட்டார். அதான் இப்படி ஆயிடுச்சு. ஆனால் ரொம்ப தாங்க்ஸ். எனக்கு ஆறுதல் சொன்னதுக்கு. உங்கள் இருவருக்கும்.

இன்று வேளையை இன்றை முடிப்பது

Kavala padathinga raasi illannu manasa kulapikathinga nithya inimel ella visyathilum kavanama irunthukonga.valkayil ithellam oru paadam than.

ப்ளிஸ் ஹெல்ப் பண்ணுங்க. எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. ஏஜெண்ட் என்று பணம் கொடுத்தோம் இப்ப கார் லோன் வேற கட்டனும். Police ம் கொடுத்தாச்சு ஆனால் ஏதுவும் நடக்க மாட்டேங்குது. ப்ளிஸ் யாருக்காச்சும் தெரிஞ்சவங்க இருந்த சொல்லுங்க என்ன செய்றதுனு

இன்று வேளையை இன்றை முடிப்பது

மேலும் சில பதிவுகள்