தோல் உரிதல்

ப்ளீஸ் யாராவது தெரிஞ்சவங்க ஹெல்ப் பண்ணுங்க. எனக்கு மூக்கின் மீது அடிக்கடி தோல் உரிகிறது. பார்க்கவே அசிங்கமா இருக்கு. எதனால் இப்படி ஆகிறது -ன்னு தெரில. இதை சரி செய்ய நான் என்ன செய்ய வேண்டும்? என்னுடையது வறண்ட சருமம். நான் FACE-க்கு கஸ்தூரி மஞ்சளும், கடலை மாவும் யூஸ் பன்றேன். FACE-க்கு கிரீம், பவுடர் எது யூஸ் பண்ணுனாலும், FACE டல்லா இருக்கிற மாதிரியே FEELING. SO பவுடர் கிரீம்-னு எதும் யூஸ் பன்றது இல்ல. குளிக்கறதுக்கு முன்னாடி மட்டும் FACE க்கு தேங்காய் எண்ணெய் மட்டும் தேச்சுட்டு அப்புறம் குளிப்பேன்.. என்னோட SKIN-க்கு நான் என்ன கிரீம், பவுடர், யூஸ் பண்ணுலாம்? இப்போ FACE-க்கு அப்பளை பன்றது எல்லா கரெக்டா? எனக்கு குட் SUGGESTION குடுங்க FRIENDS....

சுதாலாவண்யா, மூக்கின் மீது தோல் உரிவது சில சமயங்களில் எனக்கும் இருந்திருக்கிறது. அப்போது அடிக்கடி மூக்கின் மூது மாய்ஸ்சரைசிங் க்ரீம் போடுவேன். ஒரு வாரத்திற்குள் சரியாகிடும். தோல் உரிந்து வருவது அசிங்கமா இருக்கேன்னு மேலெழும்பி இருக்கும் தோலை நாமாகவே பிய்த்துக் கொண்டிருந்தால் தோல் கருமையாகி விடும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அச்சச்சோ இது தெரியமா, நீங்க சொன்ன மாதிரியே நா இவ்ளோ நாட்களா அசிங்கமா இருக்குதுன்னு பிச்சு விட்டுட்டு தா இருந்தேன் .. இனி இப்படி செய்யமாட்டேன்... ரொம்ப தேங்க்ஸ் அக்கா.... மறுபடியும் தொந்தரவு பன்றேனு நினைக்ககாதீங்க அக்கா. என்னுடையது வறண்ட சருமம் என்னோட ஸ்கின் டைப்க்கு ஏற்ற மாய்ஸ்சரைசிங் க்ரீம் சொல்லுங்க அக்கா.... ப்ளீஸ்...

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

கவிசிவா எனக்கும் ஒரு சஜஷன் சொல்லுங்களேன் ப்ளீஸ். எப்போ முக கழுவி பவுடர் அடித்தாலும் மூக்கு ஓரங்கள், புருவத்தின் இடையில் அப்படியே வெள்ளையாக இருக்கு, அதனால் ஏதாவது க்ரீம் போட்டு விட்டு பவுடர் போட்டாலும் எதுவும் பெரிய மாற்றம் இல்லை. எதனால் இருக்கும்னு உங்களுக்கு ஐடியா இருக்கா?

ஹாய் சுதாலாவண்யா "அக்கா" எல்லாம் வேண்டாம். கவிசிவா ன்னே கூப்பிடுங்க. எனக்கு பியூட்டி டிப்ஸ் எல்லாம் ரொம்ப தெரியாதுப்பா. கார்னியர் அல்லது நியூட்ரோஜினா பிராண்ட் நல்லா இருக்கும்.

உமாகுணா பவுடர் போடும் போது முகம் ஈரமா இருந்தால் நீங்கள் சொல்வது போல் ஆகும். க்ரீம் போட்டுட்டு கொஞ்ச நேரம் ஃபேன் கீழே நின்னு முகம் உலர்வானதும் பவுடர் போட்டு பாருங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் கவி... சரி அக்கா-வ வாபஸ் வாங்கிக்கிறேன்... நான் மாய்ஸ்சரைசிங் க்ரீம் யூஸ் பண்ணிட்டு எப்படி இருக்குனு சொல்றேன்... ரொம்ப தேங்க்ஸ்...

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

மேலும் சில பதிவுகள்