டூத் பிக் குடை

தேதி: June 23, 2012

5
Average: 4.5 (19 votes)

 

டூத் பிக் - 9
எம்.சீல்
உல்லன் நூல் - ஆரஞ்சு மற்றும் நீலம்
கோல்டன் மணிகள்

 

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
எம்.சீலை பெரிய முத்துமணி அளவில் எடுத்து கையில் பவுடர் பூசிக் கொண்டு இரண்டையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.
எம்.சீல் காய்வதற்குள் டூத் பிக் குச்சியை படத்தில் உள்ளது போல் வைத்து ஒட்டவும். ஒட்டும் போது குச்சிகளை நேர் நேராக வைத்து சொருகாமல் சற்று கீழ் நோக்கி இருப்பது போல் ஒட்டவும். அடியில் ஒரு குச்சியை நடுவில் ஒட்டவும்.
பிறகு ஏதாவது ஒரு டூத் பிக் குச்சியில் ஆரஞ்சுநிற உல்லன் நூலை ஒரு சுற்று சுற்றி முடிச்சு போட்டுக் கொள்ளவும். அடுத்த குச்சியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
இதேப்போல் வரிசையாக எட்டு குச்சியிலும் சுற்றி கொண்டே வரவும்.
முதல் வரிசை தேவையான அளவு சுற்றி முடித்ததும், முடியும் நூலில் மற்றொரு நூலை சேர்த்து முடிச்சு போட்டு கொண்டு தொடர்ந்து சுற்ற வேண்டும்.
இவ்வாறு ஆரஞ்சு மற்றும் நீலநிற நூல்களை டூத்பிக் குச்சி முழுவதும் சுற்றி முடிக்கவும்.
குடையின் மேல் பகுதியில் எம்.சீல் தெரியும் இடத்தில் அதை மறைக்க மேலே மணி, கற்கள் வைத்து ஒட்டி அலங்கரித்துக் கொள்ளவும். இதை ஷோ கேஸ் பீஸாக உபயோகிக்கலாம், கொலு நேரங்களில் கொலு படிகளை அலங்கரிக்க பயன்படும். இதை நம் கற்பனை திறனுக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொள்ளலாம். பிக்னிக் மினியேச்சர் செய்ய கூட பயன்படுத்தலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

குடை குட்டியா சூப்பரா இருக்கு. எளிமையாவும் இருக்கு.

வாழ்த்துக்கள்!!!

டீம்... கியூட்டா இருக்கு :) எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... படங்கள் பளிச். பத்மா... உங்க கையில் ஏதோ மேஜிக் இருக்கு. நிஜமா... அசத்துறீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கும் பிடிச்சிருக்கு டீம். ;) கலர் தெரிவு சூப்பரா இருக்கு. பளிச் பளிச். பாராட்டுக்கள். கட்டாயம் செய்து பார்ப்பேன்.

‍- இமா க்றிஸ்

பார்க்க ரொம்ப அழகா இர்ருக்கு.கன்டிப்பா இத இன்னிக்கெய் செஇய்து பார்த்து சொல்ட்ரென்.
(this is my first tamil post so pls thappa type panni irundha sorry).

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

அன்பு டீம்,

கியூட்டா, குட்டியா, அழகா இருக்கு குடை!

பாராட்டுக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

அறுசுவை டீம்

சூப்பர், குட்டி குடை கலர் காம்பினசனோடு அழகா இருக்கு, அதும் அந்த பேக்ரவுண்ட் கலர் எனக்கு ரொம்ப பிடிக்கும். படங்களும் பளீர்.

வாழ்த்துக்கள்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

simply super

brindhashankar

idhai naan try panniten. super ah vandhadhu. Thks 2 admin.

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

romba azhaga irukku!
Nan kudai kambila senju en thozhigalukku parisa palli kaalangal la kudthurken.
Idhu migavum elimaya irukku!
Nandri ungal azgiya innovation ku:)

super

மிகவும் அழகாக இருக்கிறது

Unga idea super

SHORT &SWEET

chinna kudai nalla irukku