வனிதா அரட்டைக்கு அழைக்கிறேன்

அன்பு தோழிகளே... இரண்டு நாளா அறுசுவை ஏன் இத்தனை அமைதியா இருக்கு??? ;) எனக்கு பிடிக்காதே... அதான் எல்லா தோழிகளோடவும் பேச அரட்டை இழை ரொம்ப நாளைக்கு பின் நான் துவங்கி இருக்கேன்... வாங்க பார்ப்போம். :)

ஆங்கிலம் தமிங்கிலம்... வனிதா இழையில் கூடாது. அது தான் டீல்... 1 வரி அடிக்க 1 மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை... நான் காத்திருக்கேன்... மெதுவா தமிழில் தட்டிகிட்டு வாங்க.

அறுசுவையில் இப்போ அண்ணா புதுசா ஒரு டூல் இன்ஸ்டால் பண்ணிருக்கார். அது என்னன்னா... "Find people". இது என்ன பண்ணும் தெரியுமா??? யாரெல்லாம் பதிவு போடாம ஒளிஞ்சிருந்து சைட்டை சைட் அடிக்கறாங்களோ, அவங்களை எல்லாம் கண்டு பிடிச்சு அவங்க பேரை லிஸ்ட் போட்டுடும். அதனால் யாரும் மறஞ்சிருந்து பார்க்காம உள்ள வந்து பதிவை போடுங்க. மறைஞ்சிருந்து மாட்டிகிட்டா அப்பறம் இந்த வாரம் உங்க குறிப்பு யாரும் சமைக்கலாம் பகுதியில் கொடுத்தே ஆகணும்... அது தான் ரூல்ஸ். :)

நல்ல பிள்ளைகளா வாங்க பார்ப்போம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்ன வனி பட்டி முடிந்ததும் ஃப்ரி ஆயிட்டீங்க போல
அத்தி பூத்தாப்பல இந்த பக்கம்.

இப்படி ஒரு ரூல்ஸ்ஸா.அடடா மறைந்திருந்து பார்த்திருக்கலாமோ

வாங்க வாங்க... நான் எப்பவும் ஃப்ரீ தான்... அறுசுவைக்கு என் நேரத்தை எப்படியும் ஒதுக்கிடுவேன் ;) கிளம்பிட்டீங்களா???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

;( போங்கப்பா... யாரும் காணோம்... அதனால் நான் சமைக்க கிளம்பறேன். யார் வந்தாலும் ஒரு பதிவை போட்டு வைங்க... வந்து பார்க்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி எப்படி இருக்கிங்க பேசி ரொம்ப ரொம்ப நாள் ஆகிருச்சு குட்டீஸ் எப்படி இருக்காங்க என்ன வனி ரூல்ஸ் எல்லாம் போடுறிங்க சரி நான் வந்துட்டேன்
ரொம்ப நாளா காணாமல் போனவர்கள் பெயர்கள்
வினோ,யாழினி ,சிம்ரா , நசீம் , ................. இன்னும் இதே மாதிரி நிறைய பேர் இருக்காங்க எல்லாரையும் கூப்பிடுங்க வனி
வணக்கம் நிக்கி எப்படி இருக்கிங்க

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

வணக்கம் தனா
.சமையல் முடிஞ்சதா?பையன் எப்படி ஸ்கூல் போறார்?bye

என்னங்க லிஸ்ட் இவ்வளவு சின்னதா விட்டுட்டீங்க... கல்பனா, சுவர்ணா, லாவண்யா, ரம்யா, தான்யா, சுபா, சுதா, மகேஸ்வரி, வெண்ணிலா.... பட்டியல் பெருசா இருக்கே. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதாக்கா எப்படி இருக்கீங்க? நீங்களே அரட்டை பார்த்து புதுசா இழை தொடங்கிட்டீங்களா?உங்க டீல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஹாய் தனா எப்படி இருக்கீங்க? வேலை இருக்கு. சும்மா ஒரு பதிவு போட்டுட்டு போடலாம்னு வந்தேன். பை பை. டைம் இருக்கப்போ வரேன்.

வனி எப்படி இருக்கிங்கா உங்களிடம் பேச ரொம்ப ஆசை ஆனால் தமிழ் டைப் பன்ன ரொம்ப கஷ்டமா இருக்குபா பல தடவை முயற்ச்சி பன்னி இருக்கிரென்

மேலும் சில பதிவுகள்