பட்டிமன்றம் 68: இக்காலத்தில் வாழ தேவை தன்னம்பிக்கையா? சாமர்த்தியமா?

அன்பு அறுசுவை தோழி/தோழர்களுக்கு,
வணக்கம். உங்கள் வாதங்களை நடுவராக இருந்து பார்க்க மிகுந்த ஆர்வத்துடன் பட்டிமன்றம் # 68ஐ தொடங்குகிறேன். இந்த முறை விவாதத்திற்கு நான் எடுத்துக் கொண்டுள்ள தலைப்பு,
" இக்காலத்தில் வாழ தேவை தன்னம்பிக்கையா? சாமர்த்தியமா? (அதாவது கஜினியா இல்லை தெனாலி/ பீர்பால் போன்று)"
இது உத்ரா அவர்கள் கொடுத்த தலைப்பு, அதற்கு உத்ராவிற்கு ஒரு சிறப்பு நன்றி :)

இந்த தலைப்பை பற்றி நான் நிறைய சொல்ல தேவை இல்லாமல் உத்ராவே தன் தலைப்போடு, நல்ல உதாரணங்களையும் சொல்லி இருக்காங்க. இன்றைய நிலையில்லாத,போட்டிகள் நிறைந்த உலகத்தில், எதிர் நீச்சல் போட்டு, நாம் வெற்றி பெற நமக்கு தேவை, கஜினியின் தன்னம்பிக்கையா அல்லது பீர்பாலின் சாமர்த்தியமா?
மேலோட்டமாக பார்த்தால் இரண்டுமே தேவை என்று தான் தோன்றும் :)

ஆனால் ஒரு விஷயத்தை, மேலோட்டமாக பார்க்காது, நுணுகி ஆராய்ந்தால், நமக்கு நேரடியாக புலனாகாமல் இருக்கும் பல விஷயங்களை தெரிந்துக் கொள்ளலாம்... அதே போல் இந்த கேள்விக்கு பதில் அறிந்துக் கொள்ள நடத்த படும் இந்த விவாதத்தின் இறுதியிலும், நமக்கு ஒரு தெளிவான விடை கிடைக்கும் என்று நம்புவோம் :)

இந்த பட்டி மன்றம் ஆக்கபூர்வமான விவாதமாக இருந்து, இந்த கேள்விக்கு பதில் மட்டும் அல்லாமல், ஒரு ஒன்று, இரண்டு நல்ல விஷயங்களையும் நாம் அனைவரும் அறிந்துக் கொள்ள வழி வகுத்தால், இந்த பட்டி மன்றத்திற்காக நாம் செலவு செய்யும் சில மணி துளிகளும் பயனுள்ளதாக மாறி விடும் என்று நம்புகிறேன்:) எனவே இந்த விவாதம் ஆக்கபூர்வமானதாக இருக்க உதவுங்கள் :)

பட்டிமன்ற விதிமுறைகள் எல்லாம் நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை :) நீங்கள் எல்லாம் விதிமுறைகளை தவறாமல் பின்பற்றும் நல்ல வலை-மக்கள் என்று தெரியும் :)

சரி நாம் விவாதத்தை தொடங்குவோமா?

பழைய பட்டி மன்றங்களில் நடந்த தீ பறக்கும் விவாதங்களையும், பக்கம் பக்கமாக பதிவு செய்யப்பட்ட பதிவுகளையும் பற்றி கேள்வி பட்டிருக்கிறேன் :) இதற்காகவே வால்-மார்ட்டில் இருந்து இன்று ஒரு மேஷரிங் டேப் வாங்கி வைத்திருக்கிறேன்... நம்முடைய இந்த பட்டி மன்றத்தில் யார் நீளமான (கருத்துள்ள) பதிவை பதிவு செய்கிறார்கள் என்று பார்ப்போம்... அவர்களுக்கு ஒரு (அன்அபிஷியல்) விருது காத்திருக்கிறது :)

மேலும் இன்னும் கொஞ்ச நேரத்தில் தொடங்க போகும் அரட்டையில், நம்முடைய கண்ணும் கருத்துமான இந்த பட்டிமன்ற இழை உள்ளே சென்று விட வாய்ப்பு இருக்கிறது... ஆனால் அவ்வாறு நிகழாமல், நம் பட்டிமன்ற இழையை காப்பாற்றி தாங்குபவருக்கும் ஒரு சிறப்பு விருது காத்திருக்கிறது :)

பழைய பட்டி மன்றங்களில் பங்கு பெற்றவராக இருந்தாலும், இப்போது பட்டி மன்றங்களில் கலந்துக் கொள்பவராக இருந்தாலும், உங்களின் பிஸியான வாழ்க்கையில் ஒரு அரை மணி நேரம் ஒதுக்கி, இந்த விவாதத்தில் கலந்துக் கொண்டு, ஒரு நல்ல முடிவிற்கு வர உதவி செய்யுங்கள்... அரை மணி நேரம் என்பது பெரிய விஷயம் இல்லை தானே?

இங்கே திங்கள் விடிகாலை ஆகி விட்டது, இதற்கு மேல் விழித்திருக்க இயலாது, நான் மீண்டும் இந்திய நேரம் மாலை ஆறு மணி அளவில் வருவதற்குள், உங்களின் தொடக்க விவாதங்களை பதிவு செய்யுங்கள்...

நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

வணக்கம்... :) வாழ்த்துக்கள் பல. நல்ல ஒரு தலைப்போடு அடி எடுத்து வெச்சிருக்கீங்க... வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தலைப்பை தந்த தோழி உத்ராக்கு பாராட்டுக்கள். :)

அணி.. சாமர்த்தியமே !!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர் வனிதா மேடம், நீங்க ஸ்டார்ட் பண்ணி வச்சுட்டீங்க இல்லை.. நம்ம பட்டி மன்றம் பிரமாண்ட வெற்றி தான் போங்க...

சரி நான் திரும்பி வரதுக்குள்ள, உங்க வாதங்களை மறக்காமல் பதிவு செஞ்சுடுங்க...

உங்கள் வாழ்த்துக்கு நன்றி :D

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

புது நடுவருக்கு வணக்கம்!! வாழ்த்துக்கள்!!

நடுவரே!! தன்னம்பிக்கையால் அடைய முடியாத வெற்றி எதுவுமே இல்லை. சதுரங்க காய்களை வேண்டுமானால் சாமர்த்தியமாய் நகர்த்தி வெற்றி பெறலாம். ஆனால் வாழ்க்கை இலக்கை ஒரே நேர்க்கோட்டில் வகுத்து, அதை நோக்கி மட்டுமே பயணிக்க சாமர்த்தியம் தேவையில்லை.

சாமர்த்தியம் சில நேரங்களில் சொதப்பல்கள் ஆகிவிடும். ஆனால் தன்னம்பிக்கை நேர்கொண்டு தடைகளை தகர்த்து, போகுமிடத்திற்கு கொண்டு சேர்க்கும்.

நடுவரே!! இன்னும் சுலபமாய் புரிய ஒன்று சொல்கிறேன். ஒரு மாணவன் ஆழமாய் புரிந்து படித்தால் வெற்றி பெறுவானா? சாமர்த்தியமாய் குறுக்கு வழிகளை கையாண்டால் வெற்றி பெறுவானா? அதுமட்டுமில்லாமல் ஆசிரியர் குறுக்கு வழி சொல்லி கொடுப்பதே புரிதல் சக்தி குறைந்த மாணவர்களுக்குதானே!!

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

அன்பு நடுவரே... வாழ்வில் தன் நம்பிக்கை யாருக்கு இல்லை??? அதெல்லாம் ரொம்ப ரேர் கேஸ்... இப்பலாம் நேற்று பிறந்த குழந்தை கூட ரொம்ப கான்ஃபிடண்ட்டா எல்லாம் செய்யறாங்க. இவங்க இருக்க உலகம் சரியான காம்படீஷனா இருக்குறதுக்கு இதுவும் முக்கிய காரணம். எல்லாரும் நல்ல திறமை, நல்ல கான்ஃபிடண்ட் ஆட்கள். ஆனா இவர்களில் ஜெயிக்கப்போவது யார்??? நிச்சயம் சாமர்த்தியமானவர் தான் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவ்ருக்கும், பட்டிமன்றத்தில் பங்கு கொள்ளும் மற்றும் பார்வையிடும் அனைவருக்கும் வணக்க்ம்.

முதன் முறையாக நடுவர் பதவி ஏற்றிருக்கும் உங்களை வரவேற்று, வாழ்த்துகிறோம்! நல் வரவு! தொடர்ந்து பல பட்டி மன்றங்களுக்கு தலைமை ஏற்று, எம் எல்லோரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த, வாழ்த்துக்கள்!

சரி, விஷயத்துக்கு வர்றேன், இந்தத் தலைப்பு எனக்கு ரொம்பவும் அவசியமான தலைப்பு. நீங்க சொன்ன மாதிரியே, எனக்கும் பல ஆண்டுகளாக இந்தக் கேள்வி மனசுல இருக்கு. இப்ப பட்டியில் ஏதாவது ஒரு பக்கம்தான் நான் வாதாடணும். அதனால என்னையே நான் கேள்வி கேட்டு, தன்னம்பிக்கையே என்ற பதில் கிடைத்து, இதோ வந்துட்டேன்.

யானையின் பலம் எதிலே தும்பிக்கையிலே
மனிதனோட பலம் எதிலே நம்பிக்கையிலே

சாமர்த்தியம் உயிர் வாழ்தலின் அவசியம்
தன்னம்பிக்கை மனிதனின் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம்.

என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை
எப்படியும் வாழ்ந்துடலாம் என்பது சாமர்த்தியம்

தன்னம்பிக்கை இருந்தால் அங்கே சாமர்த்தியம் தன்னால் வரும்.
சாமர்த்தியத்தை மட்டுமே நம்பும்போது, அங்கே கொஞ்ச நஞ்சம் இருக்கும் தன்னம்பிக்கையும் ஓடிப் போய் விடும்.

மீண்டும் வருகிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

பட்டிமன்றம்,
அன்பு நடுவருக்கு புதிதாக பதவி ஏற்றிருப்பதில் மகிழ்ச்சி,பட்டி சிறக்கவும் சிறப்பான தீர்ப்பை வழங்கவும் வாழ்த்துக்கள்......
நீண்ட நாட்களுக்கு பிறகு நான் வாதத்திற்கு வருகிறேன்.தொடர்ந்து வர முயற்சிக்கிறேன்.
சாமர்த்தியமென்பது நரியின் குணம், ஒருசில உயிர்களிடம் இருக்கும்.
நம்பிக்கை,தன்னம்பிக்கையென்பது சிறு எறும்பில் துவங்கி விழாமல் பறக்கும் பறவைகள்வரை வியாபித்திருக்கும்.....
மனித வாழ்க்கைக்கு எக்காலத்திலும் மிக அவசியம் தன்னம்பிக்கையே என வாதாடவுள்ளேன். மீண்டும் முடிந்தால் வருகிறேன்......

நடுவரே... சாமர்த்தியம் என்பதும் ஒரு திறமை தான்... அதுவும் வேணும். பேச்சு சாதுர்யம், செயலில் சாமர்த்தியம் இதெல்லாம் ஒரு குவாலிஃபிகேஷன். hard workerக்கும் smart workerக்கும் உள்ள வித்தியாசம் தான் தன் நம்பிக்கைக்கும், சாமர்த்தியத்துக்கும் உள்ள வித்தியாசம். இன்னைக்கு யாருக்கு மவுசு ஜாஸ்தின்னு இப்ப நான் சொல்லவே வேணாம் :)

எதிர் அணி மக்கள் சாமர்த்தியத்துக்கும் தந்திரத்துக்கும் வித்தியாசம் தெரியாம பேசுறாங்க... நீங்க ஏமாற்றி திரியும் நரியை பார்க்கறீங்க... நாங்க... முதலை வாயில் சிக்காம தன் புத்தி சாமர்த்தியத்தால் தப்பிய குரங்கை பார்க்கிறோம். விடாம முயற்சி பண்றேன்னு அங்க இருந்து ஓட டைரக்ட்டா முடிவெடுத்திருந்தா?? சண்டை பிடிச்சு ஜெயிக்க நினைச்சிருந்தா?? நிச்சயம் முடிஞ்சிருக்காது. வாய் சாமர்த்தியம் தான் அன்று குரங்கை காப்பாத்தியது.

சாமர்த்தியம் என்று ஒன்று தேவை இல்லை எனில் ஏங்க பீர்பால், தெனாலி ராமன் எல்லாம் பிரபலமானாங்க?? அவங்க சாமர்த்தியம் அவங்களுக்கும் மட்டும் உதவல... அவங்களை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது செய்தது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தன்னம்பிக்கையே,
நடுவரே,குரங்கு தப்பியதென்னவோ சாமர்த்தியத்தால் இருக்கலாம். ஆனால் அதை செயல்படுத்தினால் தப்பிக்க முடியுமா?முடியாதான்னு பயந்து நம்பிக்கையிழந்து சும்மா இருந்திருந்தா தப்பிக்க முடிந்திருக்குமா? ஆக சாமர்த்தியத்தையும் செயல்படுத்த தன்னம்பிக்கை வேண்டுமல்லவோ......!!மீண்டும் வருகிறேன்.

பட்டியை துவக்கி உங்கள் தடத்தை ஆழமாக பதிக்க போகும் நம் புத்தம் புது பட்டி நடுவரை வருக வருக என வரவேற்கிறேன்...

மற்றும் அருமையான தலைப்பு தந்த தோழி உத்ராவிர்க்கு என் மனமார்ந்த நன்றிகள்...

ஆனால் எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது எந்த கட்சியில் வாதிடுவது என்று...

கொஞ்சம் அவகாசம் குடுங்க... யோசிச்சிட்டு வரேன்...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

மேலும் சில பதிவுகள்