பகிர்ந்துகொள்ளுங்கள் தோழிகளே

பகிர்ந்துகொள்ளுங்கள் தோழிகளே ----- எபிளேட்டர் பயன்படுத்திய உங்கள் முதல் அனுபவம். எபிளேட்டர் பயன்படுதினால் வலிக்குமா? முடி கட்டையாக முளைக்குமா? அது எலக்ட்ட்ரனிக்ஸ் ல இயங்கக்கூடியதா (அ) பேட்டரியில் இயங்ககூடியதா? எந்த கம்பனி பிராண்டு சிறந்தது.? எத்தனை நாட்களில் முடி வளரும்? உங்கள் அனுபவங்களை எனக்காக பதிவிடுங்கள். முதல் முறை வாங்கலாம் நு நினைப்பதால் நீங்கள் பதிவிடும் உங்கள் அனுபவம் எனக்கு மற்றும் பலருக்கு உதவும்.

ஹாய் சுபன்யா, எபிலேட்டர் என்னிடம் இருப்பது BRAUN. ப்ளக்கில் மாட்டி பயன் படுத்தும் டைப்.
நிச்சயம் எபிலேட்டர் பயன்படுத்தும் போது வலி இருக்கும். ஆனால் தாங்கிக் கொள்ளும் அளவிலான வலிதான். புருவம் த்ரெட்டிங் பண்ணும் போது வலிக்கற மாதிரிதான் இருக்கும்.

முதல் முறை கொஞ்சம் வலி அதிகமா இருக்கும். அடுத்தடுத்த முறைகளில் நிச்சயம் வலி குறையும். முடி வளர்ச்சி ஹேர் ரிமூவர் பயன்படுத்தும் போது இருப்பதை விட குறைவாக இருக்கும். தொடர்ந்து பயன்படுத்தும் போது முடியின் திக்னெஸ் வரை குறைந்து விடும். வசதியானது. எளிதானது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி கவி.

Dreams Come True..

மேலும் சில பதிவுகள்