பேப்பர் பாக்ஸ்

தேதி: June 27, 2012

5
Average: 4.9 (7 votes)

 

கெட்டியான கலர் பேப்பர் அல்லது சார்ட் பேப்பர் அல்லது கெட்டியான மேகசின் அட்டைகள்

 

சார்ட் பேப்பர்களுக்கு கலர் செய்து வைக்கவும், நான்கு வகையான கலர் பேப்பர் கூட உபயோகிக்கலாம்.
ஒரு பேப்பர் எடுத்து படத்தில் காட்டி உள்ளது போல், "S" வடிவில் மடித்து கொள்ளவும்.
அதனை சரி சமமாக அழுத்தி மடித்தால், மடிப்பு கோடுகள் பேப்பரில் விழும் படி மடிக்கவும்.
பின்னர், அந்த பேப்பரை இரண்டாக மடிக்கவும், கலரான பக்கம் வெளியில் தெரியும் படி மடிக்கவும்
பேப்பரின் ஒரு பக்க முனையை முக்கோணம் மாதிரி மடித்து பார்க்கவும்.
மடித்த அந்த பேப்பரின் முனையை, படத்தில் காட்டி உள்ளபடி, இரண்டாவது மடிப்பிற்கு வைத்து மடிக்கவும்
அதே போல பேப்பரின் மறுபக்க முனையும், இரண்டாவது மடிப்பிற்கு வைத்து மடிக்கவும்.
பேப்பரை திருப்பி, அதே போல் ஒவ்வொரு முனையும் இரண்டாவது மடிப்பிற்கு சமப்படுத்தி மடிக்கவும்.
இப்போது, பேப்பரின் இரண்டு பக்கமும் படத்தில் உள்ளது போன்ற உருவத்திற்கு வந்து விடும்.
பேப்பரின் வெளியே நீட்டி கொண்டிருக்கும் பேப்பரை உள்நோக்கி மடித்து விடவும்.
பின்னர், ரெண்டு பக்கமும் நீட்டி கொண்டிருக்கும் பேப்பரை படத்தில் உள்ளது போல் வெளியே மடித்து வைக்கவும்
இரண்டு நிறங்களில் செய்து படத்தில் உள்ள பொசிஷனில் வைக்கவும்
படத்தில் உள்ளது போல, ஒரு கலரின் இரண்டு நுனிகளை, அடுத்த பேப்பரின் சந்து போல உள்ள பகுதில் நுழைக்கவும்.
கீழ் பகுதியை நுழைத்தது போலவே, மேல் பகுதியை நுழைக்கவும். அவ்வாறு செய்த பின், இரண்டு பெட்டிகள் தயார்.
இதே போல, எத்தனை கலரில் வேண்டுமானாலும் செய்து சேர்த்துக் கொண்டே போகலாம். நாம் தேர்ந்தெடுக்கும் அட்டை அல்லது பேப்பர் தடிமனை பொறுத்து அதனுள் வைக்கும் பொருட்களை தீர்மானிக்க முடியும். அந்த பேப்பர்களில் தேவைப்பட்டால், ஏதாவது வரைந்து மேலும் அழகாக்கலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வாவ் வாவ் வாவ்!!! வார்த்தையே இல்லைங்க... மடிப்பை எக்ஸ்ப்ளைன் பண்ண விதம் சூப்பர். அம்புலாம் விட்டிருக்கீங்க ;) படங்களும், பெயிண்டிங்கும் பட்டயை கிளப்புது. ரொம்ப அருமை. அந்த கடைசி படத்தை வெச்ச கண் வாங்காம பார்க்கறேன்... அத்தனை நுனுக்கமா பெயிண்ட்டிங் பண்ணிருக்கீங்க. அசத்திட்டீங்க சுகி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அழகா இருக்கு சுகி. இப்படி கடதாசி வேலைகள் எனக்கும் பிடிக்கும். நிச்சயம் ட்ரை பண்ணிப் பார்க்கிறேன்.

‍- இமா க்றிஸ்

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு நன்றி.

வனி - புகழ்ந்து தள்ளிட்ட மாதிரி இருக்கு, அடடே சந்தோசம் தாங்கல. வாழ்த்துக்கு ரொம்ப நன்றி வனி....

இமா - இது தான் முதல் முறையா நான் பண்றேன். உங்களுக்கும் பிடிக்குமா?கண்டிப்பா பண்ணி பாத்துட்டு சொல்லுங்க.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அன்பு சுகி,

இந்தக் குட்டிப் பொண்ணுகிட்ட இவ்வளவு திறமையா!!!

ச்ச்சும்மா அசத்தியிருக்கீங்க சுகி!

நுணுக்கமாக பெயிண்ட் பண்ணியிருக்கீங்க. அதே போல ஃபோல்டிங் முறைகளை அழகா, வரிசைப் படுத்தியிருக்கீங்க.

முதல் முறை செய்ததா, நம்பவே முடியல. அருமை அருமை!

பாராட்டுக்கள், சுகி!

அன்புடன்

சீதாலஷ்மி

உங்க எல்லா பாராட்டுக்கு ரொம்ப ரொம்ப நன்றி....முதல் முறையே தான்.....
//இந்தக் குட்டிப் பொண்ணுகிட்ட இவ்வளவு திறமையா!!!////---நானே குட்டி பொண்ணுன்னா, வனி என்ன சொல்ல...:-)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

நீங்க பாக்ஸ் எப்படி வேண்டுமானாலும் செய்துட்டு போங்க ;) அதுலே செய்திருக்கீங்க பாருங்க அந்த நுணுக்கமான டிசைன் அதுக்கே உங்களுக்கு ஒரு தனியா வாழ்த்து சொல்லணும். சரி போகட்டும் இப்போ பாக்ஸ் பத்தி.......அமர்க்களமா இருக்கு. அதானே அது என்ன அம்பு குறி? தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள் மனம் நிறைந்த பாராட்டுக்கள் (சுட்டுட்டேன் சீதாலக்ஷ்மி!).

//நானே குட்டி பொண்ணுன்னா, வனி என்ன சொல்ல...:-)// இது உலக மகா நடிப்புடா சாமி!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

சுகி,

இதற்கு பேர்தான் டூ இன் இல்லையில்லை த்ரீ இன் ஒன் போல?!! :) பேப்பர் பாக்ஸ் எப்படி செய்யனும்னு அழகா விளக்கமா சொல்லியிருக்கிங்க, அழகான பாக்ஸ் செய்திருக்கிங்க, கூடவே சூப்பரான பெயிண்டிங் வேலைப்பாடும் பண்ணி காண்பித்து இருக்கிங்க...

வாவ்... அருமை சுகி! பாராட்டுக்கள். தொடர்ந்து அசத்துங்க. வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

சுகி,
அழகான வேலைப்பாடு..தெளிவான படங்கள்,விளக்கம்..
கலக்குறீங்க !!!

என்றும் அன்புடன்,
கவிதா

சுகி,
ஆறாவது ஸ்டெப்பை மட்டும் கொஞ்சம் விளக்க முடியுமா?

"மடித்த அந்த பேப்பரின் முனையை, படத்தில் காட்டி உள்ளபடி, இரண்டாவது மடிப்பிற்கு வைத்து மடிக்கவும்"

இரண்டாவது மடிப்பு என்று எதை சொல்கிறீர்கள்???

நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

சுகி இப்போதைக்கு பார்க்க வாய்ப்பில்லை :) நானும் சுகி கொடுத்ததை பார்த்து இதை செய்து பார்த்தேன், அதனால் நானே சொல்றேன்... நம்ம சுகி கைவினை தானே ;)

முதல்ல இரண்டு மடிப்பு மடிச்சீங்க தானே பேப்பரை? அது இரண்டு கோடு இருக்கில்லயா... 6 ஆவது ஸ்டெப்பில் பார்த்தா இடது கை பக்கம் முதல் கோடுக்கும் முன்னாடியே உள்ள பகுதியை தான் அவங்க ஃபோல்ட் பண்றாங்க. அது இரண்டாவது கோடு (டார்க்கா மார்க் பண்ணி காட்டிருக்காங்க பாருங்க... வலது கை பக்கம்) டச் பண்ணும்படி மடிக்க சொல்லிருக்காங்க. அதாவது அந்த பேப்பர் ஃபோல்ட் பண்ணா அந்த கோட்டை பார்டரா வெச்சு மடிக்கனும். புரிஞ்சுதா???

மடிப்புன்னு சொன்னது அந்த வலது கை பக்கம் வரும் இரண்டாவது கோட்டை தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி வனிதா மேடம்..

அந்த மார்க் செய்த லைனை நான் கவனிக்கவில்லை.... செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்...

நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

சுகந்தி, உங்க பேப்பர் பாக்ஸ் செய்து விட்டேன்... ரொம்ப எளிதாக இருக்கிறது.. நான் தான் ரொம்ப யோசித்து குழம்பி விட்டேன்...
ஒரே ஒரு சின்ன சந்தேகம்... நாம் பயன்படுத்தும் பேப்பர் அல்லது சார்ட் square ஷேப்பில் இருக்க வேண்டுமா? Square ஷேப்பில் இல்லா விட்டால் அந்த பைனல் triangle ஷேப் சரியாக வராதது போல் தோன்றுகிறது...

நேரம் கிடைக்கும் போது பதில் சொல்லுங்கள்... மிக்க நன்றி...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ஹ்ம்ம்ம்.. எனக்கும் அந்த மடிப்பு ஸ்டெப் புரியவில்லை.. நானும் ரொம்ப யோசித்துக் குழப்புக் கொள்கிறேன் போலும்.. யோசித்து யோசித்து தலை வலியே வந்து விட்டது.. :( :P :).. வனி அவர்களின் விளக்கத்தைப் படித்தும் புரியவில்லை... சுகந்தி... நேரிலேயே வந்து கேட்டுக் கொள்ளலாம் என இருக்கிறேன் ஒகேவா?.. :)