காரட் வறுவல்

தேதி: August 19, 2006

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காரட் – அரை கிலோ
மஞ்சள் பொடி – ஒரு டீ ஸ்பூன்
மிளகாய் பொடி – ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – மூன்று டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – மூன்று கொத்து
வறுத்து பொடிக்க:
மல்லி விதை – அரை டீஸ்பூன்
சோம்பு – அரை டீஸ்பூன்


 

காரட்டைக் கழுவி சுமார் அரை செ.மீ கனமுள்ள அரைவட்ட துண்டுகளாக நறுக்கி உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து பிரட்டி இருபது நிமிடங்கள் வைக்கவும்.
சோம்பு, மல்லி விதையை வறுத்து நைசாக பொடிக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து, காரட்டைப் போட்டு அடிக்கடி கிளறி வதக்கவும்.
காரட் நன்கு வெந்ததும் மிளகாய் பொடி போட்டு பச்சை வாசனை போக வதக்கவும்.
பின் கறிவேப்பிலை, பொடித்து வைத்த பொடி சேர்த்து மேலும் மூன்று நிமிடம் வதக்கி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்