காராச்சேவு

தேதி: June 30, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.6 (14 votes)

 

இட்லி அரிசி - ஒரு படி
பூண்டு - முழுவதாக ஒன்று
வரமிளகாய் - 15 (காரத்திற்கேற்ப)
உப்பு - தேவைக்கு (ஒரு கைப்பிடி)
கடலைமாவு - கால் கிலோ
எண்ணெய் - ஒரு லிட்டர்


 

அரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து கிரைண்டரில் நன்கு கெட்டியாக அரைக்கவும்.
வரமிளகாய், பூண்டு, உப்பு சேர்த்து மிக்சியில் மைய அரைத்து வைக்கவும். (நன்கு மைய இருக்க வேண்டும் இல்லையென்றால் காராச்சேவு பிழியும் பொழுது வெடிக்கும்)
அரைத்த அரிசி மாவுடன் கடலை மாவு, அரைத்த மிளகாய் விழுது சேர்த்து நன்றாக பிசையவும். (மாவு கெட்டியாக இருக்க வேண்டும். உப்பு, காரம் சரிபார்த்துக் கொள்ளவும்)
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காராச்சேவு சாரணியில் மாவை வைத்து கையால் தேய்த்து விடவும்.
நன்கு வெந்து சிவந்ததும், கொதி அடங்கியதும் எடுக்கவும்.
சுவையான காராச்சேவு தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

How are you.your recipe and each step by step photos are very nice.keep it up.regards.g.gomathi.

காராசேவு நன்றாக இருக்கிறது ஒரு படி என்றால் எத்தனை கிலோ என்று ப்ளீஸ் சொல்லவும்

விசுவாசத்தினாலே எல்லாம் கூடும்

ஸ்வர்ணா... பார்க்க ஆசையா இருக்கு. எனக்கும் படிக்கு மாற்று அளவு வேண்டும்.

‍- இமா க்றிஸ்

சூப்பர். அண்ணனுக்கு ரொம்ப பிடிக்கும். செய்து பார்க்கிறேன். வாழ்த்துகள்.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

அன்பு ஸ்வர்ணா,

பாக்கறதுக்கே ரொம்ப ஆசையாக இருக்கு:0

காராச்சேவு ரொம்பப் பிடிக்கும். இந்த மாதிரி பூண்டு, மிளகாய் சேர்த்தது - தயிர் சாதத்துக்கு தொட்டுக்க சூப்பர் காம்பினேஷன்.

வெறும் கடலை மாவில்(அல்லது அரிசி மாவு கொஞ்சமா சேப்பாங்களான்னு சரியாத் தெரியலை) காரமில்லாமல், அம்மா செய்வாங்க. எண்ணெயில் கடலை மாவு வாசனையில் சூப்பராக இருக்கும்.

ஆனா, இதுவரைக்கும் நான் செய்ததே இல்லை, இந்தக் கரண்டியில் அழுத்தித் தேய்க்க பயம்:( அம்மா வீட்டில் நீள் சதுரமாக, நீளமான இரும்புப் பிடியுடன் இந்த காராச்சேவ் தட்டு இருந்தது. எண்ணெய் சட்டியின் மேல் அதைப் பிடித்து, தேய்த்து எடுப்பாங்க. நான் முயற்சி செய்ததே இல்லை.

இந்தக் கரண்டி எங்கே கிடைக்கும் ஸ்வர்ணா? சின்னதாக ஒன்று வாங்கி, ட்ரை பண்ணிப் பார்க்கிறேன்.

பாராட்டுக்கள் ஸ்வர்ணா

அன்புடன்

சீதாலஷ்மி

கலக்குறீங்க அக்கா .....சூப்பரான குறிப்பு .உங்களது வெயில்(அரிசி) முறுக்கும் மிகவும் அருமை.நிச்சயமாக ட்ரை செய்கிறேன்.படங்கள் வழக்கம் போல அருமை வாழ்த்துக்கள் !!!

ஹாய் ஸ்வர்,

ரொம்ப நாள் கழிச்சு,ஒரு அசத்தலான குறிப்போட வந்திருக்கீங்க.

காராச்சேவு,பார்க்கும் போதே ஆசையைத் தூண்டுது ஸ்வர்.

படங்கள் வழக்கம் போலவே அழகோ அழகு,குறிப்பா கடைசி படம் கொள்ளை

அழகு.தங்கப்பெண்ணிற்கு வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.

அன்புடன்
நித்திலா

குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் குழுவிற்க்கு நன்றி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கோமதி நான் ரொம்ப நல்லாருக்கேன் நீங்க நலமா?

மிக்க நன்றி கோமதி..:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

க்ரேஸ் மிக்க நன்றி.. இங்க நான் 1 படி என குறிப்பிட்டு இருப்பது முக்கால் கிலோ அளவு,நீங்க முக்கால் கிலோ அரிசிக்கு கால் கிலோ கடலை மாவு சேர்த்து செய்ங்க சரியா இருக்கு :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இமாம்மா படிக்கு மாற்று அளவு சொல்லிட்டேன் மா மேலே பார்த்துக்கோங்க :)
செய்துட்டு எப்படி இருந்ததுன்னு கண்டிப்பா வந்து சொல்லுங்க :))

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மஞ்சு மிக்க நன்றி... கண்டிப்பா செய்து கொடுங்க அண்ணாவுக்கு :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சீதாம்மா வருகைக்கும் பாராட்டிற்க்கும் மிக்க நன்றிங்கம்மா...

அம்மா நீங்க சொல்வது போல கடலைமாவில் பச்சரிசி மாவு சேர்த்தும் செய்வாங்கம்மா ஆனால் அது அழுத்தமாக இருக்கும் இந்த மாதிரி புழுங்கல் அரிசியில் செய்தால் சுவையும், நன்கு பொறபொறப்பாகவும் இருக்கும்.

ஆரம்பத்துல நானும் தேய்க்க பயந்தேன் ஆனா செய்ய செய்ய பழகிடுச்சி :)

இந்த கரண்டி எல்லா பாத்திரகடைகளிலும் கிடைக்கும்ங்கம்மா இரும்பு ஜாமான் செக்சன்ல பாருங்க இருக்கும்.
இரும்பில் வாங்கினால்தான் நல்லது வளையாமல் இருக்கும் இப்பலாம் அலுமினியத்திலும் வந்திருக்கு அதுவும் அழுத்தமா இருப்பதாக பார்த்து வாங்கிக்கலாம்.
நீளமான கைப்பிடியுடன் இருக்கும்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

vibgi மிக்க நன்றி..ட்ரை பன்னிட்டு சொல்லுங்க :)

//உங்களது வெயில்(அரிசி) முறுக்கும் மிகவும் அருமை.// மீண்டும் நன்றி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் நித்தி வருகைக்கும் வாழ்த்திற்க்கும்,பாராட்டிற்க்கும் மிக்க நன்றிப்பா.அம்மாட்ட செய்ய சொல்லி சாப்பிட்டு பார் :))

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சூப்பர் குறிப்பு. இதெல்லாம் அம்மா செய்வாங்க, நான் செய்ததில்லை. இப்ப காட்டிட்டீங்க தானே அவசியம் செய்துடுறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஸ்வர்ணா,
பலகாரம் செய்யணும்னா அது நீங்க தான்..
செம்ம செம குறிப்பு..
எனக்கு சீவல் சாரணிக்கே மாற்று வேணும்..முறுக்கு அச்சில் வார்க்கலமா?

என்றும் அன்புடன்,
கவிதா

எனக்கு இது ரொம்ப புடிக்கும் ஸ்வர்ணா ஆனால் இந்த கரண்டி வீட்டில் இல்லை இந்த கரண்டி வாங்கிட்டு ட்ரை பண்றேன் படங்கள் ரொம்ப நல்லா இருக்கு

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

வனி மிக்க நன்றி,கண்டிப்பா செய்து பாருங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கவி அச்சச்சோ எனக்கு தெரிஞ்ச கொஞ்ச சமையல அனுப்பிட்டு இருக்கேன் பா நீங்க என்னடான்னா இப்படி சொல்லிட்டீங்களே உங்களுக்கு தான் எவ்ளோ பெரிய மனசு :) மிக்க நன்றிப்பா.

முறுக்கு அச்சில் வார்க்கலாம் பா அப்படியே நேராக எண்ணெய் சட்டியில் நீளமாக வார்த்து எடுத்தபின் சின்னதா ஒடித்து விட்டுக்கலாம்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தனா மிக்க நன்றிப்பா,கரண்டி வாங்கி ட்ரை பன்னுங்க.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

nice

சரோஜினி மிக்க நன்றி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.