வனிதா கூப்பிடுறேன்... அரட்டையடிக்கவாது வாங்க!!!

அன்பு தோழிகளே... எங்க போனீங்க எல்லாரும்?? இவ்வளவு அமைதியா இருந்தா நல்லாவா இருக்கு? வாங்க அரட்டையடிக்க... திங்கள் கிழமையும் அதுவுமா தூங்க கூடாது. ;)

ஆங்கிலம் தமிங்கிலம்... வனிதா இழையில் கூடாது. அது தான் டீல்... 1 வரி அடிக்க 1 மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை... நான் காத்திருக்கேன்... மெதுவா தமிழில் தட்டிகிட்டு வாங்க. அதே அதே அதே ரூல்ஸ் தான் :)

கனிமொழி,
தயவு செய்து என்னை அக்கான்னு மட்டும் கூப்பிடாதீங்க :) ப்ளீஸ்... ப்ளீஸ் ... ப்ளீஸ்... :)

நல்ல சுவாரசியமான வேலை உங்களுடையது கனிமொழி.... சாரு நிவேதிதா பெயரை வைத்து, முன்பெல்லாம் நான் அவர் ஒரு பெண் என்று நினைத்திருந்தேன்... சமீபத்தில் விஜய் டி வி நீயா நானாவில் அவர் வந்து பேசிய போது தான் உண்மை அறிந்துக் கொண்டேன் :)

முன்பெல்லாம் ஜெயகாந்தன், சு சமுத்திரம் போன்ற சற்றே seriousஆன புத்தகங்கள் படிப்பது உண்டு.. இப்போதெல்லாம் என் வாழ்க்கையே serious ஆக தான் இருக்கிறது அப்புறம் புத்தகத்தில் வேறு எதற்கு அது என்று பொதுவாக happy ending இருக்கும் கதைகள் தான் படிப்பது...
ஒருவகையில் escapism தான் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

படிப்பது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்...அதற்காக எப்பவும் நேரம் ஒதுக்கிவிடுவேன்...

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

கல்ப்ஸ் வந்தாச்சா. இவ்வளவு நாள் கல்ப்ஸ் பேரை பார்க்கம ஏதோ மிஸ்ஸிங் இப்ப சந்தோசம்.தமிழ் பதிவு பார்த்ததும் வேற்ரேவதினு நினைக்காதுங்க.உங்க மொபைல் அம்மாதான். ஹி ஹிஹி

Be simple be sample

Vanitha akka... Engala kooptuttu neenga amaidhiya irundha epdi? Viyalakkizhamayum adhuvuma thoonga padadhoooo... vaanga vaanga...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

சமீஹா,

இங்கே ரூல்ஸ் என்ன வென்றால் பதிவுகள் தமிழிலில் இருக்க வேண்டும் என்பது மட்டுமே.

கீழே தமிழ் எழுத்துதவிக்கு போய் அதில் தமிங்கிலத்தில் அடிக்க கொடுத்திருக்கும் பெட்டியில் தட்டுங்க... கூடவே அந்த பதிவு கீழே தமிழில் மாறி வரும்... அதை காபி செய்து பதிவிட வேண்டிய இடத்தில் தமிழில் பதிவிடலாம்.

உதாரணம்... நீங்க மேலே இருக்கும் பெட்டியில் “vaangka" என்று தட்டினால் கீழே “வாங்க” என்று வரும். எந்த தமிழ் எழுத்துக்கு எந்த ஆங்கில எழுத்து பயன்படுத்தனும் என்றும் மேலே அட்டவனை இருக்கு பாருங்க.

இனி தமிழில் ஜாலியா அரட்டையை ஆரம்பிங்க...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

அனு நான் இங்க 3 வருசமா இருக்கேன். இங்க பொழுது போறது கஷ்டம் தான் பக்கத்துல பேச யாரும் இல்லப்பா. பாப்பா சிஸ்டம் வச்சி தான் நேரம் போகுது.உங்கள பத்தி சொல்லுங்க.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

அனு இங்க வாங்க பேசலாம்

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

மகா... வரும்போதே கம்ப்ளைண்ட்டா??? ;) நீங்க பேசி உங்ககிட்ட யார் பேசலன்னு சொல்லுங்க பென்ச்ல ஏத்திடலாம். ஹஹஹா. எல்லாரும் புது முகமா வரும் போது அரட்டையில் தான் வரீங்க, சீனியர்ஸ் இதை எல்லாம் தாண்டி போயிட்டாங்க... இதெல்லாம் பார்ப்பதே சிரமம் இப்போ. கூடவே வரும்போது எல்லாரும் ஆங்கில பதிவோட வரீங்க, இதை படிக்கும் பொறுமை யாருக்குமே இருப்பதில்லை. இதெல்லாம் தான் யாரும் பேசாததுக்கு காரணம். இன்னும் கொஞ்ச நாளில் நீங்களாம் தமிழில் தட்ட பழகி, அரட்டை மட்டுமல்லாமல் மற்ற இழைகளில் காண்ட்ரிபியூட் பண்ணவும் ஆரம்பிச்சுட்டீங்கன்னா எல்லாரும் பேசுவாங்க. ஓக்கே???

நித்யா... நானும் A4ல தான் பண்ணிருக்கேன். திக் பேப்பர் வேணும்னு இல்லை. டூத் பிக்கின் பின் பக்கத்தை பயன்படுத்துங்க, கிழியாது. பயப்படாம செய்யுங்க. பிந்துக்கு கொடுத்த விளக்கம் பாருங்க அதை எடுக்க... ஈஸியா புரியும்னு நினைக்கிறேன். :)

கனி... ஒன்னும் பிரெச்சனை இல்லை. மேற்கொண்டு அஙக் பேச கூடாது என்பதால் தான் பதிவிட்டேன். :)

தனா... வாங்க... ஆமாம் கொஞ்சம் கத்துகிட்டேன், ஊர் சுற்றினதுல. :)

கல்ப்ஸ்... எப்ப வந்தீங்க? இந்தியா வந்துட்டு திரும்ப காங்கோ போயிட்டீங்களா? இல்ல இந்தியா வந்துட்டேன்னு சொல்றீங்களா?? புரியல எனக்கு :) எப்படியோ... இனி வருவீங்க தானே?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hi jinu how r u????????nan nenachchi kitean nega eannea maranthuttegannu.........ippo unga msg paththathum romba santhosama irukku...ticket pottachchea???

என்னங்க வனிதா, உங்களுக்கு iPAD அனுப்புறதா இல்லை Mac Air அனுப்புறதான்னு இளவரசி மேடம் கிட்ட ஐடியா கேட்க தான் லாகின் செய்தேன்... இப்படி ஏமாத்திட்டீங்களே... :)

சரி அடுத்த தடவை மறக்காமல் லேப்டாப்பை நல்லா கிழே போடுங்க :) All the best :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மேலும் சில பதிவுகள்